ஆளுநர் செய்தது தவறு – மாஃபா. பாண்டியராஜன். ஆளுநரின் முடிவை விமர்சிப்பது முறையற்றது, சட்ட ரீதியானதும் அல்ல.
முன்னாள் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் குறித்து செய்தியாளர்கள் சந்தித்து பேசியதாவது, ஆளுநரின் முடிவை விமர்சிப்பது முறையற்றது, சட்ட ரீதியானதும் அல்ல.

சென்னை திருநின்றவூரில் அதிமுக கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அதிமுகவை பொருத்தவரை அவர் சட்டரீதியாக என்ன செய்யவேண்டுமோ அதை செய்து இருக்கிறார்.
ஆனால், ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க அவர் இவ்வளவு கால தாமதம் ஏற்படுத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பாண்டியராஜன் தெரிவித்தார்.
மேலும், ஒரு மசோதாவை திருப்பி அனுப்புவது ஆளுநருக்கு இருக்கும் உரிமை. இரண்டாவது முறையும் சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்து தீர்மனம் நிறைவேற்றிய பின்னரும் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். ஆனால் அதை திருப்பி அனுப்பியது தவறு என மாஃபா. பாண்டியராஜன் கூறினார்.
தற்போது ஒப்புதல் அளித்துள்ள ஆளுநர், இந்த தடை சட்ட மசோதாவிற்கு கொஞ்சம் வேகமாக ஒப்புதல் வழங்கிருந்தால் பல உயிர்களை காப்பாற்றி இருக்கலாம், காலம் தாழ்த்தாமல் ஆளுநர் இந்த முடிவை எடுத்திருந்தால் மற்றவர்கள் குற்றம் சாட்டும் நிலை ஏற்பட்டிருக்காது என்று அவர் தெரிவித்தார்.
அதேபோன்று, ஆளுநர் நல்ல சட்டங்களை நிறுத்திவைக்க கூடாது. முறையற்ற சட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைப்பது தவறில்லை என்று கூறிய அவர், அதிமுக கொண்டு வந்த ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தைதான் இப்போது திமுக அரசு கொண்டுவந்துள்ளதாக கூறினார்.
மேலும், சட்டமன்றத்தில் அதிமுக துணை தலைவராக ஆர்.பி. உதயகுமாரை அங்கீகரிக்காமல் புறக்கணிப்பது தவறான செயல் என்று கூறிய பாண்டியராஜன் சபா நாயகரின் செயல் கண்டிக்கதக்கது என்று தெரிவித்தார்.