spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைபுள்ள செத்தா பரவாயில்லையா? அதிர்ச்சி கொடுத்த வீடியோ! விளாசும் வல்லம் பஷீர்!

புள்ள செத்தா பரவாயில்லையா? அதிர்ச்சி கொடுத்த வீடியோ! விளாசும் வல்லம் பஷீர்!

-

- Advertisement -

கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பேசுகிற காணொலிகளை தவெகவினர் வெளியிடுவது விஜயை வீட்டிற்கு அனுப்புவதற்கான வேலையைத்தான் செய்யும் என்று திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்கியது தொடர்பாக தவெக வெளியிட்ட காணொலி பதிவு குறித்து திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 20 நாட்களுக்கு பிறகு விஜய் தரப்பில் இருந்து நிவாரணம் வழங்கியுள்ளனர். மேலும், நிவாரணம் பெற்றவர்களை அவர்கள் பேச வைத்திருக்கிறார்கள். அவர்கள் பேசியது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. எளிய மனிதர்களிடம் இவ்வளவு பெரிய தொகையை வழங்குகிறபோது அவர்களிடம் சிறிய சலனம் ஏற்படும். அதேவேளையில் தங்கள் குழந்தைகள்  இறந்தாலும் பரவாயில்லை. விஜய் முதலமைச்சர் ஆக வேண்டும் கருதுகிற அளவுக்கு அவர் ஒன்றும் தமிழ்நாட்டின் தியாக வேங்கை கிடையாது.

பேசுபவர்கள் பணத்தை பெற்றுக்கொண்டு என்ன வேண்டும் என்றாலும் பேசலாம். ஆனால் அது மக்களிடத்தில் எந்த அளவுக்கு எடுபடுகிறது என்பதுதான் செய்தி.  மகாமக குள கூட்டநெரிசல், பெரிய கோயில் சதய விழா தீவிபத்து, கும்பகோணம் தீவிபத்து போன்ற பல்வேறு சம்பவங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டபோதும், அதை வைத்து இதுபோன்ற அரசியலை செய்யவில்லை. இப்போது செய்ய  எத்தனிக்கிறார்கள் என்றால்?  இதை செய்ய தூண்டியது விஜய் தரப்பு. இதன் மூலம் விஜய் மலிவான அரசியலை செய்கிறார் என்கிற சூழல் தான் ஏற்பட்டிருக்கிறது. தவிர அவர் உண்மையிலேயே மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர் என்கிற பார்வை யாருக்கும் வரவில்லை.

கணவரால் கைவிடப்பட்ட பெண் என்று சான்றிதழ் பெற்றுள்ள பெண்ணின் கணவரை வைத்தும், மனைவியை இழந்த கணவருக்கே தெரியாமல் அவரது கையெழுத்தை வாங்கியும் சிபிஐ விசாரணை கோரி வழக்கு தொடர்ந்தனர். கரூர் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, உத்தரபிரதேச கூட்டநெரிசலுக்கு சிபிஐ வேண்டாம் என்று ஒரு தீர்ப்பையும், தமிழ்நாட்டிற்கு சிபிஐ வேண்டும் என்றும் ஒரு தீர்ப்பையும் வழங்குகிறார். கருர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை இப்படி பேச வைப்பதன் மூலம் அவர்கள் மீது, பொதுமக்களுக்கு வெறுப்பு ஏற்பட செய்கிறார்.

தலைவர்களை பார்க்க மக்கள் திரள்வது இயல்பான ஒன்று. ஆனால் விஜய் என்ன செய்துவிட்டார் என்று இவ்வளவு பேர் வந்து நிற்கிறார்கள்? புகைப்படம் எடுக்கிறார்கள். திரைத்துறையின் மோகம் மக்களை இந்த அளவுக்கு அடிமையாகிவிட்டது. திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக உள்ள ஒருவரை ஆராதிக்கும் மக்கள் சொற்பமாக இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களை நம்பிதான் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள்.

ஆந்திராவில் சிரஞ்சீவி கட்சி தொடங்கினார் என்ன ஆனாது? பாக்கியராஜ் தொடங்கியபோது என்ன நடந்தது? சரத்குமார் கட்சி தொடங்கியபோது என்ன ஆனது? எம்ஜிஆர் திரைத்துறையில் இருக்கும்போதே தன்னை அரசியலில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். திறைத்துறையில் இயங்கிய பிறகும், தன்னை ஒரு தலைவராக தகவமைத்துக் கொண்டவர் ஜெயலலிதா. இவர்கள் எல்லாம் ஒருபுறம். ஆனால் இன்றைக்கு விஜய் போன்றவர்கள், சினிமாவில் கிடைக்கக்கூடிய வெளிச்சத்தை மட்டும் வைத்துக்கொண்டு மக்களை ஆளுமை செய்ய முடியும் என்று நினைக்கிறார்கள். அதற்கு 3 சதவீதம் பேர் இரையாகி விடுகிறார்கள். அதனுடைய குரல்தான் இன்று எதிரொலிக்கிறது.

முதலமைச்சர், கரூர் சம்பவத்திற்கான பழியை ஒரு நிமிடத்தில் விஜய் மீது போட்டிருக்கலாம். ஆனால் எந்த தலைவரும் தன்னுடைய தொண்டர்கள் இறப்பதை விரும்ப மாட்டார் என்று சொல்கிறார். தற்போது வீடியோ போட்டு விஜய் விளம்பரத்தை தேடுகிறார். அவர்களின் இந்த அரசியல் புரிதலே மிகவும் தவறானது. தற்போது மக்கள் வெகுண்டு எழுந்து வெறுப்பை கக்குவதற்கு நீங்கள்தான் காரணம். நீங்கள் வெளியிட்டிருக்கும் வீடியோ தான். அப்போது இந்த வீடியோ என்ன புரிதல் ஏற்படுத்தும் என்கிற புரிதல் கூட இல்லாமல், வெளியிடுவது என்னவிதமான அரசியல்?

இந்த வீடியோவை வெளியிட்டது விஜய்க்கு தெரியவில்லை சரி. ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்துக்கும் இது தெரியாதா? அப்போது ஒரு விளம்பர வெறி மட்டுமே இவர்களை இயக்கி கொண்டிருக்கிறது. கட்சியை வளர்த்தெடுக்க வேண்டும் என்பது அவர்களுடைய நோக்கம் கிடையாது. இவர்கள் விஜய்க்கு எதிராகவே செயல்படுகிறார்கள். இல்லா விட்டால் விஜய் வீட்டிற்குள் சென்ற பிறகு இவர்களும் வீட்டிற்குள் போய் படுத்துக் கொள்வார்களா? இதுபோன்ற காணொலிகள் விஜயை வீட்டிற்கு அனுப்புகிற வேலையை செய்யும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ