Homeசெய்திகள்இந்தியாநீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது…

நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது…

-

- Advertisement -

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. நீட் தேர்வு முடிவுகளை neet.nta.nic.in மற்றும் exams.nta.ac.in, என்ற இணையதளத்தின் வாயிலாகவும், UMANG செயலி மற்றும் DigiLocker மூலமாகவும் அறிந்துக் கொள்ளலாம்.நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது… நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டாலும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் மே 4-ம் தேதி நடைபெற்றது. இதில் சுமார் 22 லட்சம் மாணவர்களும், தமிழ்நாட்டில் 1.5 லட்சம் மாணவர்களும் தேர்வு எழுதினாா்கள். அனைத்து தேர்வர்களுக்கும் மின்னஞ்சலில் மதிப்பெண் விவரம் அனுப்பப்பட்டதாக தேசிய தேர்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது. சுமாா் 22 லட்சம் மாணவா்கள் நீட் தேர்வை எழுதிய நிலையில், 12.36 லட்சம் மாணவா்கள் தோ்ச்சிப் பெற்றுள்ளனா். தோ்வு எழுதியவா்கள் தங்களது முடிவுகளை neet.nta.nic.in மற்றும் exams.nta.ac.in, என்ற இணையதளத்தின் வாயிலாகவும், UMANG செயலி மற்றும் DigiLocker மூலமாகவும் அறிந்துக் கொள்ளலாம்.

இந்த ஆண்டு நீட் தோ்வில் அகில இந்தியளவில் ராஜஸ்தான் மாநிலத்தை சோ்ந்த மஹேஷ் குமாா் முதல் இடம் பிடித்துள்ளாா். இவர் 99.9999547%-ல் மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். அகில இந்திய அளவில் தமிழக மாணவா் சூா்ய நாராயணன் 27 இடமும், தமிழகத்தில் முதல் இடத்தையும் பெற்றுள்ளாா். தமிழகத்தில் 1.35 லட்சம் மாணவா்கள் தோ்வு எழுதிய நிலையில் 76,181 மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

ரவுடி மிளகாய் பொடி வெங்கடேசன் கட்சியிலிருந்து நீக்கம்- பாஜக மாநிலத் தலைவர் அறிவிப்பு

MUST READ