spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநடிகர் ரவியின் இன்ஸ்டா பதிவு இணையத்தில் வைரல்!

நடிகர் ரவியின் இன்ஸ்டா பதிவு இணையத்தில் வைரல்!

-

- Advertisement -

நடிகர் ரவியின் இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.நடிகர் ரவியின் இன்ஸ்டா பதிவு இணையத்தில் வைரல்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரவி. இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இது தவிர கராத்தே பாபு எனும் திரைப்படத்தையும் கைவசம் வைத்துள்ளார் ரவி. இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம், ரவி – ஆரத்தியின் விவாகரத்து விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் பூகம்பமாக வெடித்துக் கொண்டிருக்கிறது. ரவி – ஆர்த்தி – சுஜாதா விஜயகுமார் ஆகியோர் மாறி மாறி அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே ரவி – ஆர்த்தி விவாகரத்திற்கு பாடகி கெனிஷா தான் காரணம் என செய்திகள் பரவி வந்த நிலையில், சமீபத்தில் ஆர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

 

View this post on Instagram

 

A post shared by Ravi Mohan (@iam_ravimohan)

we-r-hiring

அதைத் தொடர்ந்து இன்று (மே 21) விசாரணைக்கு வந்த ரவி – ஆர்த்தியின் விவாகரத்து வழக்கில், ரவி விவாகரத்து வேண்டும் என்பதற்கான விளக்கத்தை கொடுக்க, ஆர்த்தி தரப்பில், ரவியிடம் இருந்து மாதம் ரூ. 40 லட்சம் ஜீவனாம்சம் வேண்டும் என மனதாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “செய்திகள் வருகின்றன” என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ