இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், ரெட்ரோ திரைக்கதை மணிரத்தினத்தின் படம் போல் இருக்கும் என கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பீட்சா, ஜிகர்தண்டா, பேட்ட, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் கார்த்திக் சுப்பராஜ். தற்போது இவர் ரெட்ரோ எனும் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் ஜெயராம், பிரகாஷ்ராஜ், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சூர்யாவும், கார்த்திக் சுப்பராஜும் இந்த படத்தை தயாரித்திருக்கும் நிலையில் சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைத்திருக்கிறார். வருகின்ற மே மாதம் 1ஆம் தேதி திரைக்கு வரும் முழு வீச்சில் தயாராகி வரும் இந்த படத்தின் அடுத்தடுத்த பாடல்களும், ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இது தவிர இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய கார்த்திக் சுப்பராஜ், ரெட்ரோ படத்தின் திரைக்கதை குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர், “ரெட்ரோ படத்தின் திரைக்கதை வடிவம் 90களில் நடப்பது போன்று அமைக்கப்பட்டிருக்கிறது. தொழில் நுட்ப ரீதியாக அல்ல. ஆனால் கதை சொல்லும் விதம்தான் அது. எடுத்துக்காட்டாக இந்த படத்தின் திரைக்கதை வடிவம் மணிரத்னம் சாரின் ‘தளபதி’ போல் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.