spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைவிரைவில் எடப்பாடி அதிமுகவில் இருந்து நீக்கம்? கட்டம் கட்டும் அமித்ஷா!

விரைவில் எடப்பாடி அதிமுகவில் இருந்து நீக்கம்? கட்டம் கட்டும் அமித்ஷா!

-

- Advertisement -

எடப்பாடி பழனிசாமியை கட்சியை விட்டு வெளியேற்றிவிட்டு, செங்கோட்டையனை உள்ளே கொண்டுவருவதற்கான பணிகளை பாஜக மேற்கொண்டு வருகிறது. எடப்பாடி ஒன்று சிறை செல்ல வேண்டும். அல்லது கட்சியில் டம்மி ஆக்கப்படலாம் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

umapathi

we-r-hiring

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று மீண்டும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ள நிலையில், அதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி வெளியிட்டு உள்ள காணொலி பதிவில் தெரிவித்துள்ளதாவது:- பாஜகவின் ராஜதந்திரியாக கருதப்படும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், தமிழ்நாட்டில் மீண்டும் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று தெரிவித்துள்ளார். எதற்காக இந்த பேட்டி என்றால்? மக்களை சந்திக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கூட்டணி ஆட்சி கிடையாது. அதிமுக தனித்து தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று கூறினார். பாஜக மாநில தலைவரான நயினார் நாகேந்திரனும் அதை உறுதிபடுத்தும் வகையில் கருத்துக்களை தெரிவித்தார். ஆனால் நாம் பல மாதங்களாக சொல்லி வருகிறோம். பாஜகவிடம், அதிமுக அடகு வைக்கப்பட்டு விட்டது. அதை மீட்கவே முடியாது. அப்படி ஏதேனும் மீட்க முயற்சி செய்தால் இரட்டை இலை சின்னத்தை பறித்துக்கொண்டு, பொதுச்செயலாளரை மாற்றிவிடுவார்கள் என்று சொல்லி வருகிறோம். எடப்பாடி பழனிசாமிக்கு மாற்றாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அவர்கள் வைத்துள்ளனர். அவரை பொறுப்பில் அமர்த்திவிட்டு, எடப்பாடி பழனிசாமியை தூக்கிவிடுவார்கள் என்று சொல்லி வருகிறோம். அதற்கான காய் நகர்த்தல்களும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமித்ஷா, வம்படியாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் மீண்டும் கூட்டணி ஆட்சி என்று செல்லியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் கல்யாண் சிங் காலத்திற்கு பிறகு நீண்ட காலமாக பாஜக ஆட்சிக்கு வராமல் இருந்தது. அங்குள்ள 14 சதவீத பிராமண சமூகத்தினர் மாயாவதிக்கு வாக்களித்து அவரை முதலமைச்சர் ஆக்கினார்கள். அமித் ஷா, உத்தரபிரதேச மாநிலத்தில் களமிறங்கியபோது அங்கு முலாயம் சிங்கின் சமாஜ்வாதி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சி பலமாக இருந்தன. இவர்கள் இருவரையும் ஒழித்துக்கட்டினால் தான் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர முடியும் என்று அமித்ஷா முடிவெடுத்தார். பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த மாயாவதி, தற்போதும் அவர்களுக்கு தான் ஆதரவளித்து வருகிறார். இந்நிலையில், உ.பி.யில் பாஜக முதல் முறையாக ஆட்சிக்கு வந்தபோது, மாயாவதி ஆட்சிக்காலத்தில் முறைகேடாக சொத்து சேர்த்த வழக்கில் கைதாகினால் ஆயுள் முழுவதும் சிறையில் கழிக்க நேரிடும். எனவே அவர் தங்கள் கூட்டணிக்கு வந்துவிட வேண்டும். தாங்கள் சொல்வதை மட்டும்தான் கேட்க வேண்டும் என்று அமித்ஷா மிரட்டல் விடுத்தார். அதற்கு பயந்த மாயாவதி, அவர்களுக்கு அடங்கி சென்றுவிட்டார். உ.பி.யில் மூன்று முறை முதலமைச்சராக இருந்த முலாயம் சிங்கையும், அவரது மகன் அகிலேஷையும் பிரித்தார்கள். அகிலேஷ் கொள்கையில் பிடிப்புடன் இருந்த நிலையில், முலாயம் சிங் தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பயந்து வேறு ஒரு கொள்கை முடிவை எடுத்தார். அதனால் அகிலேஷ் கட்சியை கைப்பற்றினார். முலாயமை கட்சியில் இருந்து வெளியேற்றினார். இந்த இரண்டு பிரதான கட்சிகளில் ஒன்றை உடைத்துவிட்டார். மற்றொன்றை அமைதியாக்கிவிட்டார். அதனால் அங்கு பாஜக ஆட்சி தொடர்கிறது.

7 மாநில இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு

இதேபோல் மகாராஷ்டிராவில் சென்று உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியை உடைத்து, கட்சியில் சாதாரண நபரை முதலமைச்சர் ஆக்கினார்கள். சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியையும் உடைத்தார்கள். இதேவேலையை தற்போது தமிழ்நாட்டில் பார்க்கப் போகிறார்கள். எடப்பாடி பழனிசாமியிடம் கூட்டணி ஆட்சி. முதலமைச்சர் பதவியை இரு கட்சிகளுக்கும் பாதி நாட்கள் அனுபவிப்பது. இதற்கு சம்மதித்ததால் தான் நீங்கள் இருப்பீர்கள், இல்லாவிட்டால் சிறைக்கு சென்று விடுவீர்கள் என்று மிரட்டுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி இதற்கு சம்மதிப்பது போல பம்மாத்து வேலைகளை காட்டிக்கொண்டு  காய்களை நகர்த்தினார். நாடாளுமன்றத் தேர்தலின்போது கூட்டணியில் இருந்து வெளியேறி தான் ஒரு பெரிய ராஜதந்திரி போன்று எடப்பாடி காண்பித்துக்கொண்டார். பாஜகவை தமிழ்நாட்டில் ஒரு இடம் கூட வர முடியாமல் செய்துவிட்டார். உ.பி., மகாராஷ்டிரா போல தமிழ்நாட்டில் அமித் ஷாவின் ராஜதந்திரம் எடுபடவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அமித்ஷா, செங்கோட்டையனை கையில் எடுத்து, அவர் முதலமைச்சர் ஆக்கிவிட்டு, கூட்டணி ஆட்சி அமையும் என்று முடிவு செய்கிறார்கள். பாஜக குறைவான இடங்களை பெற்றாலும் அவர்களுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு கொடுத்து, அமைச்சர் ஆக்குவது. மேலும் அதிமுகவை இரண்டாக உடைத்து ஒரு பிரிவை கைப்பற்ற வேண்டும். அல்லது அதிமுகவை முழுமையாக கைப்பற்றியோ அல்லது அழித்தோ அடுத்த தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்பதுதான் அவர்களின் திட்டமாக இருக்கிறது.

நடப்பு தேர்தலுக்கான திட்டம் என்பது இரட்டை இலை சின்னத்தை முடக்கிவிட்டு, தனக்கு அடிமையான ஒருவருக்கு சின்னத்தை கொடுப்பது என்ற முடிவில் உள்ளனர். தினகரன், ஓபிஎஸ் போன்றவர்களை வைத்து, இவர்கள் தான் உண்மையான அதிமுக என்று சொல்லி 60 தொகுதிகளில் போட்டியிடுவார்கள். அதிமுகவின் செல்வாக்கில் 20 தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட்டு, கூட்டணி ஆட்சி என்று சொல்வார்கள். அதிமுக 100 இடங்களில் வெற்றி பெற்றாலும், பாஜக 20 இடங்களை வைத்து துணை முதலமைச்சர் பதவியை வாங்கி விடுவார்கள். பின்னர் ஆட்சியை கைப்பற்றி முதலமைச்சராகி விட்டு, அதிமுக எம்எல்ஏக்களை எல்லாம் விலைக்கு வாங்கி அடுத்த 4 வருடங்களுக்கு ஆட்சி நடத்துவது தான் அமித்ஷாவின் திட்டமாகும். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி, பாஜக சொல்வதை எல்லாம் தான் கேட்பதாகவும், பாஜகவின் இந்துத்துவா கொள்கையை தான் பின்பற்றுவதாகவும், ஆனால் முதலமைச்சர் வேட்பாளர் நான் தான் என்று மட்டும் சொல்லுங்கள் என்று கேட்கிறார். ஆனால் நாங்கள் சொல்வதை மட்டும் கேளுங்கள் என்று பாஜக சொல்லிவிட்டது. சரி பாஜக உடன் கூட்டணிக்கு சென்றால் நம்மை விட்டுவிடுவார்கள் என்று எண்ணி எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு சென்றார். ஆனால் கூட்டணிக்குள் எடப்பாடியை வரவிட்டு, கூட்டணி ஆட்சி என்று அடிக்கிறார்கள்.

இந்நிலையில் தான் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்கும் என்று சொல்கிறார். அப்போது எடப்பாடியை விட்டால் தானே அதிமுக தனியாக ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா நினைக்கிறார். முதலில் தேர்தலுக்கு முன்னதாகவே எடப்பாடியை தூக்கிவிட்டு, செங்கோட்டையன், ஓபிஎஸ் போன்றவர்களை கொண்டுவந்துவிட்டு அதிமுகவை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரலாம் என நினைத்தார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி இறங்கி சென்றதால், அவரை விட்டு வைத்திருக்கிறார்கள். எனினும் அவரால் இதை ஏற்கமுடியவில்லை. அதனால் அன்வர்ராஜா போன்றவர்களை தூண்டிவிட்டு அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்று சொல்கிறார். இந்தநிலையில் தான் அமித்ஷா இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழை கூப்பிட்டு பேட்டி அளித்துள்ளார். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிதான். அதிமுகவை சேர்ந்த ஒருவர் முதலமைச்சர் ஆவார் என்கிற பாணியில் பேட்டி அளித்துவிட்டு சென்றார்.

டிச.3-க்குள் பூத் கமிட்டி பணிகளை முடிக்க அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்!
Photo: AIADMK

இதைதான் நாம் சொல்லிக் கொண்டே இருக்கிறோம். தேர்தலுக்கு முன்பாகவே எடப்பாடியை தூக்கிவிடுவார்கள். அல்லது தேர்தல் முடிந்ததும் கட்சியை உடைத்து விடுவார்கள். இல்லாவிட்டால் இரட்டை இலை சின்னத்தை முடக்கிவிட்டு, செங்கோட்டையனை உள்ளே கொண்டுவருவார்கள் என்று சொல்லி இருந்தேன். அதற்கான கால நேரம் நெருங்கிக் கொண்டே இருக்கிறது. இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் எடப்பாடி மீது கைவைத்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். ஒன்று அவர் சிறைக்கு செல்ல வேண்டும். அல்லது அவர் கட்சியில் டம்மி ஆக்கப்பட வேண்டும். அதுதான் தற்போதைய நிலைமை ஆகும். எடப்பாடி பழனிசாமி பேட்டியில் ஆவேசமாக சொல்லலாம் கூட்டணி ஆட்சி கிடையாது என்று. ஆனால் அதிமுக என்கிற கட்சியை பாஜகவிடம் அடகுவைத்துவிட்டார்கள் என்பதை ஒருநாள் புரிந்துகொள்வீர்கள். தற்போது அமித்ஷாவின் பேட்டி வந்துவிட்டது. அடுத்தபடியாக எடப்பாடிக்கு தான் பிரச்சினை. எடப்பாடி தற்போதே அரசியலை விட்டு வெளியே போய்விட்டார். அவருக்கு எந்த ஆதரவும், செல்வாக்கும் கிடையாது. 2026 தேர்தலுடன் அதிமுகவுக்கு முடிவுரை எழுதிவிடுவார்கள். பாஜகவினர் உள்ளே வந்துவிட்டால்,  அதிமுகவை வாழ விடமாட்டார்கள். அழித்துவிடுவார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ