spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதெருவுல நிறுத்திட்டாங்க! ஸ்டாலின் உடனடி மூவ்! 3 மாதத்தில் தீர்ப்பு! எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!

தெருவுல நிறுத்திட்டாங்க! ஸ்டாலின் உடனடி மூவ்! 3 மாதத்தில் தீர்ப்பு! எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!

-

- Advertisement -

சிவகங்கை இளைஞர் அஜித்குமார் மரணத்தில் தமிழக அரசு சரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வழக்கில் 3 மாதங்களில் விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்கினால் மட்டுமே இதுபோன்ற குறறங்கள் இனி நடைபெறாது என்று  மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இளைஞர் அஜித்குமார் மரணம் குறித்தும், இந்த வழக்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த மடப்புரத்தில் கோவில் காவலாளியாக இருந்த இளைஞர் அஜித்குமார், நகை காணாமல் போன புகாரில் காவல் துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். இதற்கு அரசு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காவல்துறையில் இருக்கும் காவலர் தொடங்கி டிஜிபி வரை யார் தவறு செய்தாலும் அதற்கு தார்மீக பொறுப்பு உள்துறை அமைச்சர் ஆவார். தமிழ்நாட்டில் அந்த துறைக்கு பொறுப்பாக இருக்கின்ற முதலமைச்சர்தான் சொல்ல வேண்டும். கடந்த 4 ஆண்டுகளில் 24 பேர் காவல் துறையால் மரணம் அடைந்து இருக்கிறார்கள். கடந்த காலங்களில் நடைபெற்றதை விட இது குறைவு என்பது வெட்கி தலைகுணிய வேண்டிய விளக்கமாகும். சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை விவகாரத்தில் காவல்துறையினருக்கு ஆதரவாக அறிக்கை இருக்கும். எடப்பாடி சட்டமன்றத்திலேயே அதை படித்திருப்பார். ஏனென்றால் அதை எழுதிக்கொடுத்தது காவல்துறை தான். ஆனால் மனிதாபிமானம் என்ற ஒன்று வேண்டாமா? முதலமைச்சரும் மனிதர்தான். அந்த இடத்தில் தனது மகன், உறவினர் என்பதை மனதில் வைத்துதான் படிக்க வேண்டும். அவர்கள் எழுதி கொடுத்த அறிக்கையை படித்து பார்த்துவிட்டு, காவல்துறையினரை காப்பாற்றுவது போன்று புனையப்பட்ட வார்த்தைகளை நீக்குங்கள் என்று அன்றைக்கு எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்க வேண்டும். நல்ல வேளையாக அப்படி ஒரு வக்காலத்து வாங்குகிற அறிக்கை திமுக அரசிடம் இருந்து வரவில்லை.

இதில் கொஞ்சம் ஆறுதல் அடையும் விதமாக உடனடியாக காவல்துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி நடவடிக்கை எடுத்திருக்கிறார் முதலமைச்சர். காவல்துறையில் மாநிலம் தழுவிய அளவில் கெட்ட சம்பவங்கள் நடைபெறுகிறபோது இதுபோன்ற கூட்டத்தை கூட்டி நடவடிக்கை எடுத்திருந்தார் என்றால், ஒரு பயமற்ற தன்மை கீழ்நிலை வரை ஊடுருவி இருக்காது. முதலமைச்சரை தெருவில் நிறுத்துவார்கள் என்று எச்சரிக்கை விடுத்திருந்தேன். இன்றைக்கு நீதிபதி இளைஞர் மரணத்துக்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்று சொல்கிறார். காவல் துறைக்கு அமைச்சரும் அவர்தான், அரசின் முகமும் அவர்தான். இன்றைக்கு தலைகுனிய வைத்தார்களா? இளைஞர் அஜித்குமார் மரண விவகாரத்தில்  யாரோ ஒரு உயர் அதிகாரியின் அழுத்தத்தின் பெயரில் காவலர்கள் தாக்கி கொன்றுள்ளனர். காவல்துறையினர் ஒன்றும் செய்யாமல், குற்றத்தை வெளியில் கொண்டுவர முடியாதுதான். ஆனால், அதற்கு ஒரு எல்லை இருக்கிறது. அதற்குள் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம். அதை தாண்டுகிறபோது வேறு வழியில்லை. புகார் அளித்தவரிடம் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்ள சொல்லுங்கள். ஒரு உயிரை எடுப்பது எந்த வகையில் நியாயமாகும்.

அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் உடலில் 18 இடங்களில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும், இரண்டு காதுகளிலும் ரத்தம் வருகிற அளவுக்கு அடிப்பதற்கு அந்த 10 பவுன் நகை பெரியதா? அந்த உயிர் விலை அவ்வளவுதானா? ஞானசேகரன் வழக்கை கிட்டத்தட்ட 3 மாதங்களில் நடத்தி முடித்து, தண்டனை வாங்கி தந்தார்கள். அதே வேகத்தில் இந்த வழக்கு நடைபெறாவிட்டால், திமுக அரசு அவர்கள் செய்த தவறை வேறு வழியில் செய்வதாக தான் அர்த்தம். இந்த வழக்கை விரைவாக நடத்தி தண்டனை வாங்கி கொடுத்தால்தான் நாம் ஒரு எல்லையை மீறி லத்தியை பாய்ச்சினால், எங்கு வந்து நம்ம வாழ்க்கை முடியும் என்கிற பயம் ஒட்டுமொத்த காவல்துறைக்கு வரும். டிஜிபியில் தொடங்கி இரண்டாம் நிலை காவலர் வரை தெரிய வேண்டும் என்றால் இந்த வழக்கை எவ்வளவு சீக்கிரம் அரசு நடத்துகிறதோ அதில் தான் இவரது முகம் காப்பாற்றப்படும். இல்லாவிட்டால், வழக்கமான பூச்சாண்டி வேலையை தான் ஸ்டாலினும் செய்கிறார் என்று அர்த்தம். இந்த வழக்கை சிபிஐக்கு வேண்டும் என்றாலும் மாற்றட்டும். ஒட்டுமொத்தத்தில் 4 மாதத்தில் விசாரணை முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும். அப்படி வந்தால்தான் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் நல்லது. அவர்களுக்கும் ஒரு சுயக்கட்டுப்பாடு விதித்தது போன்று ஆகிவிடும். அது தெரியாமல் தான் தறிகெட்டு ஆடுகிறார்கள்.

ஸ்டாலின், எதிர்க்கட்சியாக இருந்தபோது சவால்விட்டு அறிக்கை விட்டார். அதே ஆளுங்கட்சியான பிறகு அதிகாரிகள் பிடியில் இவர் சிக்கி, குற்றச்சாட்டு ஆளானவர்களை சக அதிகாரிகள் காப்பாறுவதை வேடிக்கை பார்க்கிறார்.அதற்காக தான் முதலமைச்சர் இன்றைக்கு தலைகுனிந்து நிற்கிறார். அஜித்குமார் மரணம் எதோ ஒரு காவல் நிலையத்தில் நடைபெற்றது தான். ஆனால் நீதிமன்றம் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று சொல்கிறது. அஜித்குமார் நகையை திருடியதாக இருந்தாலும் அவரை இரண்டு தட்டு தட்டுவது வேறு. ஆனால் அவர் காதுகளில் ரத்தம் வருகிற அளவுக்கு, 18 இடங்களில் காயம் வருகிற அளவுக்கு அடிப்பது என்பது வேறு. மனிதாபிமானம் வேண்டாமா? அஜித்குமார் மரணம் என்பது படுகொலை தான். அவர் திருடனாக இருந்தாலும் இப்படிதான் அடிப்பார்களா? இதில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்தால், அவர்களும் பிணத்தை வைத்து அரசியல் செய்வதுதான் ஆகும்.

சாத்தான்குளம்

சாத்தான்குளம் வழக்கில் விரைந்து தண்டனை வாங்கி கொடுத்திருந்தால் கூட காவல்துறையினருக்கு பயம் வந்திருக்கும். காவல்துறையினருக்கு பயமற்ற தன்மை உள்ளது. இதற்கு காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். நேற்று நடைபெற்றது ஆய்வுக்கூட்டம் அல்ல. நடவடிக்கை எடுப்பதற்கான கூட்டமாகும். இதுபோன்று 10 கூட்டங்களாவது நடத்த வேண்டும். திமுக அரசை விமர்சிக்க ஆயிரம் காரணங்கள் உள்ளன. அதுகுறித்து எடப்பாடி பழனிசாமி பேச மாட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன் என்று சொல்கிறார். எப்படியாவது நடவடிக்கை எடுத்து 90 நாட்களுக்குள் இந்த வழக்கை முடிக்கவில்லை என்றால் நிஜமாகவே அஜித்குமார் மரணத்திற்கு இந்த அரசுதான் காரணமா? என்கிற குற்றச்சாட்டு வரும். காவலர்களுக்கு ஒரு சுயக்கட்டுப்பாடு வந்து, அவர்கள் தங்களை தாங்களே காப்பாற்றி கொள்ள வேண்டும் என்றால் இந்த வழக்கின் தீர்ப்பு 90 நாட்களுக்குள் தர வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ