spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் - மீண்டும் முதலிலிருந்து தொடங்கத் தயாராகுங்கள் - ரயன் ஹாலிடே

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – மீண்டும் முதலிலிருந்து தொடங்கத் தயாராகுங்கள் – ரயன் ஹாலிடே

-

- Advertisement -

உங்களுடைய ஆசீர்வாதங்களில் திளையுங்கள். உங்களுடைய தலைவிதி வெற்றி கொள்ளப்பட்டுவிட்டது. ஆனால் எங்களுடைய தலைவிதி ஒரு சோதனையிலிருந்து மற்றொன்றுக்கு எங்களைப் பந்தாடிக் கொண்டிருக்கிறது” – விர்ஜில்தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் - மீண்டும் முதலிலிருந்து தொடங்கத் தயாராகுங்கள் - ரயன் ஹாலிடேமுட்டுக்கட்டைகள் ஒருபோதும் நிற்பதில்லை. இதுதான் இயற்கையின் நியதி. நீங்கள் ஒரு முட்டுக்கட்டையை வெற்றிகரமாகச் சமாளித்துவிட்டீர்கள் என்று இறுமாந்து இருக்கின்றபோது. அடுத்த முட்டுக்கட்டை உங்கள் முன்னால் வந்து குதிக்கும்.

ஆனால் அதுதான் வாழ்க்கையை சுவாரசியமாக்குகிறது. அதுதான் வாய்ப்புகளையும் உருவாக்குகிறது.

we-r-hiring

இத்தடைகளைக் கடந்து வருவதுதான் வாழ்க்கை.

ஒவ்வொரு முறையும் நீங்கள் ஏதாவது ஒரு படிப்பினையைக் கற்றுக் கொள்வீர்கள். ஒவ்வொரு முறையும் உங்களுடைய வலிமையும் ஞானமும் கண்ணோட்டமும் மேம்படும். ஒவ்வொரு முறையும் உங்களுடைய போட்டியாளர்கள் சிறிது சிறிதாகக் காணாமல் போவர். இறுதியில் நீங்கள் மட்டுமே இருப்பீர்கள் – உங்களின் மிகச் சிறந்த வடிவத்தில்!

“மலைகளுக்குப் பின்னால் இன்னும் கூடுதலான மலைகள் இருக்கின்றன,” என்று அறிவிக்கின்றது ஒரு ஹைட்டி நாட்டுப் பழமொழி.

கிரேக்கத் தொன்மவியலில் விவரிக்கப்படுகின்ற ‘எலைசியம்’ என்ற சொர்க்கம் ஒரு கட்டுக்கதை. ஒரே ஒரு தடையைக் கடந்தவுடன் எவரும் தடைகள் ஏதுமற்ற ஓரிடத்திற்குச் செல்வதில்லை.

உண்மையில், நீங்கள் வாழ்க்கையில் எவ்வளவு அதிகமாகச் சாதிக்கிறீர்களோ அவ்வளவு அதிகமான தடைகள் உங்கள் பாதையில் முளைத்தெழும். வாழ்க்கையில் எப்போதும் புதிய புதிய பெரிய தடைகள் வந்து கொண்டுதான் இருக்கும். ஒரு மலைப்பாதையில் மேல்நோக்கி ஓடுவதைப் போன்றதுதான் இது. அதைப் புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு நீங்கள் உங்களைப் பயிற்றுவித்துக் கொள்ள வேண்டும்.

வாழ்க்கை என்பது ஒரு நூறு மீட்டர் ஓட்டப் பந்தயம் அல்ல, அது மராத்தான் என்ற ஒரு நெடுந்தூர ஓட்டப் பந்தயம் என்பதைப் புரிந்து கொள்வது இன்றியமையாதது. அப்போதுதான் உங்களால் உங்களுடைய ஆற்றலைச் சேமித்து வைத்துக் கொள்ள முடியும். ஒரு தடையை வெற்றிகரமாகத் தாண்டுகின்றபோது நீங்கள் கற்றுக் கொள்கின்ற படிப்பினைகள் அடுத்தத் தடையைத் தாண்டுவதற்குப் பயன்படும், அதை இலகுவாக்கும்.

நீங்கள் ஒரு தடையை வெற்றிகரமாகத் தாண்டுவது, கூடுதல் தடைகளைத் தாண்டுவதற்கு நீங்கள் தகுதியானவர் என்று நிரூபிக்கிறது. நீங்கள் சவால்களை வெற்றிகரமாகக் கையாள்பவர் என்பதை உலகம் அறிந்து கொள்ளும்போது, அது உங்களை நோக்கித் தொடர்ந்து பல சவால்களை அள்ளி வீசிக் கொண்டேயிருக்கிறது. அது நல்லதுதான். ஏனெனில், தடைகளைத் தாண்ட நாம் முயற்சிக்கின்ற ஒவ்வொரு முறையும், அதில் நாம் மேம்படுகிறோம்.

ஒருபோதும் கலக்கமடையாதீர்கள், பரிதவிப்புக் கொள்ளாதீர்கள். எப்போதும் சுறுசுறுப்புடனும் படைப்பாற்றலுடனும் செயல்படுங்கள். எப்போதும் திட்டவட்டமாகச் செயலாற்றுங்கள்.

தடைகளைத் துணிச்சலாக எதிர்கொண்டு, அதன் வாயிலாக உங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

அதனால் எதற்கும் இனி பயப்படாதீர்கள். பரவசப்படுங்கள், உற்சாகமாக இருங்கள், அடுத்தச் சுற்றுக்காக ஆவலோடு காத்திருங்கள்

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – உங்களுடைய நிலையாமையை அசைபோடுங்கள் – ரயன் ஹாலிடே

MUST READ