spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபெரிய அளவில் பேசப்பட்ட அஜித்தின் தீண்டாமை விவகாரம்.... அவர் அப்படித்தான்..... உண்மையை போட்டுடைத்த யோகி பாபு!

பெரிய அளவில் பேசப்பட்ட அஜித்தின் தீண்டாமை விவகாரம்…. அவர் அப்படித்தான்….. உண்மையை போட்டுடைத்த யோகி பாபு!

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவரது நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.பெரிய அளவில் பேசப்பட்ட அஜித்தின் தீண்டாமை விவகாரம்.... அவர் அப்படித்தான்..... உண்மையை போட்டுடைத்த யோகி பாபு! இதைத்தொடர்ந்து நடிகர் அஜித் தனது 64 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதற்கிடையில் கார் பந்தயத்திலும் கவனம் செலுத்தி வருகிறார் அஜித். மேலும் அஜித் சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் வெளியில் தெரியாத வகையில் பலருக்கும் பல உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் தான் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வலிமை படப்பிடிப்பின் போது நடிகர் அஜித், யோகி பாபுவை தன்னை தொடக்கூடாது என்று கூறியதாகவும், இதனை யோகி பாபுவே தங்களிடம் சொன்னதாகவும் வலைப்பேச்சு பிஸ்மி கூறியிருந்தார். அந்த சமயத்தில் இந்த தகவல் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. பெரிய அளவில் பேசப்பட்ட அஜித்தின் தீண்டாமை விவகாரம்.... அவர் அப்படித்தான்..... உண்மையை போட்டுடைத்த யோகி பாபு!ஆனால் இது தொடர்பாக யோகி பாபு வெளிப்படையாக எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் யோகி பாபு, அஜித் குறித்து பேசி உள்ளார். அதில் யோகி பாபுவிடம் ஏற்கனவே அஜித்துக்கும் உங்களுக்கும் சிறிய பிரச்சனை இருப்பதாக கேள்விப்பட்டோம். ஆனால் குட் பேட் அக்லி படத்தின் போது நீங்கள் இருவரும் நெருக்கமாக இருந்தீர்கள்? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு யோகி பாபு, “அதெல்லாம் சும்மா. நான் வீரம் படத்தில் இருந்து அவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதற்கு முன்பாகவும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர் நம்மை கட்டிப்பிடித்து அவருடைய மூச்சு நம் மூச்சுடன் சேரும். அந்த அளவிற்கு அன்பை காட்டுபவர் தான் அஜித் சார். மற்றவை எல்லாம் சும்மா” என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ