spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஅஜித்குமார் மரணம்: ஏட்டு தந்த தகவல்! நீதிபதி அதிரடி! உடனடி ஆக்சனில் ஸ்டாலின்!

அஜித்குமார் மரணம்: ஏட்டு தந்த தகவல்! நீதிபதி அதிரடி! உடனடி ஆக்சனில் ஸ்டாலின்!

-

- Advertisement -

அஜித்குமார் மரண விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கோரியதது இதுவரை முதலமைச்சர்கள் யாரும் செய்யாத நிகழ்வு. இதன் மூலம் தமிழக அரசு நீதியின் பக்கம் நிற்கிறது. காவல்துறையின் பக்கம் அல்ல என்று தெளிவுபடுத்தி உள்ளது என்று ஊடகவியலாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

திருப்புவனம் அஜித்குமார் மரணம் தொடர்பான நீதிமன்ற விசாரணை காட்சிகள் வெளியாகி இருக்கும் நிலையில், இது தொடர்பாக ஊடகவியலாளர் சதிஷ் அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெற்ற விசாரணை தொடர்பான மூன்று வீடியோக்கள் வெளியாகி உள்ளன. போலீசாரை நோக்கி நீதிபதியின் கேள்விகள் ஒவ்வொன்றும் ஆக்ரோஷமாக இருந்தன. அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிக்கான விசாரணைக்கு முழுக்க முழுக்க ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்தார். வழக்கமாக இதுபோன்ற வழக்குகளில் காவல்துறைக்கு ஆதரவாகத்தான் அரசு இயந்திரம் செயல்படும். சாத்தான்குளம் ஜெயராஜ் – பெனிக்ஸ் வழக்கில் அப்படிதான் செயல்பட்டார்கள். அஜித்குமார் வழக்கில் நீதிபதி ஒவ்வொன்றாக தோண்டி எடுத்தார். போலீசார் பைப் வைத்து அடித்தார்கள் என்கிறார்கள். மரக்குச்சி வைத்து அடித்தார்களே அது எங்கே? என்று நீதிபதி கேட்கிறார். ஏ.எஸ்.பி சுகுமாறன் என்பவர், அங்கு கிடந்த ஆதாரங்கள் எல்லாவற்றையும் சாக்குப்பையில் அள்ளி எடுத்துச்சென்றதாக நீதிபதி கூறுகிறார். அப்போது ஆதாரங்களை மூடி மறைக்க போலீஸ் வட்டாரத்தில் முயற்சிகள் நடைபெற்றுள்ளன. சிசிடிவி காட்சிகளையும் காவல்துறையினர் கைப்பற்றி உள்ளனர். அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை இதுவரை அவரது குடும்பத்திற்கு வழங்கப்படவில்லை என்று வழக்கறிஞர் ஹென்றி திபேன் தெரிவித்துள்ளார்.

அஜித்குமார் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கையில் மதுரை அரசு மருத்துவமனை டீன் சரியான தகவல்களை அளிக்கவில்லை. இதற்கு முன்னர் சந்தோஷ் என்பவரது மரண வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிரேத பரிசோதனை அறிக்கை வழங்குவது தொடர்பான விரிவான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஆனால் இந்த உத்தரவுகள் எதுவும், பின்பற்றப்படவில்லை. இந்நிலையில், நீதிபதி, மதுரை அரசு மருத்துவமனை டீனை நேரில் அழைத்து, பிரேத பரிசோதனையில் நீதிமன்ற உத்தரவுகள் பின்பற்றப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். நீதிபதிகள் இந்த விவகாரத்தில் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் என்பது யாரும் எதிர்பார்க்காதது ஆகும். பிரேத பரிசோதனையின்போது 2 வழக்கறிஞர்கள் உடன் இருந்ததால்தான் உண்மைகள் வெளிவந்துள்ளன. பிரேத பரிசோதனை அறிக்கையில் அஜித்குமாரின் உடலில் 44 இடங்களில் காயங்கள் இருந்துள்ளன. கிட்டத்தட்ட உடலில் காயங்களே இல்லாத இடமில்லை என்று சொல்லலாம். அஜித்குமாரின் வாயில் மட்டும்தான் மிளகாய் பொடி தூவப்பட்டதாக சொல்லப்படுகிறது. அஜித்குமாரை போலீசார் தாக்குவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை கழிவறையில் மறைந்திருந்து எடுத்த கோயில் பணியாளரை நீதிபதி நேரில் அழைத்து விசாரித்தார்.

அஜித்குமார் மரணத்தில் சி.எஸ்.ஐ.ஆர் கிடையாது. எப்ஐஆர் கிடையாது. நிகிதா என்ற பெண் யாரிடம் போன் செய்து சொன்னார் என்று தெரியவில்லை. வாய்மொழியில் புகார் அளித்தேன் என்று சொல்கிறார். அப்படி சொன்னால் 6 பேர் கொண்ட குழு போகாது. நீதிபதிகளின் உத்தரவு காரணமாக தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள எஸ்.பி தனிப்படைகளை கலைக்க டிஜிபி உத்தரவிட்டு உள்ளார். அஜித்குமாரை தாக்கிய 5 பேரும், காவலர் மற்றும் தலைமை காவலர் பொறுப்பில் உள்ளவர்கள். தற்போதுவரை ஆதாரங்களை அள்ளிச்சென்ற ஏ.எஸ்.பி. சுகுமாறன் ஏன் கைது செய்யப்படவில்லை? அஜித்குமாருக்கு எதிராக எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கப்படாத நிலையில், 6 பேர் கொண்ட தனிப்படையை அனுப்பியது யார் என்று கேள்வி எழுகிறது. மானாமதுரை காவல் நிலையத்தில் இருந்துதான் இந்த தனிப்படை சென்றுள்ளது. இந்த விவகாரத்தில் மாவட்ட எஸ்.பி.ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். மானாமதுரை டிஎஸ்பி சண்முக சுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவரை ஏன் கைது செய்யவில்லை? சிஸ்டம் சரிசெய்யப்பட வேண்டும் என்றால்? உயர் அதிகாரிகளின் அதிகாரம் கண்காணிக்கப்பட வேண்டும்.

சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பான விவகாரத்தில் அமைக்கப்பட்ட நீதிபதி சந்துரு ஆணையம் பரிந்துரை வழங்கியுள்ளது. அந்த ஆணையம் வழங்கிய பரிந்துரைகளில் மிகவும் முக்கியமானது காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்படுவது. மற்றொன்று  அந்த ஆணையம் புகாருக்கு உள்ளாகும் காவல்துறையினரை தன்னிச்சையாக நேரில் அழைத்து விசாரிக்கும் அதிகாரம் கொண்டதாகும். ஆனால் அந்த நடவடிக்கை அரசியல், அதிகாரம் காரணமாக தொடர்ந்து தடைபட்டு வருகிறது. இந்த வழக்குடன் சேர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீதிபதி சந்துரு ஆணைய பரிந்துரைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும். அஜித்குமார் மரண விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்து வருகின்றன. அப்படி இருக்கும்போது அரசு தரப்பில் செயல் மூலமாக பதில் அளிக்கப்பட்டது. முதலில் துறை ரீதியாக நடவடிக்கை. பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பிறகு 5 பேரும் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் அரசு தரப்பில் நீதியின் பக்கம் நிற்பதாகவும், காவல்துறையின் பக்கம் நிற்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். நாம் எதிர்ப்பார்க்க முடியாத ஒன்று என்ன என்றால்? முதலமைச்சர் ஸ்டாலின், அஜீத்குமாரின் தாயார் மற்றும் சகோதரனிடம் மன்னிப்பு செல்போனில் பேசினார். எடுத்த உடன் சாரி கேட்கிறார். இந்த பண்பு வேறு எந்த முதலமைச்சரிடம் நாம் பார்த்தது கிடையாது.

போதை சாம்ரஜியத்தால் தமிழகம் சீரழிந்து வருகிறது - மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்

முதலமைச்சர் எந்த இடத்திலும் காவல் துறை செய்ததை நியாயப்படுத்தவில்லை. நான் உங்கள் பக்கம் நிற்கிறேன் என்று சொல்கிறார். தைரியமாக இருங்கள். தப்பு நடந்துவிட்டது என்று சொல்கிறார். ஏனென்றால் அது முதலமைச்சரின் துறையாகும். ஸ்டாலினுக்கோ, எடப்பாடிக்கோ பொதுமக்களை கொல்ல வேண்டும் என்கிற நோக்கம் கிடையாது. ஆனால் சாத்தான் குளம் சம்பவத்தின் எடப்பாடி பழனிசாமி என்ன என்ன கருத்துக்களை கூறினார். எப்.ஐ.ஆர். பதிவு செய்வதற்கும், சிபிஐக்கு மாற்றவும் எதிர்க்கட்சிகள் எப்படி போராட வேண்டி இருந்தது. அந்த இடத்தில்தான் எடப்பாடியும், ஸ்டாலினும் வேறுபடுகிறார்கள். முதலமைச்சரின் நடவடிக்கை என்பது மிகப்பெரிய மாற்றம் என்று மூத்த வழக்கறிஞர் ஹென்றி திபேன் கூறுகிறார். முதலமைச்சரே தப்பு நடைபெற்றுவிட்டது. சாரி என்கிறபோது எஸ்.பி, டிஎஸ்பி போன்றவர்கள் எவ்வளவு தூரம் யோசிக்க வேண்டி இருக்கும். இனி ஒரு வழக்கு வந்தால் அதன் மீதான நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள். தவறு செய்கிற அதிகாரிகளுக்கு இது அச்சத்தை ஏற்படுத்தும். அஜித்குமார் சகோதரருக்கு, ஆவினில் வேலை தரப்பட்டுள்ளது. அவர்களுக்கு நிலம் மற்றும் திமுக சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டு உள்ளது. இது அஜித்குமாரின் உயிருக்கு நிகரானது கிடையாது. இருந்தபோதும் ஒரு தவறு நடைபெற்றால் அரசு பாதிக்கப்பட்டவர்களுடன் நிற்போம் என்று அஜித்குமார் குடும்பத்திற்கு மட்டுமின்றி தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் ஒரு சாட்சியாக இருக்கிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ