பென்ஸ் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.தமிழ் சினிமாவில் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய அடுத்தடுத்த வெற்றி படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது தயாரிப்பாளராகவும் மாறி உள்ள நிலையில், பென்ஸ் எனும் திரைப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ், தி ரூட் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கிறார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.
ரெமோ படத்தின் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஏற்கனவே வெளியாகி இப்படம் லோகேஷ் கனகராஜின் எல்சியு – வின் கீழ் இணைந்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
எனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதேசமயம் இந்த படத்தில் மாதவன், நிவின் பாலி, பிரியங்கா மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று (மே 12) பூஜையுடன் தொடங்கியுள்ளது.
இந்த நிகழ்வில் ராகவா லாரன்ஸ், லோகேஷ், சாய் அபியங்கர், பாக்யராஜ் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இனிவரும் நாட்களில் இப்படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -