சசிகுமார் நடிப்பில் உருவாகும் ஃப்ரீடம் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வரும் சசிகுமார் தற்போது மை லார்ட் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அதே சமயம் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று நாளுக்கு நாள் வசூலையும் வாரி குவித்து வருகிறது. இதற்கிடையில் ஃப்ரீடம் எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார் சசிகுமார். இந்த படத்தில் சசிகுமார் உடன் இணைந்து லிஜோமோல் ஜோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை சத்ய சிவா எழுதி, இயக்கி உள்ளார். இதனை விஜய கணபதி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிப்ரான் இதற்கு இசையமைத்துள்ளார். உதயகுமார் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் இந்த படமானது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் வருகின்ற மே 9ஆம் தேதி இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இது இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


