ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றின் வனப்பகுதியில் நேற்று அதிகாலை 5 சிறிய ஒராங்குட்டான் (Orangutan) குட்டிகள் உலா வந்த அரிதான காட்சி உள்ளூர் மக்களை பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து, அந்த அரியவகை குரங்கினங்களை வனத்துறையினர் உடனடியாக மீட்டனர்.


பாலசோரின் போக்ராய் பகுதியில் உள்ள படாபாய் கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டுப்பகுதியில் அதிகாலை 6 மணியளவில் 5 இளம் ஒராங்குட்டான்கள் சுற்றித் திரிவதைப் பொதுமக்கள் கண்டுள்ளனர். அரிதான இந்த உயிரினங்கள் குறித்து தகவல் பரவியதை அடுத்து, ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதியில் திரண்டனர்.
வனத்துறை தீவிர நடவடிக்கை & விசாரணை:
நிலைமையைக் கட்டுப்படுத்த வனத்துறையினர் உடனடியாகச் தலையிட்டு, அந்த விலங்குகளைப் பத்திரமாக மீட்டு வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
இச்சம்பவம் குறித்து பாலசோர் கோட்ட வன அதிகாரி பிரதீக் பிரகாஷ் இந்தால்கர் கூறியதாவது:
கடத்தல் சந்தேகம்: சர்வதேச வனவிலங்கு கடத்தல் கும்பலால் இந்த ஒராங்குட்டான்கள் மாநிலத்துக்குள் கடத்தி வரப்பட்டிருக்கலாம் என பலமாக சந்தேகிக்கப்படுகிறது. எல்லை தாண்டிய வனவிலங்கு கடத்தலின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சுகாதார நிலை: மீட்கப்பட்ட 5 குட்டிகளில் 4 குட்டிகள் மிகவும் ஆரோக்கியமாக உள்ளன. அவை உணவையும் ஓஆர்எஸ் (ORS) கரைசலையும் உட்கொண்டு வருகின்றன.
மருத்துவப் பராமரிப்பு: கால்நடை மருத்துவர்கள் அவற்றைப் பரிசோதித்துச் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது வனத்துறை அதிகாரிகளின் நேரடிப் பராமரிப்பிலும் கண்காணிப்பிலும் அவை வைக்கப்பட்டுள்ளன.
பீகாரில் தொடரும் வெள்ளப்பெருக்கு! அபாய அளவை கடந்த கங்கை நீர்மட்டம் – 13 மாவட்டங்கள் பாதிப்பு!
