STR 49 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் சிம்பு, தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற ஜூன் மாதம் 5ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதைத்தொடர்ந்து பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் தனது 49வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார் சிம்பு. இந்தப் படத்திற்கு தற்காலிகமாக STR 49 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாய் அபியங்கர் இதற்கு இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது தவிர நடிகை கயடு லோஹர் இப்படத்தின் கதாநாயகியாக நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவ்வாறு இப்படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் சமூக வலைதளங்களில் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பூஜை நாளை (மே 3) நடைபெற இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.
மேலும் இந்த படமானது கல்லூரி சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகும் எனவும் இதன் படப்பிடிப்பை 2025 ஜூன் மாதத்தில் தொடங்கும் எனவும் தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.