தென்னிந்திய திரையுலகில் 80 – 90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹீரா. அதாவது ஹீரா கடந்த 1991 ஆம் ஆண்டு முரளி நடிப்பில் வெளியான இதயம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதேசமயம் மாடலிங்கிலும் கவனம் செலுத்திய இவர் பல தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அஜித்துடன் இணைந்து காதல் கோட்டை, தொடரும் ஆகிய படங்களில் நடித்திருந்தார். அந்த சமயத்தில் அஜித்துக்கும், ஹீராவிற்கும் காதல் மலர்ந்தது. ஆனால் அஜித்தின் குடும்பத்தினர் ஹீராவை ஏற்றுக் கொள்ளாத நிலையில் இருவரும் பிரிந்துவிட்டனர்.
இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் கடந்த ஜனவரி மாதம் நடிகை ஹீரா எனது சமூக வலைதள பக்கத்தில், ” இளம் வயதில் நான் காதலித்த ஒரு நடிகர் ஒரே நாள் இரவில் என் வாழ்வின் மிக கொடுமையான மனிதராக மாறிவிட்டார். இளம் வயதில் தன்மீது திட்டமிட்டு பழி சுமத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டார். என்னை போதைக்கு அடிமையானவள், ஏமாற்றுக்காரி என்று அசிங்கப்படுத்தினார். மன்னிக்க முடியாத வகையில் பல தனிப்பட்ட தாக்குதல்கள் நடத்தினார். இதுபோன்ற பல விஷயங்கள் என்னை மன வேதனைக்கு ஆளாக்கியது. எனக்கு தற்கொலை எண்ணத்தையும் தூண்டியது” என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றினை வெளியிட்டு இருந்தார்.
ஆனால் இந்த பதிவில் நடிகர் அஜித்தின் பெயர் எங்கேயுமே குறிப்பிடப்படவில்லை. ஆனால் நேற்று (ஏப்ரல் 28) நடிகர் அஜித் பத்ம பூஷன் விருது வாங்கும் சமயத்தில் ஹீரா வெளியிட்ட இந்த பதிவு வைரலாகி வந்தது. இது அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. அதாவது வேண்டுமென்றே அஜித்தின் நற்பெயரை கெடுக்கும் வகையில் இந்த செய்தியை வைரலாக்கியுள்ளனர் என்று அஜித் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
- Advertisement -