spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஉச்சகட்ட கோபத்தில் ஸ்டாலின்! அஜித்குமார் தாயாருக்கு அளித்த உறுதி! வல்லம் பஷீர் நேர்காணல்!

உச்சகட்ட கோபத்தில் ஸ்டாலின்! அஜித்குமார் தாயாருக்கு அளித்த உறுதி! வல்லம் பஷீர் நேர்காணல்!

-

- Advertisement -

அஜித்குமார் மரண விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், திமுக அரசை விமர்சிக்க எதிர்க்கட்சிகளுக்கு தகுதி இல்லை என்றும் திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

சிவகங்கையில் நகை திருட்டு தொடர்பாக கோவில் காவலாளி அஜித்குமார் காவல்துறையினரால் சித்ரவதை செய்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்து  திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் மரணம் தொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விசாரணை எப்படி நடைபெற்று வருகிறது என்பதை முழுமையாக கண்காணித்து வருவதாக முதலமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். பத்ரகாளி அம்மன் கோவிலுக்கு சென்ற பெண்ணின் காரில் இருந்த நகை மாயமானதாகவும், அதை இறந்துபோன அஜித்குமார் எடுத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டுகிறார்கள்.  இந்த வழக்கின் தொடக்க நிலையே தவறாக அணுகப்பட்டிருக்கிறது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பாதிக்கப்பட்ட நபரின் சார்பில் ஆஜரான ஹென்றி திபேனும் அதையேதான் சொல்லியுள்ளார். நீதிபதிகள் அந்த கருத்தை உள்வாங்கி, வழக்கு விசாரணையை தொடங்கி இருக்கிறார். நிவேதா என்கிற பெண்தான், நகை காணாமல் போனதாக புகார் தெரிவித்துள்ளார். அது குறித்து நேரடியாக புகார் தெரிவிக்காமல், காவல் உதவி ஆய்வாளர் ரமேஷுக்கு வாய் வழியாக புகார் தெரிவித்துள்ளார். அது தொடர்பாக சிஎஸ்ஐஆர் பதிவு செய்யாமல், எந்த வித ஆவணங்களும் இன்றி போலீசார் விசாரணையை தொடங்குகிறார்கள். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய திருப்புவனம் காவல்துறையினர் யாரும் அவரிடம் விசாரிக்கவில்லை. மாவட்ட எஸ்.பி. தலைமையில் செயல்படும் குற்றப்பரிவுதான் இதை விசாரித்துள்ளது.

தலைமை காவலர் ஒருவர் தலைமையில் 6 பேர் சென்று அஜித்குமாரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் 6 பேரும் விசாரணைக்கு வந்த அஜித்குமாரை மாட்டுத் தொழுவத்தில் வைத்தும், அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் வைத்தும் இப்படி பல்வேறு இடங்களில் அவரை சித்ரவதை செய்துள்ளனர். அஜித்குமார், ஒரு சந்தேகப்படும் நபர்தான். அவர் குற்றத்தில் ஈடுபட்டதற்கான ஒரு சின்ன ஆதாரம் கூட அவர்களிடம் இல்லை. ஒருவேளை அஜித்குமார் அந்த நகையை எடுத்திருந்தார் என்றால்?  அதற்கு ஒரு ஆதாரம் கூட எடுத்திருக்கவில்லை. காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தை நாங்கள் நடத்துவது எவ்வளவு முக்கியத்துவமானது என்று தற்போதாவது தமிழ்நாட்டு மக்களும், அரசியல்வாதிகளும் உணரட்டும் என்று ஹென்றி திபேன் தெரிவித்துள்ளார். பலம் பொருந்தியவர்கள், பணம் படைத்தவர்கள் தங்களுக்கு தேவைக்கு ஏற்ப காவல்துறையை சுயலாபத்திற்கு பயன்படுத்துகிறார்கள். அப்போது காவல்துறை மக்களுக்கு தான் சேவையாற்றுகிறதா? என்கிற கேள்வி எழுகிறது. விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இனி இதுபோன்ற தவறுகள் நடைபெறக்கூடாது என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.

சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் தான் இந்த 6 பேர் கொண்ட குழுவை அனுப்பி வைத்துள்ளார். அவருக்கு விசாரணை நடைமுறைகள் தெரியாதா? திருப்புவனம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வழக்கு தொடர்பாக, அந்த காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா? இந்த வழக்கை அலுவல் முறை சாராமால் விசாரித்தது ஏன்? காவல்துறை திட்டமிட்டே மிகப்பெரிய தவறு செய்துள்ளனர். முதலமைச்சர் தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு துறையை சுதந்திரமாக செயல்பட அனைத்து வகையிலும் துணை நிற்கிறார். சட்டம் ஒழுங்கை சரிசெய்ய காவல்துறைக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரத்தை எப்படி பயன்படுத்தி உள்ளனர். காவல் சித்ரவதைக்கு உங்கள் அதிகாரத்தை பயன்படுத்துகிறீர்கள். இது முதலமைச்சரையும், அரசையும் நேரடியாக பாதிக்கிறது. தவறுகள் நடந்த பிறகு எனக்கு தெரியாது என்று சொல்கிற எடப்பாடி பழனிசாமி அரசு அல்ல தன்னுடைய அரசு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை டிவியில் பார்த்து தெரிந்துகொண்டேன் என எடப்பாடி சொன்னார். ஆனால் லாக்கப் டெத் நடைபெற்ற 2.30 மணி நேரத்தில் துறை சார்ந்த அதிகாரிகள் கூட்டத்தை கூட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நடவடிக்கைகளை தாமே நேரடியாக கண்காணித்தார்.

தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் புள்ளி விபரங்களின் படி, அதிமுக ஆட்சியில் நடைபெற்ற லாக்கப் டெத், காவல்துறை சார்ந்த வன்கொடுமைகளை விட, திமுக ஆட்சியில் 28 சதவீதம் குறைந்துள்ளது. அதிமுக ஆட்சியை விட குற்றங்கள் குறையும் அளவுக்கு முதலமைச்சர் உறுதியாக செயல்பட்டு வருகிறார். அவரை எப்படி குறை சொல்ல முடியும்.  குறை சொல்வதற்கு உங்களுக்கு என்ன யோகியதை உள்ளது. சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் எடப்பாடி ஆட்சிக்காலத்தில் என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. காவல்துறையினருக்கு அரசே துணை நின்றது. அவர்கள் காவல்துறையினரிடம் தகாத முறையில் நடந்துகொண்டதால் போலீசார் சற்று வலுக்கட்டாயமாக நடந்துகொண்டது என்று எடப்பாடி அரசு சொன்னது. ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தவறுக்கு நிற்கவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறார்.அப்போது நீங்கள் எப்படி விமர்சனத்தை முன்வைக்க முடியும். எனவே எடப்பாடி பழனிசாமிக்கோ, எதிர்க்கட்சிகளுக்கோ திமுக அரசை விமர்சிக்கும் தகுதி இல்லை.

இளைஞர் அஜித்குமார் மரணத்தில் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது என்று தமிழக அரசே சொல்கிறது. இந்த அறிக்கை என்பது அரசுத் தரப்பில் விசாரணை நடத்தி, காவல்துறையில் என்ன நடந்துள்ளது என்று துறைக்கு பொறுப்பு அமைச்சராக உள்ள  முதலமைச்சர் நடவடிக்கை எடுத்தன் அடிப்படையில்தான் தெரியவந்துள்ளது. ஆஷிஷ் ராவத் தலைமையில் தான் இந்த குழு சென்றுள்ளது. இந்த குற்றத்தில் தொடர்புடைய  6 காவலர்களுக்கும் எங்கிருந்து உத்தரவுகள் வந்துள்ளது என்று அரசு தெரியப்படுத்தி விட்டதே. எஸ்.பி. தலைமையில் செயல்படும் குற்றப்பரிவு தான் அங்கு சென்றுள்ளது. ஏன் அவர்களுக்கு பொறுப்பு டிஎஸ்பியை நியமிக்கவில்லை என்று அரசு கேள்வி எழுப்பியுள்ளது. அஜித்குமார் மரண விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துரித நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பதிலும் உறுதியாக உள்ளார். அதனால்தான் வழக்கில் சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீது உடனடியாக நடவடிக்கை பாய்கிறது  இல்லாவிட்டால் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா? உத்தரவு போட்டது யார் என்று நயினார் நாகேந்திரன் ஒன்றும் சொல்ல தேவையில்லை. அது தான் உத்தரவு போட்டது மாவட்ட எஸ்.பி. என்று பட்டவர்த்தனமாக தெரிந்துவிட்டதே. எனவே அரசியலுக்காக நயினார் நாகேந்திரன் போன்றவர்கள் அறிக்கை வெளியிடுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ