இந்து சமய அறநிலையத்துறை எம்ஜிஆர் காலம் முதல் கல்லூரி நடத்தி வரும் நிலையில், அதை எதிர்த்து அதிமுக பேசுகிறபோது அது பாஜகவின் குரலாகத்தான் ஒலிக்கிறது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

பாமக, மதிமுகவில் நிலவி வரும் மோதல்கள் குறித்தும், இந்து சமய அறநிலையத் துறை குறித்து எடப்பாடி பழனிசாமி முன்வைத்துள்ள விமர்சனங்கள் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- பாமகவுக்கும் அதன் பழைய கொள்கைகளுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. 1989ஆம் ஆண்டில் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்டது. அதற்கு முன்னதாக வன்னியர் சங்கத்தின் செயல்பாடுகள். இந்த 40 வருடங்களில் வன்னியர்களுக்கும் பெரிய மனமாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். சமூக வலைதளங்கள் மூலம் தகவல்கள் மக்களை போய் சேர்கிறது. ஒரு பெரிய இளைய தலைமுறை மாற்றி மாற்றி வந்துள்ளோம். திமுக ஏன் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றால்? வன்னியர்களுக்காக இருக்கின்ற ஒரு கட்சி. நம்மால் பாமக கட்சியில் பிளவு ஏற்பட்டால் நம் மீது பெரிய அளவில் வருத்தம் கொள்வார்கள். முக்குலத்தோர் சமுதாய வாக்குகள் எப்படி எடப்பாடியை பாதிக்கிறதோ, அதுபோல வன்னியர்களின் வாக்கு நம்மை பாதிக்கக்கூடாது என்று எச்சரிக்கையாக இருக்கிறார்கள். அதனால் வெளிப்படையாக பாமகவினர் எல்லாம் எங்களுடன் வந்து சேருங்கள் என்று சொல்ல மாட்டார்கள். ராமதாஸ், தன்னுடைய பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது என்று சொல்கிற அளவுக்கு வந்துவிட்ட பிறகு, தேர்தல் ஆணையத்தில் சென்று மனு அளிக்கும் அளவுக்கு சென்றுவிட்ட பிறகு பாமக அதிகாரப்பூர்வமாக இரண்டாக உள்ளதாக தான் அர்த்தமாகும்.

வைகோவும், அவரது மகனும் சேர்ந்துதான் மதிமுகவை அழிக்கிறார்கள் என்கிறபோது, ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ஆகியோர் சேர்ந்துதானே பாமகவை அழிக்கின்றனர். ராமதாஸ், அன்புமணி ஆகிய இருவருக்குமே பழைய வாக்குவங்கி கிடையாது. மைய நீரோட்ட அரசியலில் நேரடியாக சென்றுவிடுவார்கள். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அளித்த வாக்கு மூலத்தில் மாத்தையா பற்றி சொன்னார்கள். இது ஒரு சிக்கலான விஷயமாகும். எதற்காக வைகோ அந்த உதாரணத்தை சொல்கிறார். வைகோ யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்திருந்தார். அதை பின்னர் அனைத்து ஊடகங்களும் ஒளிபரப்பின. இதனால் அந்த கட்சிக்கு பாதிப்பு ஆகும். ஆனால் அது குறித்து அவர்கள் கவலைப்படவில்லை. இதேபோன்ற பாதிப்பு பாமகவிலும் தொடர்கிறது. அது குறித்து அவர்களும் கவலைப்படுவது போல தெரியவில்லை. தங்களுடைய வாக்கு வங்கி நிரந்தரம் என்று நினைக்கிறார்கள். வாட்ஸ்அப் யுகத்தில் எது நிரந்தர வாக்கு வங்கி? 1996 கால கட்டத்தில் மதிமுகவின் வாக்கு வங்கி 6 சதவீதமாக இருந்தது. இன்றைக்கு ஒரே ஒரு எம்.பி. சீட் அளவுக்கு தங்களை தாங்களே சுருக்கி கொண்டார்கள். வாக்கு வங்கியே குறைந்துவிட்டது. அதையே இரண்டாக பிரித்தால், மிச்சம் என்ன இருக்கும்? இதேபோல் பாமகவின் வாக்கு வங்கியும் குறைந்துவிட்டது. அதையும் இரண்டாக, மூன்றாக பிரித்தால் என்ன இருக்கும்.
ராமதாஸ் – அன்புமணி இடையிலான மோதலை பாமகவின் அடிமட்ட தொண்டர்கள் ரசிக்கவில்லை. இருவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றுதான் அவர்கள் நினைக்கின்றனர். அதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிந்துவிட்டது. பாமகவின் அடிப்படை கொள்கை என்பது வன்னியர்களுக்காக இடஒதுக்கீடு ஆகும். மதிமுகவை பொருத்தவரை ஈழ விடுதலையாகும். மற்ற அனைத்துக்கட்சிகளும் திராவிட இயக்கம், இடஒதுக்கீடு என்றுதான் சொல்லும். தமிழ்நாட்டில் அடிப்படை கொள்கைகளை பாதுகாக்க போகும் முதன்மையான நபர் யார் என்றுதான் கேள்வி எழும். திமுகவா?, மதிமுகவா? பாமகவா?, விஜயா? என கேள்வி எழும். அதை வாக்காளர்கள் முடிவு செய்வார்கள். இந்த விவகாரத்தில் இரண்டாவது இடத்தில் இருந்த அதிமுக தற்போது பாஜகவின் குரலாக ஒலிக்கிறது.
எடப்பாடி பழனிசாமி, எதற்காக இந்து சமய அறநிலையத்தை விஷயத்தை அவர் சொன்னார் என்றே எனக்கு புரியவில்லை. ஏனென்றால் அது 100 வருஷம் பழமையான சட்டம். 1920ல் பனகல் அரசர் கொண்டுவந்த சட்டம் அது. அறநிலையத்துறை காசில் கல்லூரி கட்டுவதை கேள்வி எழுப்பிவிட்டு, அதை சமாளிக்க நான் நிர்வாகத்தை சொன்னேன் என்று எடப்பாடி சொல்கிறார். உண்மையில் கல்லூரி நிர்வாகத்தை பல்கலைக் கழகங்கள் பார்க்கின்றன. நிதி மட்டும்தான் வேறு அமைப்பு வழங்கும். அறநிலையத்துறை நிர்வாகம் செய்கிற கல்லூரிகள் மிகவும் குறைவாக தான் உள்ளன. அறநிலையத்துறை சட்டத்தில் அதற்கு இடம் உள்ளது. அது உச்சநீதிமன்றம் வரை சென்று முடிவான விஷயமாகும். அப்போது எடப்பாடி பழனிசாமியின் கேள்வி அடிபட்டு போய்விட்டது. தற்போது என்ன பாய்ண்ட் என்றால் அறநிலையத்துறை எம்ஜிஆர் காலம் முதலே கல்லூரிகளை நடத்தி வருகிறது. அதை எதிர்த்து அதிமுக பேசுகிறபோது அது பாஜகவின் குரலாகத்தான் ஒலிக்கிறது. ஏனென்றால் கோயிலில் இருந்து அரசு வெளியேற வேண்டும் என்பது அவர்களின் கொள்கையாகும். அப்போது திராவிட இயக்க கொள்கை, அதனுடைய முதன்மை பாதுகாவலர் என்கிற விஷயத்தில் அதிமுக பின்னால் சென்றுவிடும் அல்லவா?, இவ்வாறு அவர் தெரிவித்தார்.