spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஜனநாயகனுக்கு பாஜக தரும் நெருக்கடி! விஜய்க்கு கிடைத்த அந்த ரகசிய தகவல்! உண்மையை உடைக்கும் தாமோதரன்...

ஜனநாயகனுக்கு பாஜக தரும் நெருக்கடி! விஜய்க்கு கிடைத்த அந்த ரகசிய தகவல்! உண்மையை உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

-

- Advertisement -

ஜனநாயகன் திரைப்படம் வெளியாகும் வரை விஜய் மௌனமாகவே இருப்பார், அதுவரை கூட்டணி தொடர்பாக எந்த முடிவையும் அவர் எடுக்க மாட்டார் என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணுடன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசியுள்ளார். அப்போது சிரஞ்சீவி போன்று அரசியலில் தோற்றுவிடமால், தன்னை போன்று வெற்றி  பெற வேண்டும் என்று விஜயிடம் ஆலோசனை கூறும்படி சொன்னார்கள். ஆனால் இன்னும் அவர் சொல்லவில்லை. விஜய் தரப்புக்கு பெரிய பிரச்சினையாக இருப்பது ஜனநாயகன் படத்தின் வெளியீடு ஆகும். அதற்கு விஜய், இன்றைக்கு இருக்கும் நிலைப்பாட்டோடு இருக்க வேண்டும். காரணம் அந்த படத்தில் பாஜகவுக்கு எதிரான பல வசனங்கள் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தற்போது தான் சிபிஐ விசாரணைக்கு 2 ஐ.ஜி-க்களை நியமித்துள்ளார்கள். அவர்கள் விஜயிடம் கேரவனில் இருந்த சிசிடிவி காட்சிகளை கேட்டிருக்கிறார்கள். அப்படி சிசிடிவி காட்சிகளை கொடுத்தால், அவர்கள் கேரவனில் செய்த விஷயங்கள் எல்லாம் வெளியே வரும் என்கிற அச்சம் உள்ளது. கரூரில் பாஜகவின் யூடியூப் சேனல்களை அனுப்பி பாதிக்கப்பட்டவர்களிடம் பேட்டி எடுத்தனர். அவர்கள் எல்லாம் விஜய்க்கு ஆதரவாக பேட்டி அளித்துள்ளனர். ஆனால் சிலர் விஜயை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளனர். அதுதான் விஜய் தரப்புக்கு கரூர் செல்வதற்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா மகாமக குளம் கூட்டநெரிசல் விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர். அவர்கள் யாரும் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக பேட்டி அளிக்கவில்லை. ஸ்ரீமதி மரணம் சம்பவத்தில் 600 தலித் இளைஞர்கள் மீது வழக்கு உள்ளது. அவர்கள் நாங்கள் ஸ்ரீமதிக்காக அதை செய்தோம் என்று உறுதியுடன் உள்ளனர். சவுக்கு சங்கரும், பெலிக்சும் என்றைக்கும் மக்களின் கருத்தாக இருந்தது இல்லை. அப்போது கரூர் மரணத்தில் பாதிக்கப்பட்டவரின் உறவினர்களின் இருக்கும் சோகத்தை விட, விஜய் என்றால் எல்லாவற்றையும் மறந்துவிட்டு அவருக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று ஊடகங்கள் மூலம் காட்ட முயற்சிக்கிறார்கள். அதைதான் தற்குறி தனம் என்கிறோம். அதனால் தான் அவர் கரூருக்கு வருவதற்கு என்றைக்குமே தயாராக இல்லை. விஜயின் கரூர் நிகழ்ச்சிக்கு மண்டபம் தர மறுப்பதாக தவெகவினர் சொல்கின்றனர். ஆனால் ஆதவ் அர்ஜுனா, 2 மண்டபங்களையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். விஜய் தங்குவதற்கு அருகிலேயே ஒரு ஹோட்டலை ரெடி செய்தார். ஆனால் 13, 17ஆம் தேதிகளில் போவதாக சொன்னார்கள். போலீசாரிடம் பாதுகாப்பு கேட்டு மனுவெல்லாம் அளித்தார்கள். விஜய்க்கு ஆதரவாக தமிழக அரசு செயல்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையிலும், அவர் ஏன் கரூருக்கு செல்லவில்லை?

அதேவேளையில் மக்களின் கோபம் என்பது பெரியது. மரணம் என்பது பெரியது. அங்கு வெடிக்கக்கூடிய உணர்வுகள் என்பது பெரியது. விஜய் தரப்பு தங்களுக்கு சாதகமாக பேசிய 2 வீடியோக்களை தான் போட்டார்கள். 41 பேர் இறந்த நிலையில், அவர்கள் 2 பேரின் வீடியோக்களை தான் போட்டார்கள். ஏன் மற்றவர்களின் வீடியோவை ரெக்கார்டு செய்த போதும், அவற்றை போடவில்லை? ஏனென்றால் அவர்கள் வீடியோ காலில் பேசிய விஜயிடம் கடுமையாக கேள்விகளை எழுப்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜயுடன், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருடன் தொடர்புக்கு வந்திருப்பதாக வலதுசாரி பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கான தேவை விஜய்க்கு உள்ளது. அதற்கு காரணம் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டின்போது, மத்திய அரசு சிபிஐ அமைப்பை வைத்து கூட்டநெரிசலுக்கு விஜய்தான் காரணம் என்று நெருக்கடி அளித்தால் பிரச்சினையாகும் என்பதால், அவர்களுடன் தொடர்பில் உள்ளார். அவர் ஜனநாயகன் படம் வெளியாகும் வரை அமைதியாக இருப்பார். இன்னும் ஒரு மாதத்திற்கு இப்படிதான் இருப்பார். அவர் பாஜக லைன் எடுத்து ஆர்எஸ்எஸ் போலவோ, அல்லது எம்ஜிஆர் போன்றோ பாடப் போவது கிடையாது.

அதிக மனித உயிர்களை காவு வாங்கிய 2024 - தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்டராங் படுகொலை – விஷசாராயத்தால் உயிரிழந்த 67 பேர்

டிடிவி தினகரன் போன்றவர்கள் விஜயுடன் கூட்டணி என்று பேசுவது அவர்களின் தனிப்பட்ட ஆசை தான். அண்ணாமலை, அதிமுகவை உடைத்து டிடிவி தினகரன், ஓபிஎஸ் உடன் இணைந்து தனிக்கட்சி தொடங்கலாம் திட்டம் போட்டு அதற்காக வேலை செய்து வந்தார். தற்போது திட்டம் எல்லாம் வெளியாகிவிட்டது. அம்பேத்கர் – பெரியார் புத்தக வெளியிட்ட பிரபல ஊடகம் தொடங்கி இந்த திட்டம் செயல்படுத்தப் படுகிறது. புதுச்சேரியில் உள்ள மார்ட்டினின் மகனை முதலமைச்சர் ஆக்குவது, ஆதவ் அர்ஜுனாவை துணை முதலமைச்சர் ஆக்குவது தான் திட்டம். இதற்கு நிதியுதவி செய்வது லாட்டரி மார்ட்டின். இவர்கள் திட்டம்போட்டு பதவிக்கு வர நினைப்பதற்கு காரணம் தமிழகம், புதுச்சேரியில் லாட்டரிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி, அனுமதி வழங்குவது தான்.

திமுக, லாட்டரிக்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டதால் தான், ஆதவ் அர்ஜுனா அதில் இருந்து வெளியே வந்தார். மார்ட்டின் மீது அமலாக்கத்துறை வழக்குகள் உள்ளன. இந்த பிரச்சினைகளை சரி செய்ய பாஜகவை கொண்டுவந்தால் தான் சரியாக இருக்கும். புதுச்சேரியில் மார்ட்டினின் ஏஜெண்டாக செயல்படுகிற பாஜக எம்எல்ஏ ஜான் என்பவர் மூலம் மார்ட்டினின் மகன் சார்லசை முதலமைச்சர் ஆக்க வேண்டும். ஆதவ் அர்ஜுனை, தமிழக துணை முதலமைச்சர் ஆக்க வேண்டும். விஐயை கொண்டு வந்தால்தான், புதுச்சேரி கனவும் நிறைவேறும். இந்த கனவு நிறைவேற தூண்டுகோளாகவும், பின்னணியாகவும் இருப்பது பாஜக ஆகும். இது தான் ஆதவ் அர்ஜுனாவின் கேம் பிளானாகும்.

இதில் முடிவு எடுப்பதில் விஜய்க்கு உள்ள பிரச்சினை என்பது ஜனநாயகன் படத்தின் வெளியீடாகும். அந்த படம் வெளியாகும் வரை விஜய் நடுநிலையாக தான் இருக்க வேண்டும். பாஜக கூட்டணி என்று முடிவு எடுத்தால், ஜனநாயகன் ஓடாது. திமுக தியேட்டர் உள்பட எல்லா விஷயங்களிலும் அரசியல் செய்துவிடும். அதற்குள்ளாக சிபிஐ ஒரு முடிச்சு போட்டு, கேரவனுக்குள் என்ன நடந்தது என்று விஜயை தனிப்பட்ட முறையில் தொல்லை கொடுத்தாலும் அவரால் ஒன்றும் செய்ய முடியாது. ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் 500 கோடியாகும். அந்த படத்தின் வெளியீட்டிற்காக தான் விஜய் காத்திருக்கிறார். படம் வெளியான பிறகுதான் எந்த முடிவாக இருந்தாலும் எடுப்பார். இந்த நிலையில், எஸ்.ஏ.சந்திர சேகர் கட்சிக்குள் வரப் போகிறார். விஜயால் ஒரு நாள் கூட சிறையில் இருக்க முடியாது. ஜனநாயகன் வெளியாக வேண்டும். சிபிஐ விசாரணை அவருடைய கழுத்துக்கு வரக்கூடாது. இத்தனை சிக்கல்கள் அவருக்கு உள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

MUST READ