கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து வயது மூப்பு காரணமாக காலமானார்.கலைஞரின் மூத்த மகனும், நடிகருமான மு.க.முத்து (77) உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தாா். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானாா். அவரது உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இவர் 1948-ல் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி பிறந்தார். 1970 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானாா்.
இவா் பூக்காாி, பிள்ளையோ பிள்ளை, அணையா விளக்கு, சமையல்காரன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளாா். நடிப்புத்திறன் மட்டுமின்றி, பல்வேறு படங்களில் தன்னுடைய சொந்தக் குரலில் பாடியுள்ளாா். 2006 ஆம் ஆண்டு தேவா இசையில் ‘மாட்டுத் தாவணி’ படத்தில் மு.க.முத்து ஒரு பாடல் பாடினார். மு.க.முத்துவை எம்.ஜி.ஆருக்கு எதிராக கொண்டு வரப்பட்டதாக கூறினாலும், இருவருக்கும் இடையே ஒரு நல்ல நட்பு இருந்தது. எம்.ஜி.ஆருக்கு போட்டியாக மு.க.முத்து கருதப்பட்டாலும், அவர் எம்.ஜி.ஆர் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். ‘பிள்ளையோ பிள்ளை’ படப்பிடிப்பிற்கு எம்.ஜி.ஆர் வந்து கிளாப் அடித்து தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மு.க.முத்துவின் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்களும், அவரது குடும்பத்தினரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனா். மு.க.முத்துவின் மரணத்தை தொடா்ந்து தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன. மு.க.முத்துவின் மரணம் திரையுலகிலும், அவரது ரசிகா்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
40 சீட்டு! பாஜக போடும் கணக்கு! மக்கள் போடும் கணக்கு தெரியுமா? தராசு ஷ்யாம் நேர்காணல்!