spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவசூலை வாரி குவிக்கும் 'டூரிஸ்ட் ஃபேமிலி'.... புதிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

வசூலை வாரி குவிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’…. புதிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

-

- Advertisement -

டூரிஸ்ட் ஃபேமிலி படம் குறித்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.வசூலை வாரி குவிக்கும் 'டூரிஸ்ட் ஃபேமிலி'.... புதிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

மணிகண்டன் நடிப்பில் வெளியான குட் நைட், லவ்வர் ஆகிய படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த மே 1ஆம் தேதி டூரிஸ்ட் ஃபேமிலி எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவீந்த் இயக்கியிருந்தார். இதில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்க சிம்ரன் கதாநாயகியாக நடித்திருந்தார். இவர்களுடன் இணைந்து எம்.எஸ். பாஸ்கர், யோகி பாபு, ரமேஷ் திலக், மிதுன், கமலேஷ், யோகலட்சுமி ஆகியோரும் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இதற்கு இசையமைத்திருந்தார். அரவிந்த் விஸ்வநாதன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருந்தார். பொருளாதார கஷ்டத்தினால் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் ஒரு குடும்பம் பல சிக்கல்களைக் கடந்து புதிய வாழ்க்கையை எப்படி தொடங்குகிறது என்பதை நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் கொடுத்திருந்தார் இயக்குனர் அபிஷன். வசூலை வாரி குவிக்கும் 'டூரிஸ்ட் ஃபேமிலி'.... புதிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!இந்த படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளையும் பெற்று வருகிறது. அதே சமயம் இந்த படத்திற்காக கூடுதல் திரையரங்குகளும் ஒதுக்கப்பட்ட நிலையில் நாளுக்கு நாள் ரசிகர்களின் ஆதரவும், வசூலும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இப்படம் தற்போது வரை உலக அளவில் ரூ.75 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

MUST READ