spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைவிஜய் ஏன் கரூர் போகல? பனையூர் வரும் 41 குடும்பங்கள்! த.வெ.க-வுக்கு ஏங்கும் எடப்பாடி!

விஜய் ஏன் கரூர் போகல? பனையூர் வரும் 41 குடும்பங்கள்! த.வெ.க-வுக்கு ஏங்கும் எடப்பாடி!

-

- Advertisement -

கரூர் கூட்டநெரிசலில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை மாமல்லபுரத்துக்கு வரவழைத்து சந்திப்பது விஜய்க்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

மூத்த பத்திரிகையாளர் மணி யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை வரும் திங்கட்கிழமை மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது எதிர்பார்த்த ஒன்று தான். பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்ப்பது தான் மனித இயல்பாகும். ஆனால் சம்பவ இடத்திற்கே போகாமல் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து பேசுவது என்பது அவருடைய அரசியல் எவ்வளவு நடைமுறைக்கு ஒவ்வாத தன்மை கொண்டது என்பதை காட்டுகிறது. இந்த முடிவு விஜய் ரசிகர்கள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருப்பதாக பார்க்கிறேன். பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியிலும் இரு வேறு கருத்துக்கள் நிலவுவதாக சொல்கிறார்கள். விஜயின் முடிவு மிகப்பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது.

சமூக வலைதளங்களில் விஜய் ஆதரவாளர்களே  கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். நாளைக்கு 234 தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்திற்கு எப்படி போவார்? அல்லது  கூட்டணியில் ஒரு குறிப்பிட்ட தொகுதிகள்  கொடுத்தால், அந்த தொகுதிகளுக்கு நீங்கள் பிரச்சாரத்திற்கு போக வேண்டும் அல்லவா?  விஜயை காண்பதற்கு பெரிய அளவில் கூட்டம் வரும் என்பதை தாண்டி, ஒரு கட்சியின் தலைவர் மற்றும் வேட்பாளர் என்கிற அடிப்படையில், 70 தொகுதிகளில் போட்டியிட்டால் அந்த தொகுதிகளுக்கு விஜய் சுற்றுபயணம் மேற்கொள்ள வேண்டும்.

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனாலும் விஜயை காப்பாற்ற முடியாது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சொல்கிறார். 30 வருடங்களுக்கு முன்பு அதிமுகவை நோக்கி சொல்லப்பட்ட வார்த்தை, இன்று விஜயை நோக்கி சொல்கிறார்கள். விஜய் மீது அதிமுக இவ்வளவு கரிசனப்படுவதற்கு காரணம், 3 தேர்தல்களில் அதிமுக படுதோல்வி அடைந்திருக்கிறது. கூட்டணி கட்சிகள் யாரும் வர மறுக்கிறார்கள். கூட்டணியில் இருந்த டிடிவி, ஓபிஎஸ் வெளியே போய்விட்டார்கள். அதிமுக – பாஜக கூட்டணி தேர்தல் சமயத்தில் ஜெல் ஆக வாய்ப்பு உள்ளது.

கூட்டணியை கெடுப்பதற்கான அனைத்து வேலைகளையும் அண்ணாமலை செய்கிறபோது, இந்த கூட்டணி ஜெல் ஆகுமா? என்கிற கேள்வியும் எழுகிறது. பாஜகவை மட்டும் வைத்து வெற்றி பெற முடியாது. அவர்களிடம் லட்டு போல விஜய் இருக்கிறார். ஆனால் எதற்காக அந்த கூட்டணி பரிதவிப்பை வெளிப்படுத்துகிறார்கள். பலவீனம் இருந்தாலும், அதை ஏன் வெளிக்காட்டுகிறார்கள்? அதிகாரத்தில் பங்கு என்கிற ஆர்.பி. உதயகுமாரின் கருத்தை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அதிமுகவுக்கு, திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடும் என்று பயப்படுகிறார்கள். தொடர்ந்து 10 ஆண்டுகள் பதவியில் இல்லாமல் அதிமுக இருந்தது கிடையாது. மேலும் ஒரு தோல்வி என்பது அதிமுகவுக்கு பேரழிவாகும். எனவே எப்படியாவது அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று துடிக்கிறார்கள். அது தவறு இல்லை. ஆனால் அதை ஏன் வெளிப்படுத்துகிறார்கள்.  விஜயின் வருகைக்காக அதிமுக காத்திருப்பதும், விஜய்க்காக பேசுவதும் பரிதவிப்பாகும்.

நாளைக்கு விஜய்க்கு கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டால், அது மிகப்பெரிய பின்னடைவாகும். கரூர் விவகாரத்தில் சிபிஐ, தமிழக அரசு எதுவும் செய்ய முடியாது. ஏனென்றால் அது ஒரு விபத்து. இதற்கு பயந்து விஜய் கூட்டணிக்கு செல்வாரா? என்பது தெரியவில்லை. கட்சியின் மேல் மட்டத்தில் இருப்பவர்களே, விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக சொல்கிறார்கள். அந்த கட்சிக்கு கட்டமைப்பே கிடையாது. பாதிக்கப்பட்டவர்களை அழைத்து சந்திக்கும் நிகழ்வு விஜய்க்கு அவப்பெயரை தான் ஏற்படுத்தும்.

அண்ணாமலை, தப்பித் தவறிக்கூட என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். அண்ணாமலை, எப்போது எல்லாம் திமுக அரசு பதற்றமாக இருக்கிறதோ அப்போது எல்லாம் மக்களின் கவனத்தை திசை திருப்புவார். பாஜக மேலிட பொறுப்பாளரிடம், அண்மையில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய அன்புமணி கூடுதல் இடங்களை கேட்ட நிலையில், அவர் பாஜக மேலிடத்தில் பேசுவதாக எதில் அளித்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமி, என்றைக்கு பாஜக உடன் கூட்டணி அறிவிப்பை வெளியிட்டாரோ அன்றைக்கே எல்லாம் முடிந்துவிட்டது. விஜயின் அரசியல் நாளுக்கு நாள் முடைநாற்றம் அடிப்பதாக இருக்கிறது. அவர் குறித்து மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஒரு மாதத்திற்கு பிறகு வெளியே வரும் கரூர் போவார் என்று நினைக்கிறபோது, அவர்களை இங்கே வரவைக்கிறார். எனவே அவர் இன்னும் கடுமையாக விமர்சிக்கப்படுவார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ