நடிகர் சூரி, ‘மண்டாடி’ படம் குறித்து பேசி உள்ளார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சூரி, விடுதலை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து இவர் அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதன்படி தற்போது மாமன் எனும் திரைப்படத்தை கைவசம் வைத்திருக்கிறார். இது தவிர வெற்றிமாறனின் உதவி இயக்குனர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் மண்டாடி எனும் திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் சூரியுடன் இணைந்து சத்யராஜ், மஹிமா நம்பியார் மற்றும் பலர் நடிக்கின்றனர். ஆர் எஸ் இன்போடைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். படகு பந்தயம் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் சூரி வேறொரு பரிமாணத்தில் நடிக்கிறார். இது தொடர்பாக இரண்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு இருந்தது. அந்த போஸ்டரை பார்க்கும்போது இந்த படம் ஸ்ட்ராங்கான கன்டென்ட் உள்ள படம் போல் தெரிகிறது.
“#Mandaadi Film was suggested by VetriMaaran sir🔥. It’s about Boat racing⛵. Even I don’t know that the game were exists till now. Like how Jallikattu happens in Floor, this happens in sea🌊. I’m happy to bring this unexplored game to the world”
– #Soori pic.twitter.com/S9mE0ryouB— AmuthaBharathi (@CinemaWithAB) April 19, 2025

இந்நிலையில் நடிகர் சூரி இப்படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதன்படி அவர், “மண்டாடி படத்தை வெற்றிமாறன் தான் பரிந்துரைத்தார். இது படகு பந்தயம் தொடர்பான படம். இதுவரை இந்த விளையாட்டு இருந்ததா என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால் இது ஜல்லிக்கட்டு ப்ளோரில் நடப்பது போன்று கடலில் நடக்க கூடியது.வெளி உலகத்திற்கு தெரியாத விளையாட்டு கொண்டு வருவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


