- Advertisement -
50 பயணிகளுடன் சீன எல்லையோர டின்டா நகரை நோக்கிச் சென்ற ரஷ்யவிமானம் திடீரென காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்காரா ஏர்லைன்ஸ் 24 விமானம், 50 பயணிகளுடன் சீனாவின் எல்லையை ஒட்டிய அமுர் பகுதியில் உள்ள டிண்டா நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், விமானத்துடனான தொடர்பை இழந்ததாக ரஷ்ய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் 50 பேரின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இது தொடர்பான விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.