spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைவிஜயுடன் கூட்டணி! காமராஜரை வைத்து தொடங்கிய ஆட்டம்! அடித்து ஓடவிடும் திமுக!

விஜயுடன் கூட்டணி! காமராஜரை வைத்து தொடங்கிய ஆட்டம்! அடித்து ஓடவிடும் திமுக!

-

- Advertisement -

தமிழக காங்கிரஸ் கட்சியில் சிலர் விஜயுடன் கூட்டணிக்கு செல்ல முயற்சித்து வருவதாகவும், இதை திமுக அறிந்துகொண்டதால் காமராஜர் விவகாரத்தை வைத்து திமுக மீது குற்றச்சாட்டுகளை எழுப்புகின்றனர் என்றும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி குற்றம்சாட்டியுள்ளார்.

we-r-hiring

காமராஜர் விவகாரம் தொடர்பாக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நிலவி வரும் மோதலின் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி வெளியிட்டுள்ள காணொலி பதிவில் கூறியிருப்பதாவது:- முன்னாள் முதலமைச்சர் காமராஜர் குறித்து, திமுக துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா பேசியது சர்ச்சையாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியில் காணாமல் போயிருந்த பலரும் எப்படி காமராஜரை பேசலாம்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மற்றொருபுறம் இதற்காக அண்ணாமலை போன்ற பாஜகவினரும் பொங்குகிறார்கள். அப்படி காமராஜரை குறித்து திருச்சி சிவா என்ன தவறாக சொல்லிவிட்டார் என்று பார்த்தோம் என்றால்? அப்படி தவறாக அவர் எதையும் பேசவில்லை.

காமராஜர் ஏசி அறையில் தங்கியது இல்லையா? ஏசி காரில் சென்றது இல்லையா? அவருடைய வீட்டில் ஏசி இல்லையா? என்றால் காமராஜர் ஒரு முதலமைச்சர். அவர் பட்டாடோப வாழ்க்கை வாழவில்லை. ஊழல் செய்யவில்லை. எஸ்டேட் வாங்கிப் போடவில்லை. ஆனால் அவர் தரையில் தான் படுப்பார். கஞ்சிதான் குடிப்பார் என்று சொன்னால், அதுவும் உண்மையில்லை. காமராஜர் குறித்து வரும் தகவல்களில் 75 சதவீதம் பொய்யான தகவல்களாகும். காமராஜர் தொடர்பாக பல்வேறு தவறான காணொலி காட்சிகள் பரப்பப்படுகின்றன. அதனை நிறைய பேர் பார்ப்பார்கள், வருமானம் வரும் என்பதற்காக தான் இதுபோன்று செய்கிறார்கள். இதனை எடுத்து சிலர் பட்டிமன்றங்களிலும் பேசுகிறார்கள்.

காமராஜர் கல்விக்கண் திறந்தவர். இந்த தேசத்திற்காகவும், தமிழ்நாட்டிற்காகவும் நிறை செய்துள்ளார். ஆனால் காமராஜர் தொடர்பாக நடக்காத நிகழ்வுகளை, தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். அதனை பட்டி மன்றங்களிலும் சிலர் எல்லாம் பேசுகின்றனர். தவறான தகவல்களை பரப்பி காமராஜரின் பெயரை டேமேஜ் செய்யும் வேலைகளில் ஈடுபடுகின்றனர். ஆனால் காமராஜரின் வீட்டில் ஏசி இருந்தது உண்மைதான். தமிழ்நாட்டின் முதலமைச்சரான காமராஜர் ஏசியில் படுப்பதில் என்ன தவறு இருக்கிறது. முதலமைச்சர் பயன்படுத்தும் காரில் ஏசி இல்லாமலா இருக்கும்? இதற்கு ஏன் இவ்வளவு கொந்தளிக்கிறார்கள் என கேள்வி எழுகிறது.

காங்கிரஸ், பாஜக போன்ற தேசிய கட்சிகளில மாநில அளவில் கூட்டணி முடிவுகளை தேசிய தலைமை தான் எடுக்கும். இங்குள்ள தலைவர்களுக்கு சீட் வழங்குவது உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் டெல்லியில் தான் எடுப்பார்கள். ஆனால் காமராஜர் விவகாரத்தில் கரூர் எம்.பி. ஜோதிமணி போன்றவர்கள் இங்கே குதிக்கிறார்கள். தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி அழிந்துபோய் ஒன்னுமில்லாத நிலையில் இருக்கிறது. திமுகவின் ஆதரவுடன்தான் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ், திமுக இல்லாவிட்டால் எதிர்க்கட்சிகளின் குரல் முழுமையாக ஒலிக்காமல் போய்விடும். இந்த சூழலில் திமுக – காங்கிரஸ் கூட்டணியை கலைத்துவிடுவதில் ஜோதிமணி மற்றும் இன்னும் சிலர் ஈடுபடுகிறார்கள்.

புறக்கடை வழியாக ஓடி உயிர்தப்பிய காமராஜர்! அந்த 2 தமிழரில் ஒருவர் கருணாநிதியா? அமித்ஷா குற்றச்சாட்டின் பரபரப்பு பின்னணி
காமராஜர் கருணாநிதி

இவர்களின் திட்டம் என்ன என்றா? விஜயுடன் போய் சேர்வது ஆகும். விஜய், காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட்டுகள் போன்றவர்கள் எல்லாம் கூட்டணி அமைத்து, அதிக இடங்களில் போட்டியிட்டு காங்கிரஸ் அதிகளவில் வெற்றி பெறுவது என்பதுதான். அப்படி செய்யும்பட்சத்தில் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் இல்லாமல், திமுக செய்துவிடும். ஜோதிமணி போன்றவர்களை தேர்தல் நேரத்தில் மட்டும் தான் பார்த்திருப்போம். அவரால் தமிழ்நாட்டிற்கு நிகழ்ந்த நன்மை என்ன என்று பார்த்தோம் என்றால்? எதுவும் கிடையாது. காங்கிரஸ் தரப்பில் இதுபோன்ற ஒரு திட்டத்தை போட்டு காய் நகர்த்துகிற போதுதான் திமுக அதை கண்பிடித்தது. அதன் பிறகுதான் காங்கிரஸ் கட்சியினர் குறித்து திமுக தரப்பில் கடுமையாக விமர்சிக்கின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து டெல்லி தலைமை கண்டுகொள்ளவில்லை. தமிழக காங்கிஸ் கட்சியினர் செய்யும் செயல்கள் காரணமாக அக்கட்சிக்கு இடங்களின் எண்ணிக்கையை திமுக குறைக்கத்தான் போகிறது. அப்படி திமுக எவ்வளவு கொடுத்தாலும் ராகுல் சரி சொல்லிவிடுவார். காரணம் மத்தியில் பாஜகவை எதிர்ப்பதற்கு 2 கட்சிகள் தான் அதிக இடங்கள் இருக்கின்றன. அது காங்கிரசும், திமுகவும்தான். ராகுல்காந்திக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். அப்படி இருக்கின்ற சூழ்நிலையில்,  தமிழக காங்கிரசில் சிலர் சைடில் கதை ஓட்டுகிறார்கள். திடீரென காமராஜர் குறித்து பேச இவர்களுக்கு அவர் மீது பாசம் எல்லாம் கிடையாது.  பாஜகவின் தூண்டுதலின் பேரில் தமிழ்நாட்டில் இருக்கின்ற ஜோதிமணி போன்றவர்கள் கொந்தளித்து கொண்டிருக்கிறார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ