spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகமல்ஹாசனுக்காக குவியும் ஆதரவு.... சிக்கலில் விஜயின் 'ஜனநாயகன்'!

கமல்ஹாசனுக்காக குவியும் ஆதரவு…. சிக்கலில் விஜயின் ‘ஜனநாயகன்’!

-

- Advertisement -

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் பிரம்மாண்டமாக நடந்த தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன், கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்தது எனக் கூறியிருந்தார். கமல்ஹாசனுக்காக குவியும் ஆதரவு.... சிக்கலில் விஜயின் 'ஜனநாயகன்'!இது கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட மாட்டோம் என பலரும் கமல்ஹாசனுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி கமல்ஹாசன் இது தொடர்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியிருக்கிறார். அதற்காக கமல்ஹாசனுக்கு காலக்கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கமல்ஹாசன், “கன்னட மொழியை தாழ்த்தும் நோக்கத்தில் பேசவில்லை. சினிமா என்பது மக்களை இணைக்கும் பாலமாக இருக்க வேண்டுமே தவிர பிரிப்பதாக இருக்கக் கூடாது. நான் அனைத்து இந்திய மொழிகளுக்காகவும் குரல் கொடுக்கிறேன். ஒரு மொழியின் மீது மற்றொரு மொழியின் ஆதிக்கத்தை எதிர்க்கிறேன். கன்னட மக்களுக்கு உள்ள மொழிப்பற்றை நான் மதிக்கிறேன். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும் நான் மதிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். கமல்ஹாசனுக்காக குவியும் ஆதரவு.... சிக்கலில் விஜயின் 'ஜனநாயகன்'!இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் கமல்ஹாசனுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த தமிழகமும் குரல் கொடுத்து வருகிறது. அதன்படி தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்கவில்லை என்றால் தமிழ்நாட்டில் விஜயின் ஜனநாயகன் படம் ஓடாது என பலரும் கமல்ஹாசனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். அதாவது பெங்களூருவைச் சேர்ந்த கே வி என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தான் விஜயின் ஜனநாயகன் படத்தை தயாரித்திருக்கிறது. எனவே ஜனநாயகன் படத்தை தமிழ்நாட்டில் வெளியிட தடைவிதிப்போம் என பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

MUST READ