Homeசெய்திகள்கோவில் குளத்தில் மூழ்கி 5 பேர் பலி- முதல்வர் நிதியுதவி

கோவில் குளத்தில் மூழ்கி 5 பேர் பலி- முதல்வர் நிதியுதவி

-

- Advertisement -

கோவில் குளத்தில் மூழ்கி 5 பேர் பலி- முதல்வர் நிதியுதவி

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அருகே கோயில் திருவிழாவின்போது குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Image

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த மூவரசம்பட்டு கிராமத்தில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சுவாமியை குளத்தில் இறக்கி குளிப்பாட்டும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. தீர்த்தவாரி நிகழ்ச்சியில் குளத்தில் அர்ச்சகர் ஒருவர் மூழ்கிய நிலையில் அவரைக் காப்பாற்ற முயன்ற அர்ச்சகர்கள் நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இறந்த அனைவரும் 22 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்.

we-r-hiring

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

 

 

MUST READ