மாமன் படம் குறித்த நடிகர் சூரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட சூரி, தற்போது ஹீரோவாகவும் முத்திரை பதித்துள்ளார். அந்த வகையில் அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் சூரி. இவரது நடிப்பில் தற்போது மாமன் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை விலங்கு வெப் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார். இதில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து ராஜ்கிரண், பாபா பாஸ்கர், சுவாசிகா, பால சரவணன், கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க ஹேசம் அப்துல் வாகப் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தினேஷ் புருஷோத்தமன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். தாய்மாமன் – மருமகன் ஆகிய இருவருக்குமான பாசப்பிணைப்பை மையமாக வைத்து குடும்ப பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் இன்று (மே 16) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்திருக்கும் இந்த படத்தை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் திரையரங்கிற்கு வருகை தருகின்றனர். அதே சமயம் படம் தொடர்பான தங்களின் கருத்துக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சூரி, தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உறவுகள் வாழ்வின் வேருகள், அதை நாம் பெருமையுடன் கொண்டாடுவோம்.
உணர்வுகள் நம்மை ஒன்றிணைக்கும் பாலம், அதை என்றும் மதிப்போம்.#Maaman இன்று முதல் உங்கள் அன்னையாருக்கும் எங்கள் இல்லத்தில் ஒரு சிறப்பான இடம்! 💐🙏😍❤️#MaamanFromToday pic.twitter.com/qNCEJjjCv0— Actor Soori (@sooriofficial) May 16, 2025

அந்த வீடியோவில், “மாமன் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. அன்னைக்கு, இன்னைக்கு, என்னைக்கும் நம்ம மறக்க முடியாத ஒரு உறவை மீண்டும் இந்த படம் நினைவுக்கு கொண்டு வரும். எல்லாருக்கும் பிடித்த படமாக மாமன் திரைப்படம் இருக்கும் என நம்புகிறேன். அனைவரும் திரையரங்கிற்கு சென்று பாருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “உறவுகள் வாழ்வின் வேர்கள், அதை நாம் பெருமையுடன் கொண்டாடுவோம். உணர்வுகள் நம்மை ஒன்றிணைக்கும் பாலம், அதை என்றும் மதிப்போம்” என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றினையும் வெளியிட்டுள்ளார்.