spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஸ்டாலின் சர்ஜிக்கல் ஸ்டிரைக்! கதி கலங்கிய அமித்ஷா! கதறும் தற்குறி கும்பல்! சுமன் கவி...

ஸ்டாலின் சர்ஜிக்கல் ஸ்டிரைக்! கதி கலங்கிய அமித்ஷா! கதறும் தற்குறி கும்பல்! சுமன் கவி நேர்காணல்!

-

- Advertisement -

தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வந்திருப்பதன் மூலம் அதிமுக கூட்டணியை நொறுங்கச் செய்ததுடன், கூட்டணிக்குள் குழப்பம் விளைவித்தவர்களுக்கும் முதலமைச்சர் பதிலடி கொடுத்திருப்பதாக ஊடகவியலாளர் சுமன் கவி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக ஊடகவியலாளர் சுமன்கவி யூடியுப் சேனலுக்கு அளித்த  நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- சட்டப்பேரவையில் பேசிய ஓபிஎஸ் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், எம்ஜிஆர் – ஜெயலலிதா ஆசியுடன் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கூறியுள்ளார். மறைந்த ஜெயலலிதா எக்காலத்திலும் பாஜக உடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று 2014க்கு பிறகே மிகவும் உறுதியாக இருந்தார். திமுகவும், அதிமுகவும் அரசியலில் எதிரியாக இருந்தார்கள். ஆனால் சித்தாந்த எதிரி கிடையாது. அதேநேரம் சித்தாந்த எதிரியான பாஜக உடன் கூட்டணி வைத்துக்கொண்டு, தன்னுடைய சொந்த கட்சியினரை வெளியில் நிறுத்தி அவமானப்படுத்துகிறார்கள்.

அப்போது அவர்கள் தாய் கழகமான திமுகவை வாழ்த்துவதில் என்ன தவறு உள்ளது. மற்றொரு புறம் மோசமான ஆட்சியாக இருந்தால், அவர்கள் மோசமான ஆட்சி என்று சுட்டிக்காட்டலாம். மேலும் ஐயப்பன் சுட்டிக்காட்டிய காலை உணவுத்திட்டம் என்பது உண்மையாகவே போற்றி புகழ வேண்டிய திட்டமாகும். ஆனால் இலவச திட்டங்களை எதிர்க்கக்கூடிய பாஜக உடன் கூட்டணி வைத்திருக்கும்  எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த வேண்டும் என்றால், அவர்கள் திமுகவை வெளியில் இருந்து ஆதரித்தாக வேண்டும்.

திமுகவை பாராட்டி பேசிய ஓபிஎஸ், ஐயப்பன் ஆகியோருக்கு எம்ஜிஆர், ஜெயலலிதா ரத்தம் ஓடுகிறதா? என்று பலரும் விமர்சிக்கிறார்கள். அப்படி ரத்த பரிசோதனை செய்து யாருடைய ரத்தம் ஓடுகிறது என்று கண்டுபிடிக்க முடிந்தால், முதலில் எடப்பாடி பழனிசாமிக்கு தான் பரிசோதனை செய்ய வேண்டும். எந்த காலத்தில் ஜெயலலிதா தன்னுடைய கட்சியை மத்திய அரசுக்கு அடகுவைத்தார்? எடப்பாடியின் உடலில் ஓடுவது உண்மையிலேயே அதிமுக ரத்தமாக இருந்தால், நீங்கள் பாஜக உடன் கூட்டணி வைப்பீர்களா? அதிமுகவின் பொதுக்குழுவை  கூட்டி, நிரவாகிகளுடன் கலந்தாலோசித்தா அவர் பாஜக உடன் கூட்டணி அமைத்தார்? அவசர அவசரமாக டெல்லிக்கு சென்று கூட்டணி அமைத்தார்.

மூன்று முதல் 4 தென் மாவட்டங்களில் பெரிய அளவுக்கு வாக்குகளை வைத்திருக்கக்கூடிய முக்கியமான தலைவர் ஓபிஎஸ். அவரை கட்சிக்குள் கொண்டுவருவதற்கு முயற்சி செய்யாமல், அவரை வாசலில் நிறுத்தி அவமானப்படுத்திக் கொண்டிருந்தார். உண்மையிலேயே அதிமுகவினர் கோபப்பட வேண்டியது எடப்பாடி பழனிசாமியின் மீதுதான். காவி உடையில் திருவள்ளுவர் புகைப்படத்தை போட்டதை அதிமுகவினர் பார்த்தால் அவர்களின் ரத்தம் கொதிக்கும்.

2026 தேர்தல் - திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் – காங்கிரஸின் அடுத்தக் கட்ட நிலை என்ன? பரபரப்பாகும் அரசியல் களம்

தேமுதிக, திமுக உடன் இணைந்ததை பாஜக மற்றும் தவெக தரப்பில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். விஜயகாந்தை குடிகாரர் என்று பகிரங்காக சொன்னவர் ஜெயலலிதா. அப்படி அது குற்றமாக இருந்தால் அதிமுகவும், தேமுதிகவும் கூட்டணி வைத்திருக்க முடியாது. எதிர்க்கட்சி தலைவராக இருந்த விஜயகாந்தை, அடுத்த 2 வருடங்களில் ஒன்றுமில்லாமல் செய்துவிட்டனர். மாஃபா பாண்டியராஜன், அருண் பாண்டியன், நடிகர் தியாகு போன்றவர்களை எல்லாம் விஜயாகந்திடம் இருந்து பிரித்து, அவர்களையே விஜயகாந்தை விமர்சிக்க வைத்தனர்.

2016ல் மக்கள் நலக்கூட்டணி அமைப்பதற்கு மா.நடராஜன், ஜெயலலிதா இன்னும் பிற ஆட்கள் தான் வேலை செய்தார்கள். அப்படி ஒரு கூட்டணி உருவாகாமல் இருந்திருந்தால், தேமுதிக 10 ஆண்டுகளுக்கு முன்பே திமுக உடன் கூட்டணி சேர்ந்திருக்கும். கலைஞர் சொன்ன போதே பழம் நழுவி பாலில் விழுந்திருந்தால் கலைஞருக்கும் ஒரு நிறைவான வாழ்க்கை கிடைத்திருக்கும். ஜெயலலிதாவுக்கும் இப்படி ஒரு முடிவே நிகழ்ந்திருக்காது. கேப்டன் விஜயகாந்தும் ஒரு பிரதான எதிர்க்கட்சியாக வந்திருப்பார். ஒரு முறை ஆட்சி செய்திருக்கக் கூட வாய்ப்பிருக்கிறது. ஆனால் அவருடைய உடல்நிலை குன்றிப் போனதற்கு தோல்விகள் தான் காரணம்.

விஜய், ஆதவ் அர்ஜுனா போன்றவர்களின் விமர்சனங்களுக்கு அதிமுக பதில் சொல்வதன் விளைவாக, இன்றைக்கு அதிமுகவும், தவெகவுக்கும் இரண்டாவது இடத்திற்கு போட்டியிடுகின்றன. அரசியலில் பேசுவதை விட பேசாமல் இருப்பது நல்லது. தேமுதிக, ஓபிஎஸ் போன்ற வியாபாரம் ஆகாதவர்களை திமுக கூட்டணியில் சேர்த்துள்ளதாக விமர்சிக்கிறார்கள். அதேவேளையில் தேமுதிக பாஜக கூட்டணிக்கு சென்றிருந்தால், மோடி – அமித்ஷாவின் ராஜதந்திரம் என்று சொல்லி இருப்பார்கள். அமித்ஷா ஒவ்வொரு மாநிலமாக வாசித்துக் கொண்டு வருகிறார் என்று சொன்னார்கள்.

ஆனால் உங்கள் கண் முன்பாகவே வைத்து அடிக்கிறார். இரண்டு  சர்ஜிக்கல் ஸ்டிரைக். தேமுதிக, ஓபிஎஸ் போன்றவர்களை அழைத்து வந்தது ரொம்ப பெரிய விஷயம். தென் மாவட்டங்களில் பெரிய செல்வாக்கு கொண்ட ஓபிஎஸ், வாழ்த்து தெரிவித்ததே பெரிய விஷயமாகும். தேமுதிகவுக்கு ராஜ்யசபா இடம் தருவதாக கூறி தேமுதிகவை ஏமாற்றினார். ஆனால் ஸ்டாலின் நம்பத்தகுந்தவராக உள்ளார். அவர் சொன்னால் ராஜ்யசபா சீட்டு உறுதி.

மற்றொருபுறம் தேமுதிகவை திமுக கூட்டணிக்குள் இழுக்காவிட்டால் காங்கிரஸ்க்கு குளிர்விட்டு போய்விடும். கட்சி மேலிடமும், மாநில தலைவரும் பல முறை கண்டித்தும் கட்டுக்கடங்காமல் இருந்தனர். எம்.பி. ஆகும் வரை திமுகவிடம் கைக்கட்டிக்கொண்டு நின்றுவிட்டு, தற்போது வந்து தெனாவட்டாக பேட்டி கொடுக்கிறார். ஸ்டாலின் வார்த்தைகளால் பேசுவது இல்லை. செயலால் பேசுகிறார். இன்றைக்கு நீங்கள் பேசுங்கள். திருடனுக்கு தேள் கொட்டவில்லை. வசமாக பாம்பே கொத்தியுள்ளது. நீங்கள் ஆட்சியில் பங்கு கேட்டாலும் இனிமேல் எப்படி கொடுப்பார்கள் .

234 தொகுதிகளில் நான் 170 நிற்க வேண்டும். அப்போதுதான் தனிப்பெரும்பான்மை பெற முடியும். தேமுதிகவுக்கு, கமல்ஹாசனுக்கு தொகுதிகள்  கொடுக்க வேண்டும். எல்லோருக்கும் தொகுதிகளை கொடுத்த பிறகு கடைசியில் தான் உங்களுக்கு. நீங்கள் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு முன்பே குழு அமைத்தாலும், உங்களுக்கு கடைசிதான். இதுதான் ரூல்ஸ். தேமுதிகவை கூட்டணியில் சேர்த்தன் மூலம் ஸ்டாலின் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்துள்ளார். முதலாவது தேர்தலுக்கு முன்பாகவே அதிமுகவை நொறுக்கிவிட்டார். மற்றொன்று இங்கே கூட்டணி என்கிற பெயரில் சலம்பிக்கொண்டிருந்தவர்களுக்கு ஒரே அடி கொடுத்துள்ளார்.

திமுக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தது இல்லை என்று ஆதவ் அர்ஜுனா சொல்கிறார். அவர் ஒரு வியூக வகுப்பாளரா? அல்லது ஜோசியரா? ஸ்டாலினுக்கு வெல்ல கட்டம் சரியில்லை என்று ஹெச்.ராஜா, விஜயபாஸ்கர் என்று எல்லோரும் சொன்னார்கள். ஆனால் ஸ்டாலின் வந்து உட்கார்ந்துவிட்டார். நாடு போற்றுகிற தலைவராக இருக்கிறார். இந்தியா கூட்டணியின் தலைவராக ஸ்டாலின் இருக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே, மணிசங்கர் அய்யர் போன்றவர்கள் சொல்கிறார்கள். 2021ல் அதிமுக, பாஜக ஆரூடம் சொன்னதை போன்றே நீங்களும் சொல்கிறீர்கள். மேலும் ஸ்டாலின், விஜயுடன் நேருக்கு நேர் பேச வேண்டும் என்று ஆதவ் சொல்கிறார்.

என்டிடிவி கான்கிளேவில் முதலமைச்சர் நேரடியாக போய் பேசுகிறார். ஆனால் அவர்கள் விஜயை நேரில் போய் பார்க்கிறார்கள். விஜய் சொன்னதாக அறிக்கை கொடுக்கிறார்கள். திமுக இளைஞரணி, மகளிர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி கூட்டங்களை நடத்திவிட்டனர். 234 தொகுதிகளிலும் 30 நாட்களுக்கு உள்ளாக தமிழ்நாடு தலைகுனியாது கூட்டங்களை நடத்தி கொண்டிருக்கிறார்கள். இதில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் ஒருவருக்கு பதில் சொல்ல முடியுமா? ஆதவ் அர்ஜுனாவால்.

இதற்கு மத்தியில் தான் கூட்டணி யாரும் எதிர்பார்க்கபோது அமைத்துள்ளனர். பிப்ரவரி 15ஆம் தேதி ஈஷாவில் வைத்து எப்படியாவது வந்துவிட வேண்டும் என்று சூடம் சாம்பிராணி போட்டிருக்கிறார்கள். ஆனால் காதும் காதும் வைத்தது போன்று எ.வ.வேலு, கே.என்.நேரு பேசி கொண்டு வந்துவிட்டனர். ஒவ்வொரு அமைச்சரும், ஒவ்வொரு தலைவரும் ஒவ்வொரு விஷயத்தில் பிசியாக உள்ளனர். ஆனால் இன்றைக்கு அரசியலுக்கு தகுதியற்றவர்கள் என்று தவெகவினர் காண்பித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். என்னை பொருத்தவரை நாம் தமிழருக்கும், தவெகவுக்கும் இடையே தான் போட்டி, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ