spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாபாகிஸ்தானிலிருந்து வீசப்பட்ட குண்டுகள்… பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கை…

பாகிஸ்தானிலிருந்து வீசப்பட்ட குண்டுகள்… பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கை…

-

- Advertisement -

பாகிஸ்தானிலிருந்து வீசப்பட்ட 42 வெடிக்காத குண்டுகளை பாதுகாப்பு படையினர் செயலிழக்க செய்தனா். பின்பு அதனை முற்றிலுமாக அழித்தனர்.பாகிஸ்தானிலிருந்து வீசப்பட்ட குண்டுகள்… பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கை…ஜம்மு – காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே, பாகிஸ்தான் ராணுவத்தால் கடந்த காலங்களில் வீசப்பட்ட 42 வெடிக்காத பீரங்கி குண்டுகள் கண்டறியப்பட்டு பாதுகாப்பாக செயலிழக்கச் செய்யப்பட்டன. இது குறித்து பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகையில், “பூஞ்ச் மற்றும் பாலகோட் செக்டார்களில் உள்ள கிராமங்களில் சிக்கிய 42 வெடிக்காத குண்டுகளை நேற்று இந்திய ராணுவம் மற்றும் காவல் துறையினரின் வெடிகுண்டு நிபுணர் குழுவால் அழிக்கப்பட்டன.

இந்த வெடிக்காத குண்டுகள், எல்லை தாண்டிய ஷெல் தாக்குதல்களின் போது வீசப்பட்டவை. அவை பொதுமக்களின் உயிருக்கும் உடமைக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்தது. உள்ளூர்வாசிகள் அளித்த தகவலின் பேரில், பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு இந்த குண்டுகளைக் கண்டுபிடித்தனர். பின்னர், அவை மக்கள் நடமாட்டம் இல்லாத பாதுகாப்பான பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, உரிய பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி வெடிக்கச் செய்து அழிக்கப்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்” என்று கூறின.

யூடியூபர் மரியா ஜோஸ் சுட்டுக் கொலை! போலீசார் தீவிர விசாரணை…

we-r-hiring

MUST READ