மோகன்லால் – ஷோபனாவின் துடரும் பட ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாள திரை உலகில் நடிப்பு ஜாம்பவானாக வலம் வரும் மோகன்லால் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் கடந்த மார்ச் மாதம் எம்புரான் திரைப்படம் வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று தந்தாலும் நல்ல வசூலை பெற்றது. அதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி மோகன்லாலின் துடரும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை தருண் மூர்த்தி இயக்கியிருந்தார். இதில் மோகன்லாலுடன் இணைந்து ஷோபனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை ரெஜபுத்ரா விஷுவல் மீடியா நிறுவனம் தயாரித்திருந்த நிலையில் ஜேக்ஸ் பிஜாய் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். சஜி குமார் ஒளிப்பதிவு செய்து இருந்தார். எமோஷனல் கலந்த குடும்ப படமாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. அதே சமயம் இந்த படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு கடந்த மே 9ஆம் தேதி திரையிடப்பட்டது. இந்நிலையில் இப்படம் வருகின்றமே 30ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் ஜியோ ஹாட் ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.