spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைபோட்டி பாமக? திரும்பும் 1993 வரலாறு! ஸ்கோர் பண்ணும் ஸ்டாலின்!

போட்டி பாமக? திரும்பும் 1993 வரலாறு! ஸ்கோர் பண்ணும் ஸ்டாலின்!

-

- Advertisement -

பாமக சட்டமன்ற உறுப்பினர் அருளை, கட்சியின் கொறடா பொறுப்பில் இருந்து நீக்க அன்புமணி நடவடிக்கை மேற்கொண்டதன் மூலம் இந்த பிரச்சினை அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்து விட்டது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

tharasu shyam
tharasu shyam

பாமக சட்டமன்ற கொறடா பொறுப்பில் இருந்து அருளை நீக்கும் விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- பாமக சட்டமன்ற உறுப்பினர் அருளை, கட்சியின் கொறடா பொறுப்பில் இருந்து நீக்க வலியுறுத்தி சபாநாயகர் அப்பாவுவிடம் மனு அளிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ராமதாஸ் – அன்புமணி மோதல் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. பொதுவெளியில் இருந்து வந்த ராமதாஸ், அன்புமணி மோதல் தற்போது சட்டமன்றத்திற்கு சென்றுள்ளது. அப்படி சட்டமன்றத்திற்கு பிரச்சினை செல்கிறபோது, பழைய முன்னுதாரணங்களை வைத்து சபாநாயகர் முடிவு எடுப்பார். அவருடைய முடிவே இறுதியானது. அவர் எப்போது வேண்டும் என்றாலும் முடிவு எடுக்கலாம்.

we-r-hiring

பழைய முன்னுதாரணம் என்பது பாமக சட்டமன்ற உறுப்பினராக பண்ருட்டி ராமச்சந்திரன் இருந்தபோது, 1993ல் மருத்துவர் ராமதாசுக்கு எதிராக போட்டி பொதுக்குழுவை கூட்டினார். ராமதாசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இதுதான் உண்மையான பாமக என்று தேர்தல் ஆணையத்திற்கும் அனுப்பி வைத்தனர். சட்டமன்றத்திலும் கடிதம் கொடுத்தனர். அப்போது சேடப்பட்டி முத்தையா சபாநாயகராக இருந்தார். சேடப்பட்டி முத்தையா ஒரு வகையில் பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு ஆதரவாக முடிவு எடுத்தார். எனவே சட்டமன்றத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையிலான பாமகவும், வெளியில் மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான பாமகவும் நிலவியது. 1996ல் பாமக மற்றும் வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோர் கூட்டணி அமைத்து போட்டியிட்டார்கள். அதில் பாமக 4 இடங்களில் வென்றது. பேராசிரியர் தீரன்தான் பாமகவின் சட்ட திட்டங்களை எழுதியவர்.

வன்னியர்களின் வாக்கு வங்கி என்பது மருத்துவர் ராமதாசை நம்பிதான் உள்ளது. அன்புமணி ஒரு அரசியல் தலைவராக இருக்கலாம். ஆனால் வன்னியர் வாக்கு வங்கி சாதி அடிப்படையிலானது. சமுதாயத்திற்கு பாடுபட்டவர்களை தான், அது அங்கீகரிக்கும். ஒரு சமுதாயத்தில் பிறப்பதால் அங்கீகாரம் கிடைத்துவிடாது. பாமக நிறுவனர் ராமதாசை கட்சியில் இருந்து நீக்க முடியாது. அப்போது, அன்புமணி கொறடா பதவியில் இருந்து அருளை நீக்கினால், மற்றொரு எம்எல்ஏ ஜி.கே.மணி உள்ளார். அப்போது பாமக இரண்டாக உடைந்துவிட்டது என்று சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிடுவார்.  அது திமுகவுக்கு லாபமாகும்.

தற்போதைய நிலையில் முன்னுதாரணம் என்பது 1996 விவகாரம் தான். அப்படி பார்க்கிறபோது சட்டமன்றத்திற்குள் இரண்டு பாமக இருக்கும். வெளியிலும் இரண்டு பாமக உள்ளன. பாமக பிரச்சினை தேர்தல் ஆணையத்திற்கு செல்லாமல் ராமதாஸ் பக்கம் ஆதரவான ஒரு முடிவை எடுப்பதற்கான வழியை அன்புமணி ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார். அன்புமணி மனு அளித்த உடன் சபாநாயகர், 2 பாமக என்று முடிவு எடுத்தால், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது. சபாநாயகர் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றம் சென்றால், தேர்தலுக்குள்ளாக உடனடியாக தீர்ப்பு வராது. இந்த விவகாரத்தில் அரசியல் அணுகூலம் இல்லாமல் எந்த ஆளுங்கட்சியும் நடவடிக்கை எடுக்காது. திமுகவுக்கு அணுகூலம் என்பது பாமக இரண்டாக உடைவது தான்.

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி: அதிமுகவின் கோரிக்கை நிராகரிப்பு

பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டை விஜய் பொதுவாக கொண்டுவருவதற்கு வாய்ப்பு உள்ளது. அப்படி கொண்டுவந்தால் இன்னொரு அணி உருவாவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அந்த அணியில் போய் இணைந்துவிடலாம் என்று கூட விசிக நினைக்கலாம். திருமாவளவன் நாங்கள் திமுக கூட்டணியில் தொடர்கிறோம் என்று சொல்கிறார். ஆனால் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் மாற்றுக் கருத்தை முன்வைக்கிறார். இதன் மூலம் ராமதாஸ் தலைமையிலான பாமக திமுக கூட்டணிக்கு வரக்கூடாது என்று நினைக்கிறார். ஆனால் அன்புமணி தலைமையிலான பாமக, பாஜக கூட்டணிக்கு போய்விட்டது. அப்போது பாமக திமுக கூட்டணிக்கு வர முடியாது.  ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு நிகழ்ச்சியை தொடங்கிவைத்து திமுக கூட்டணிக்கு இன்னும் கட்சிகள் வரும் என்று சொல்கிறார். திமுக 160 இடங்களில் நின்றால் கூட 75 இடங்கள் தான் இருக்கும். காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்கள் தர வேண்டும். மற்ற கட்சிகளும் உள்ளன. அப்போது திமுக கூட்டணியை வலுப்படுத்த வேண்டிய அவசியம், தேர்தலுக்கு  8 மாதங்களுக்கு முன்பாக வருவது ஏன்?

தோல்வி பயம். அப்போது திமுக தங்களுடைய பலத்தை எந்த வித பிரச்சினையும் இல்லாமல் உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். 50 சதவீத வாக்குகள் நம்மிடம் இருக்கிறது என்கிற ஆரம்ப அனுமானத்தோடு இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்போது சிறிய, சிறிய வாக்கு வங்கிகளை இணைக்க பார்க்கிறார். மருத்துவர் ராமதாஸ் என்பவர் மிகப்பெரிய வாக்கு வங்கி ஆவார். அவரை சேர்த்துக்கொள்வதில் திமுகவுக்கு இருக்கும் ஒரே நெருடல் விசிக தான்.  விசிகவை சமாதானம் செய்ய முயற்சி செய்வார்கள். அப்படி சமாதானம் ஏற்படாவிட்டால் என்ன செய்வது என்கிற கேள்வி வரும். அப்போது பிளான் பி என்பதை விசிக தான் வைக்க வேண்டும். பாமக வந்தால் திமுக கூட்டணிக்கு உத்வேகம் கிடைக்கும். அதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எப்போது என்றால் சட்டமன்றத்தில் பாமக அதிகாரப்பூர்வமாக அன்புமணி தலைமையிலான பாமக மாறினால் அதற்கான வாய்ப்புகள் உள்ளன.

விஜய்க்கு அரசியலில் செயல்படும் திறன் இருக்கிறது...... பார்வதி நாயர் பேச்சு!

ஜி.கே.மணியை பொருத்தவரை அவர் மருத்துவர் ராமதாஸ் உடன்தான் இருக்கிறார். அன்புமணியோடு இருப்பவர்கள் கட்சிக்கு புதிதாக வந்தவர்கள். அதை ஆளுங்கட்சி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வது என இயல்பானது. பாஜகவுக்கு எதிராக விஜய் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கிறபோது  அவருக்கான அரசியல் வாய்ப்புகள் கூடும். அப்போது கணக்கீடு எப்படி வரும் என்றால் நம்மிடம் இவ்வளவு வாக்குகள் உள்ளன. விஜய் கட்சிக்கு ஆதரவு கூடுகிறது. வெற்றி தோல்விக்கு அதுவே போதும். பிளான் பி என்பது தற்போதைய கூட்டணியே தொடருவது. இன்றைய சூழலில் அஜித்குமார் மரணத்தை முன்னிட்டு பெரிய அளவில் விவாதங்கள் போய் கொண்டிருக்கின்றன. அப்போது அந்த விவாதத்தை மாற்ற வேண்டும் என்றால்? எதாவது ஒரு அரசியல் அடி அடித்தால்தான் மாற்ற முடியும். அந்த முடிவை எடுப்பார்களோ என்பது என்னுடைய பார்வையாகும். எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் செய்வார்கள். அதற்கு பெயர் திசை மாற்றுதல் அல்லது மடை மாற்றுதலாகும். ஆனால் இந்த வயலுக்கு பாய்வதற்கு பதிலாக அந்த வயலுக்கு பாயும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ