கல்லுக்குள் ஈரம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அருணா மற்றும் அவரது கணவர் தொழிலதிபர் மன்மோகன் குப்தா தொடர்பான நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்க்கொண்டு வருகின்றனா்.இந்தியா முழுவதும் உடற்பயிற்சி கூடங்கள் ஹெல்த் கிளப்புகள் அமைத்த தல்வால்கர்ஸ் குழுமம் வங்கி மோசடியில் தொடர்பு உள்ளதால் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டனா்.
மேலும், மன்மோகன் குப்தா மற்றும் நடிகை அருணா ஜிம் பாக் பிட்னஸ் சிஸ்டம் என்ற நிறுவனத்தின் இயக்குனர்கள் ஆவர். உடற்பயிற்சி கூடங்களுக்கு தேவையான உபகரணங்களை சப்ளை செய்யும் இந்த நிறுவனம் தல்வால்கர்ஸ் குழுமத்திற்கு அவர்கள் உருவாக்கிய உடற்பயிற்சி கூடங்களுக்கு உபகரணங்களை சப்ளை செய்ததாக கூறி மோசடியில் ஈடுபட்டனா்.

தல்வால்கர்ஸ் குழுமம் சிரியன் கத்தோலிக் வங்கியில் வாங்கிய கோடிக்கணக்கான ரூபாய் வங்கி கடனை சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்து மீண்டும் தங்கள் குழுமத்திற்கு பணத்தை பெற்றுக் கொள்ளும் வகையில் ஜிம் பாக் பிட்னஸ் சிஸ்டம் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனமும் நித்தாஷ் இன்ஜினியரிங் கன்சல்டிங் நிறுவனமும் உதவியது தெரிய வந்துள்ளது.
28.40 கோடியை ஜிம்பாக் ஃபிட்னஸ் சிஸ்டம் மற்றும் நிதாஷ் இன்ஜினியரிங் அண்ட் கன்சல்டிங்கிற்கு மாற்றப்பட்டு மீண்டும் தல்வால்கர்ஸ் குழுமத்துக்கே சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்பயர் ஃபிட்னஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் தல்வால்கர்ஸ் ஹெல்த் கிளப் பிரைவேட் லிமிடெட் ஆகியவை 2018 ஆம் ஆண்டில் மும்பை, நாசிக் மற்றும் புனே நகரங்களில் 20 ஜிம்களைத் திறப்பதற்காக சிரியன் கத்தோலிக்க வங்கியிடமிருந்து கடன் பெற்றன. வங்கியில் இருந்து மோசடியாக கடன் பெற்று, அந்த நிதியை வேறு நோக்கத்திற்காகப் பயன்படுத்தியதாக தல்வால்கர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு, மும்பை பொருளாதார குற்றப்பிரிவில் நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த ஹெல்த் கிளப் சங்கிலி தற்போது மொத்தம் ₹ 450 கோடி கடன் திருப்பிச் செலுத்தாமல் பல்வேறு வங்கிகளை மோசடி செய்ததாக அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.