spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரை40 சீட்டு! பாஜக போடும் கணக்கு! மக்கள் போடும் கணக்கு தெரியுமா? தராசு ஷ்யாம் நேர்காணல்!

40 சீட்டு! பாஜக போடும் கணக்கு! மக்கள் போடும் கணக்கு தெரியுமா? தராசு ஷ்யாம் நேர்காணல்!

-

- Advertisement -

2026 தேர்தலில் பாஜக போட்டியிட்ட இடங்களில் கடந்த முறையை விட கணிசமான அளவில் வெற்றி பெற்றால், வாக்காளர்கள் வேறு திசையை நோக்கி செல்கிறார்கள் என்று அர்த்தம் என மூத்த பத்திரிகையாளர்  தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்று பாஜக கூறி வரும் நிலையில், வாக்காளர்கள் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்வார்களா? என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- திமுக, அதிமுக என இரண்டு வாக்கு வங்கிகளும், திராவிட வாக்கு வங்கியை தான் பிரித்துக்கொள்கின்றன. தமிழ்நாட்டில் 1962 வரை காங்கிரஸ் கட்சிக்கு மாற்று என்பது கம்யூனிஸ்ட் கட்சிகள் தான். 1957 தேர்தல்தான் திமுக சந்தித்த முதல் தேர்தல் 15 இடங்களை பெற்றது. அப்போது கம்யூனிஸ்ட்டுகள் வலிமையாக இருந்தனர். 1962ல் கம்யூனிஸ்ட் கட்சி வலுவிலக்க தொடங்கியதும், திமுக மாற்று அரசியலை முன்வைத்தது.

மாற்று அரசியல் முயற்சிகள் எப்போதும் இருந்துகொண்டே தான் இருக்கின்றன. விஜய் மாற்று அரசியல் சொன்னார் என்றால் அதுபோன்ற அரசியல் முயற்சிகள் நடந்துகொண்டே தான் இருக்கும். மக்கள் வாக்களிக்க வேண்டும். அது உடனடியாக நடைபெறாது.  15 சீட்டுகள் எப்படி 50 சீட்டுகள் ஆனது?. 50 சீட்டுகள் ஜெயிக்கும் அளவுக்கு அங்கே வேட்பாளர்கள் இருந்தனர். திமுக முதலமைச்சர் வேட்பாளர் முகம் இல்லாமல்தான் தேர்தலில் போட்டியிட்டது. வாக்காளர்கள் எப்போதும் புத்திசாலிகள் ஆவர். ஒவ்வொரு காலக் கட்டத்திலும் வாக்காளர்களும் தங்களை புதுப்பித்துக்கொள்கின்றனர்.

புறக்கடை வழியாக ஓடி உயிர்தப்பிய காமராஜர்! அந்த 2 தமிழரில் ஒருவர் கருணாநிதியா? அமித்ஷா குற்றச்சாட்டின் பரபரப்பு பின்னணி
காமராஜர் பெரியார்

தமிழ்நாட்டு அரசியல் என்பது இயல்பாகவே இடஒதுக்கீடு, இடஒதுக்கீடு சார்ந்த எண்ணங்கள், பட்டியல் இனம், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான முன்னேற்றம் என்று அமைந்துவிட்டது. காமராஜர் கல்விக்கண் திறந்தவர். அந்த காலத்தில் குறைந்தபட்சம் 12 கிலோ மீட்டர் தொலைவுக்குதான் ஒரு பள்ளிக்கூடம் அமைந்திருக்கும். பலர் 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு சைக்கிளை மிதித்துக்கொண்டு பள்ளிக்கு வருவார்கள். அப்போது மதிய உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். விடுதலைப் போராட்டம், அதை சார்ந்த உணவுகள் 1962 காலகட்டங்களில் குறைய தொடங்கியது. மொழி, மொழி உணர்வு, திமுக,  திமுகவுக்கு உதவி செய்த கலைத்துறை என்று 1967 வரை வந்தது. 1967-ல் இருந்த வாக்கு வங்கி என்பது, தேசிய வாக்கு வங்கி. அது சரிந்த வாக்கு வங்கியாகிவிட்டது. 25 சதவீதம் அளவுக்கு குறைந்துவிட்டது.

காங்கிரஸ் கிராமங்களில் உள்ள பிரச்சினை என்ன என்றால் சில இடங்களுக்கு நாம் போகவே முடியாது. மாற்று சமுதாயத்தினரை உள்ளே அனுமதிக்க மாட்டார்கள். நம்முடைய தந்தை, தாத்தாக்கள் போன்றவர்கள் தோளில் துண்டை போட்டுக் கொண்டு செல்ல முடியாது. துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டுதான் போக வேண்டும். துண்டை மேலே போட்டுக்கொண்டு பேசுகிற மேடைப் பேச்சாளர்கள் பெரிய புரட்சியாளர்களாக தெரிந்தார்கள். 1967 வாக்கு வங்கியில் தேசிய வாக்கு வங்கி சரிந்தது. திராவிட வாக்கு வங்கி உயர்ந்தது. 1971ல் திராவிட வாக்கு மிகப் பெரிய அளவில் பெருகிவிட்டது. 1972ல் எம்ஜிஆர் வந்தார். அவர் திராவிட வாக்கு வங்கியை தான் பிரித்தார். தமிழ்நாட்டு நலன்களை, தமிழ் மொழி, சமூகநீதி, இடஒதுக்கீடு போன்றவற்றை காப்பாற்றுவதில் யார் முதன்மையான பாதுகாவலர் என்று கேள்வி வருகிறது. அப்போது எம்ஜிஆரா?, கலைஞரா? என கேள்வி வருகிறது. அப்போது மக்கள் எம்ஜிஆர், அடுத்து கலைஞர் என்று மாற்றி மாற்றி வாக்களித்தார்கள். இன்று வரை அந்த வாக்கு வங்கிதான் இருக்கிறது.

கலைஞர் - அண்ணாதுரை

தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளுக்கு மேலாக திராவிட ஆட்சி இருந்தாலும், வாக்காளர்கள் எப்படி மேம்பட்டிருக்கிறார்கள் என்றால்? தமிழ்நாட்டு நலன்களுக்கு எந்த அரசியல் கொள்கை சரியானது என்று அப்டேட் ஆகியுள்ளனர். அந்த அரசியல் கொள்கையை அமல்படுத்தும் வல்லமை யாருக்கு உள்ளது என்பதில் அப்டேட் ஆகியுள்ளனர். அதன் காரணமாக மாற்றி மாற்றி முடிவு எடுக்கிறார்கள். தமிழ்நாட்டின் நலன்களை பாதுகாக்கக்கூடிய வல்லமை திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளுக்கு தான் உள்ளது என்றுதான் மக்கள் நினைக்கிறார்கள். இல்லாவிட்டால் இந்தியாவையே ஆட்சி செய்கிற பாஜக ஏன் அதிமுக கூட்டணிக்கு முயற்சிக்கிறார்கள்?  1999ல் ஏன் திமுக கூட்டணிக்கு முயற்சி செய்கிறார்கள்? ஏனென்றால் இந்த மாநில அரசியல் என்பது இதற்குள்ளாக தான் நிற்கிறது. வேறு வழியில்லை.

எந்த இடத்தில் வந்து மாநில அரசியல் மாறும் என்றால்? முழுக்க முழுக்க பழைய மாதிரி தேசிய உணர்வு. காங்கிரஸ் மதச்சார்பற்ற உணர்வோடு இருக்கும். அதிமுக எதாவது ஒரு வகையில் அதற்குள் இருந்துதான் எடுக்கும். அதன் காரணமாகவே அதிமுக, காங்கிரஸ் கட்சிகள் மாற்றி மாற்றி கூட்டணி வைக்கிறார்கள். டெல்லி ஆட்சி என்று வருகிறபோது காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடம். அதிமுகவுக்கு குறைந்த இடம். தமிழ்நாடு ஆட்சி என்று வருகிறபோது அதிமுகவுக்கு அதிக இடம், காங்கிரசுக்கு குறைந்த இடம். காங்கிரஸ் மந்திரிகள், அதிமுக ஆட்சியில் இடம்பெற மாட்டார்கள். இதே கொள்கைதான் திமுகவுக்கும்.

பாஜக இதை எப்படி மாற்றி சொல்கிறது என்று பார்த்தால்? கூட்டணி திமுகவை வீழ்த்தும். ஆனால் கூட்டணி அமைச்சரவையில் பாஜகவுக்கு இடம் என்று சொல்கிறார்கள். அந்த இடம் வாக்காளர்கள் அப்டேட் ஆகி அதை ஒப்புக் கொள்வார்களா? என்று உண்மையிலேயே தெரியவில்லை. ஏனென்றால் தமிழ்நாடு இன்னும் கூட்டணி அமைச்சரவை என்கிற பரிசோதனைக்குள் செல்லவில்லை. ஒரே ஒரு வாய்ப்பு 1996 தேர்தலில் திமுவுக்கு வந்தது. அவர்களும் அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டனர். தற்போது வாக்காளர்கள் எப்படி புத்திசாலிகளாக மாறுவார்கள் என்றால்? பாஜகவுக்கு எத்தனை எம்எல்ஏக்கள் கொடுக்கப் போகிறார்கள் என்பதில் வரும்.

chennai voters

அதிமுக கூட்டணியில் பாஜக 35 இடங்களை எதிர்பார்க்கிறார்கள். 30 இடங்கள் என்று வைத்துக்கொண்டால் கடந்த தேர்தலை விட 10 இடங்கள் அதிகம். கடந்த முறை 4 எம்எல்ஏக்கள். இந்த முறை 4 அல்லது 5 எம்எல்ஏக்கள் என்று நிறுத்திவிட்டார்கள் என்றால், எதாவது ஒரு வகையில் அவர்கள் முடிவு எடுத்துள்ளார்கள் என்று அர்த்தம். அல்லது வாக்காளர்கள் பாஜக போட்டியிட்ட தொகுதிகளில் ஒரு கணிசமான சதவீதம் வெற்றி பெற வைத்துவிட்டார்கள் என்றால் அவர்கள் வேறு திசைக்கு செல்கிறார்கள் என்று அர்த்தம். அப்போது 2026 தேர்தல் என்பது மதர் ஆல் எலெக்சன்ஸ் ஆக மாறிவிடும். எப்படி 1967 தேர்தலை உதாரணமாக சொல்கிறோமோ அதுபோல 2026 தேர்தலை எதிர்கால தலைமுறை உதாரணமாக சொல்லும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ