spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைமோடி பேச்சின் சூட்சுமம்! எடப்பாடி தலைமையில் துண்டு! பொன்ராஜ் நேர்காணல்!

மோடி பேச்சின் சூட்சுமம்! எடப்பாடி தலைமையில் துண்டு! பொன்ராஜ் நேர்காணல்!

-

- Advertisement -

மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, எந்த இடத்திலும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்லவில்லை என்றும், எனவே பின்னால் அவருக்கு பதவி மறுக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் அரசியல் விமர்சகர் பொன்ராஜ் எச்சரித்துள்ளார்.

we-r-hiring

மதுராந்தகம் கூட்டத்தில் பிரதமர் மோடியின் பிரச்சாரம் குறித்து அரசியல் விமர்சகர் பொன்ராஜ் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- எடப்பாடி பழனிசாமி தன்னுடைய 4.5 ஆண்டு கால ஆட்சி காலத்தில் பிரதமர் மோடி கேட்ட திட்டங்களை எல்லாம் வழங்கியதாக தெரிவித்துள்ளார். அவரை பொருத்தவரை திட்டம், கான்ட்ராக்ட், கமிஷன், கரப்ஷன் என்பதுதான் தெரியும். அவருக்கு மாநில சுயாட்சி, திராவிட சித்தாந்தம், மொழிக்கொள்கை பற்றி எல்லாம் தெரியாது. தனக்கு திட்டம் கொடுத்தாரா, 11 மருத்துக்கல்லூரி கொடுத்தாரா? என்று கல்லாப் பெட்டி சிங்காரம் போன்று பணம் கொடுத்தாரா? என்பது தான் முக்கியம். தமிழுக்கு எதிராக, இரு மொழி கொள்கைக்கு எதிராக, மாநில சுயாட்சிக்கு எதிராக அளுநரை வைத்து தமிழ்நாட்டில் நர்த்தன தாண்டவம் புரிந்துகொண்டிருக்கிற மோடி என்ற குஜராத்தி பிரதமரை அழைத்து வந்து மதுராந்தகத்தில் கூட்டம் போட்டு, தமிழ்நாட்டை அழிக்கக்கூடிய ஒரு தீயசக்தியாக இவர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே இவர்கள் எல்லாம் விரட்டி அடிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை தமிழ்நாட்டு மக்கள் விரைவில் உணர்த்துவார்கள்.

மதுராந்தகம் கூட்டத்தில் பேசிய தலைவர்கள் எல்லாம் திமுக ஊழல் கட்சி என்று குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் சிபிஐ வழக்கு, ஐ.டி. வழக்கு, அமலாக்கத்துறை வழக்குகளை எல்லாம் பின்னால் சுமந்து கொண்டிருக்கக்கூடிய அனைத்து குற்றவாளிகளும் மேடையில் இன்று நிற்கிறார்கள். டிடிவி தினகரன் மீது, அந்நிய வங்கியில் ஒன்றரை லட்சம் டாலர் முதலீடு செய்தது தொடர்பாக அமலாக்கத்துறை ஃபெமா வழக்கு உள்ளது. இரட்டை இலை சின்னம் பெற 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த வழக்கும் விசாரணைக்கு வர உள்ளது. மோடி அழைத்ததன் பேரில் தாங்கள் பகையை எல்லாம் மறந்துவிட்டு ஒன்றாக சேர்ந்துள்ளோம் என்று டிடிவி தினகரன் சொல்கிறார். அவர் மோடி அழைத்ததன் பேரில் என்று சொல்லக்கூடாது. சிபிஐ, ஐ.டி., அமலாக்கத்துறை அழைத்ததன் பேரில் இணைந்துள்ளோம் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஜெயலலிதா இருந்தபோது குற்றச்செயல்கள் எப்படி தடுக்கப்பட்டதோ?, அப்படி திமுக அரசு தடுக்கவில்லை என்று பிரமர் மோடி சொல்கிறார். தமிழ்நாட்டில் குற்றச்செயல்கள் முறையாக பதிவு செய்யப்படுவதாக மோடி அரசின் குற்ற ஆவணக் காப்பகம் தெரிவிக்கிறது. இதே உத்தரபிரதேசத்தில் ஆயிரம் குற்றங்கள் நடைபெற்றால் 10 தான் பதிவு செய்யப்படும். அதனால் தான் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சட்டம் ஒழுங்கு சரியில்லாவிட்டால் எப்படி ஜிடிபி இரட்டை இலக்கத்தில் வரும்?

நீதிமன்றம் சனாதனத்தின் படி தீர்ப்பு சொல்கிறபோது, அதை எதிர்த்து கேட்கக்கூட வக்கில்லாத மாநிலமா தமிழ்நாடு? நீதிமன்றமாக இருந்தாலும் தவறு செய்கிறபோது, அரசியல் சட்டப்படி நடக்காமல் தீர்ப்பு சொல்லாதபோது அதை எதிர்த்து கேட்கக்கூடிய வல்லமை பெற்ற மாநிலம் தான் தமிழ்நாடு. அப்படி சனாதன தர்மப்படி தீர்ப்பு சொன்னால் அவர்கள் மீது நாடாளுமன்றத்தில் இம்பீச்மெண்ட் கொண்டுவருகிற திறமை கொண்டது தான் திமுக அரசு. ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டு, அதிமுகவில் இருந்து விரட்டி விடப்பட்டவர் டிடிவி தினகரன். அவருடைய மறைவுக்கு பின்னர் சசிகலாவால் கொண்டுவரப்பட்டவர். டிடிவி தினகரன் அதிமுக கிடையாது. ஓபிஎஸ், ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டு மூன்று முறை முதலமைச்சர் ஆக்கப்பட்டவர். அவருக்கு ஆளுமை இல்லாதவர் என்று நிரூபணம் ஆகிவிட்டது.

எடப்பாடி பழனிசாமியும் ஆளுமை இல்லாதவரே. மதுராந்தகம் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, எங்காவது எடப்பாடி பழனிசாமி  முதலமைச்சர் வேட்பாளர் என்று சொன்னார்களா? பாஜக – என்டிஏ ஆட்சி என்று தான் அவர் சொன்னார். எடப்பாடி பழனிசாமியை தெரிந்தே தான் ஏமாற்றுகிறார்கள். யார் தலைமையில் ஆட்சி? எந்த மாதிரியான ஆட்சி என்று பிரதமர் மோடி சொல்லவே இல்லை.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நூற்றாண்டுகளாக தீபம் ஏற்றப்படும் நிலையில், பிரதமர் மோடி ஏற்றவில்லை என்று பொய் சொல்கிறார். தமிழ்நாட்டிற்கு 11 லட்சம் கோடி பணம் கொடுத்ததாக பிரதமர் சொல்கிறார். நான் பல்வேறு இடங்களில் தேடியும் அதற்கான தரவுகள் கிடைக்கவில்லை. தமிழ்நாடு ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் பொருளாதாரத்தை தொடர்ந்து 4 மடங்காக உயர்த்தியுள்ளது. ஆனால் மத்தியில் 12 வருடங்களாக ஆட்சியில் இருக்கும் மோடியால் இரண்டரை மடங்கு கூட பொருளாதாரத்தை உயர்த்த முடியவில்லை. ஆனால் தமிழ்நாட்டிற்கு 3 லட்சம் கோடி பணம் கொடுத்துள்ளதாக சொல்லி மக்களை ஏமாற்றுகிறார். அவர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் என்று நயினார் நாகேந்திரனை பேச வைத்து ஏமாற்றலாம். தேர்தல் முடிந்த உடன் பிரதமர் எப்போது எடப்பாடியை முதலமைச்சர் என்று சொன்னார் என மாற்றிவிடுவார்கள்.

பாஜக- அதிமுக இடையிலான ரகசிய உடன்படிக்கையின்படி தமிழ்நாட்டில் உள்ள 18 இந்து கோவில்கள் பாஜகவிடம் ஒப்படைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. சிறுபான்மையினர் வழிபாடு நடத்தக்கூடாது. அவர்கள் பேரணி செல்லக்கூடாது என்பது போன்ற 20 கட்டுப்பாடுகளை எடப்பாடி பழனிசாமியிடம் பாஜக கொடுத்துள்ளது. அதை ஏற்றுக்கொண்டால் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர். இந்து சமய அறநிலையத்துறையை ஹெச்.ராஜாவிடம் கொடுத்துவிட வேண்டும். சிதம்பரம் கோவில் அர்ச்சகர்கள் அனைவரும் நிரந்தரம் ஆக்கப்பட வேண்டும். குல தெய்வ கோவில்களில் ஆடு, கோழி பலியிட கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இவற்றை ஏற்காவிட்டால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆக முடியாது. ஆனால் இந்த நிபந்தனைகளை அவர் ஏற்றுக்கொண்டுவிட்டார் என்று தான் தகவல் வெளியாகி உள்ளது. அதன் உண்மை தன்மை குறித்து நமக்கு தெரியாது.

பாஜக எஸ்.ஐ.ஆர் மூலம் வாக்காளர்களை நீக்கி, தங்களுக்கு தேவையானவர்களை வெற்றி பெற வைத்துவிடும். அதன் காரணமாகவே பாஜகவினர் இவ்வளவு தைரியமாக பொய் பேசுகிறார்கள். தமிழ்நாட்டிற்கு 11 லட்சம் கோடி கடன் கொடுத்தற்கு எந்த தரவுகளும் கிடையாது. பிரதமர் மோடி எந்த திட்டத்திற்கு எவ்வளவு கொடுத்தோம் என்று பத்திரிகை வாயிலாக விளக்கம் அளிக்க வேண்டும். அதானிக்கு கொடுத்ததை எல்லாம் அவர் தமிழ்நாட்டிற்கு கொடுத்த கணக்கில் சேர்க்கக்கூடாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ