கர்நாடக மாநிலத்தின் கோலார், பெங்களூரு, சிக்கபல்லாப்பூர் மாவட்டங்களில் இருந்தும், ஆந்திராவின் குண்டூர், கிருஷ்ணா மற்றும் சித்தூர் மாவட்டங்களில் இருந்து வரத்து அதிகரித்ததால் கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை சரிந்தது.சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களாக இருக்கக் கூடிய கேரளா கர்நாடகா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கிலிருந்து அதிகளவிலான காய்கறிகள் வருகிறது.
இந்நிலையில், கர்நாடகா மற்றும் ஆந்திராவிலிருந்து அதிக அளவில் கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வந்ததால் இன்று அனைத்து காய்கறிகளின் விலையும் கிலோ ரூபாய்க்கு 5 முதல் 10 சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக கர்நாடக மாநிலத்தின் கோலார், பெங்களூரு, சிக்கபல்லாப்பூர் மாவட்டங்களிலிருந்தும் கோலார் மாவட்டத்திலுள்ள பங்காருபேட், ராமநகரா மாவட்டத்தில் உள்ள மல்லூர் ஆகிய பகுதிகளில் இருந்தும் ஆந்திராவின் குண்டூர், கிருஷ்ணா மற்றும் சித்தூர், மதனப்பள்ளி ஆகிய பகுதிகளிலிருந்து காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால், அனைத்து காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளது.
வெங்காயம் தக்காளி நவீன தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய விலை பட்டியல் நிலவரம்:-
வெங்காயம் 24/22 கர்நாடகா வெங்காயம் 18/16
நவீன தக்காளி 16
தக்காளி 12/10/7
உருளை 30/20/16
சின்ன வெங்காயம் 50/40/30
ஊட்டி கேரட் 30/25/20
பீன்ஸ் 50/45/40
பீட்ரூட் ஊட்டி 50/45
கர்நாடக பீட்ரூட் 40/30
சவ் சவ் 25/20
முள்ளங்கி 30/20
முட்டை கோஸ் 10/5
வெண்டைக்காய் 30/25
உஜாலா கத்திரிக்காய் 30/25
வரி கத்திரி 20/15
காராமணி 50/40
பாவக்காய் 30/25
புடலங்காய் 20/15
சுரைக்காய் 20/10
சேனைக்கிழங்கி 65/60
முருங்கைக்காய் 50/45/40
சேமக்கிழங்கு 50/40
காலிஃபிளவர் 20/10
வெள்ளரிக்காய் 25/20
பச்சை மிளகாய் 30/25/20
பட்டாணி 150/130
இஞ்சி 40/30/25
பூண்டு 140/120/90
அவரைக்காய் 20/15
மஞ்சள் பூசணி 10/8
வெள்ளை பூசணி 10
பீர்க்கங்காய் 35/30
எலுமிச்சை 50/40
நூக்கள் /30
கோவைக்காய் 25/20
கொத்தவரங்காய் 30/25
வாழைக்காய் 8/7
வாழைதண்டு,மரம் 40/30
வாழைப்பூ 25/20
குடைமிளகாய் 50/40
வண்ண குடைமிளகாய் 80
கொத்தமல்லி 2
புதினா 2
கருவேப்பிலை 15
கீரை வகைகள் 10
மாங்காய் 15/10
பொள்ளாச்சி தேங்காய் 60/57
உடுமலைப்பேட்டை
தேங்காய் 55/54
ஆங்கிலம் கற்பதுதான் உலகத்துடன் போட்டி போடுவதற்கான பாதை…. அமித்ஷாவுக்கு ராகுல் பதிலடி…