spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைகரூர் மரணம் : களமிறங்கிய சிபிஐ! கதிகலங்கும் விஜய்! செந்தில்வேல் நேர்காணல்!

கரூர் மரணம் : களமிறங்கிய சிபிஐ! கதிகலங்கும் விஜய்! செந்தில்வேல் நேர்காணல்!

-

- Advertisement -

கரூர் மரணங்கள் தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்திருக்கும் எப்.ஐ.ஆர் என்பது, தமிழக காவல்துறை பதிவு செய்த பழைய எப்.ஐ.ஆர். தான் என்றும், புதிதாக எப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை என்றும் பத்திரிக்கையாளர் செந்தில்வேல் விளக்கம் அளித்துள்ளார்.

we-r-hiring

கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்திப்பது குறித்து பரவி வரும் பல்வேறு தகவல்களின் உணமைத் தன்மை குறித்து பத்திரிகையாளர் செந்தில் வேல் வெளியிட்டிருக்கும் காணொலி பதிவில் தெரிவித்துள்ளதாவது :- கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியபோது நீதி வெல்லும் என்று விஜய் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். தற்போது சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் எப்.ஐ.ஆரிலும் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்திப்பது குறித்து ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன.

இறுதியாக வந்த தகவலின் படி, பனையூருக்கு அவர்களை அழைத்து பேசலாம் என விஜய் முடிவு செய்துள்ளார். ஆனால் பனையூர் பண்ணையார் என்று விஜயை எதிர் தரப்பினர்  விமர்சிக்கும் நிலையில், அப்படி செய்தால் மேலும் விமர்சனம் எழும் என ஆலோசனை சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் அந்த திட்டத்தை விஜய் கைவிட்டுள்ளார். அதனால் மகாபலிபுரத்தில் அவர்களை சந்திப்பது என்று விஜய் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே விஜய், கரூர் செல்லாததற்கு புதிதாக ஒரு தகவலை சொல்கிறார்கள்.  முதலில் பாதிக்கப்பட்டவர்களை கரூரில் நேரடியாக சென்று விஜய் சந்திக்க திட்டமிடப்பட்டு இருந்துள்ளது. ஆனால் அங்கே மண்டபம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நாமக்கல்லில் ஒரு மண்டம் கிடைத்துள்ளது. அதனால் பாதிக்கப்பட்டவர்களை அங்கே அழைத்து சந்திக்கலாம் என்று கட்சியினர் சொல்லியுள்ளனர். ஆனால் அவர்களை கரூரில் சென்று சந்திப்பது தான் சரியாக இருக்கும், நாமக்கலுக்கு அழைத்து சந்திப்பது சரியாக இருக்காது என்று விஜய் உறுதியாக நின்றுள்ளார். இறுதியாக நாமக்கல்லுக்கு பதிலாக இந்த சந்திப்பை மாமல்லபுரத்துக்கு மாற்றப்பட்டு உள்ளதாக விஜய் ஆதரவாளர்கள் விளக்கம்  அளிக்கிறார்கள்.

விஜய் ஒரு கவுன்சிலர் கூட ஆகாதபோது, பாதிக்கப்பட்டவர்கள் அவரை சென்று சந்திக்க வேண்டும் என்கிறார். ஒரு வேளை விஜய், எம்எல்ஏ ஆகிவிட்டார் என்றால், கூட்டம் கூடும் என்பதால் தொகுதிக்கு போக மாட்டார். அதனால் தொகுதி பிரச்சினை குறித்து பேசுவதற்கு அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என எல்லோரும் பனையூருக்கு வர வேண்டும். ஒரு வேளை விஜய் முதலமைச்சர் ஆகிவிட்டால், அவர் சட்டப் பேரவைக்கே வர மாட்டார். அப்போது எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், தலைமை செயலாளர்கள் என எல்லோரும் பனையூருக்கு செல்ல வேண்டும் அல்லவா?

கரூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் சிபிஐ முதல் தகவல் அறிக்கையில், ஏ1 ஆக தவெக மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், ஏ2 புஸ்ஸி ஆனந்த், ஏ3 ஆக நிர்மல்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதாவது இந்த விவகாரத்தில் தமிழக காவல்துறை ஏற்கனவே ஒரு எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை நடத்தியது. அதன் பிறகு வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்ட போதும், அவர்கள் தமிழக காவல்துறை பதிவு செய்த எப்.ஐ.ஆர். அடிப்படையில் தான் விசாரிக்க முடியும் என்று காவல்துறை தரப்பில் சொல்கிறார்கள். இனி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறபோது எப்.ஐ.ஆரில் கூடுதலாக யாரையாவது சேர்க்க வேண்டுமா? என்று முடிவு செய்வார்கள்.

MUST READ