அரசு தொடக்கப்பள்ளிகளில் நேற்று வரை 3.94 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.2025 ஆம் ஆண்டுக்கான பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான அடைவுத் தேர்வு– (SLAS) ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் பிரதாப் தலைமையில் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நேற்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாணவர்களை கல்வித் தரத்தில் எவ்வாறு உயர்த்த வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.
மேலும், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வலைதளப்பக்கத்தில் அவா் கூறியிருப்பதாவது, அரசு தொடக்கப்பள்ளிகளில் நேற்று வரை 3.94 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு செயல்படுத்தும் கல்வி மேம்பாட்டு திட்டங்கள் பலனாக மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். அனைவரும் வருக! கல்வியின் வழியே அறிவுலகை ஆள்க! என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளாா்.
லுங்கியில் இறங்கிய ஸ்டாலின்! அப்பல்லோ ஆபரேஷன் புரியுதா? வல்லம் பஷீர் சூசகம்!
