மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 22-ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக, அப்படத்தின் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மறு வெளியீடு தேதி அறிவிப்பு தொடர்பாக, இயக்குனர் ஆர்.கே. செல்வமணி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்,தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்…
அப்போது பேசிய இயக்குனர் ஆர்.கே. செல்வமணி,விஜயகாந்த் பிறந்தநாளான ஆகஸ்ட் 25-ஆம் தேதியை முன்னிட்டு, 34 ஆண்டுகளுக்குப் பின் ஆகஸ்ட் 22-ஆம் தேதி மறு வெளியீடு செய்யப்பட உள்ளது என்றார். இன்று எடுத்த படம் போலவே கேப்டன் பிரபாகரன் படம் உள்ளதென அவர் தெரிவித்தார்.அன்று, படம் வெளியாகும் போது என்ன உணர்வு இருந்ததோ, அதே உணர்வு தான் தற்போதும் உள்ளதென அவர் கூறினார்.கேப்டன் பிரபாகரன் படப்பிடிப்பின் போது ரோப் அறுந்து விழுந்து விபத்து ஒன்று நடந்தது என்றும் அதில் நல் வாய்ப்பாக விஜயகாந்த் உயிர் பிழைத்தார் என்பதையும் செல்வமணி நினைவு கூர்ந்தார். பல்வேறு ரிஸ்க்குகளை எடுத்து இந்த படத்தை முடித்திருந்ததாக அவர் தெரிவித்தார். இன்றைய காலத்தில் ரிலீஸ் ஆகும் படங்களுக்கு கூட இல்லாத டிமாண்ட், இந்த படத்திற்கு தற்போது கிடைத்துள்ளதாக ஆர்.கே.செவமணி குறிப்பிட்டார்.
இந்நிலையில் ஆடி அமாவாசையையொட்டி, கேப்டனை நினைத்து விரதம் இருப்பதாக பிரேமலதா விஜயகாந்த் பேசினார். கேப்டன் பிரபாகரன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி எடுக்கும் போது தான், தங்கள் மகன் விஜய பிரபாகரன் பிறந்ததாக பிரேமலதா தெரிவித்தார். விஜயகாந்தின் ஒவ்வொரு படமும் வரலாறு. என்றும் உலகம் இருக்கும் வரை விஜயகாந்த் புகழ் நிலைத்திருக்கும் என்றும் அவர் கூறினார். ஆகஸ்ட் 22-ஆம் தேதி படம் வெளியாக உள்ளதென்பதை பிரேமலதா விஜயகாந்தும் சுட்டிக்காட்டினார். இதைத்தொடர்ந்து விஜயகாந்தின் நினைவிடத்தில் மலர் தூவிய பிரேமலதா, அங்கேயே அவரை நினைத்து கதறி அழுதது குறிப்பிடத்தக்கது…
அடுத்த விக்கெட் செங்கோட்டையன்! ஸ்டாலினுக்கே 200 சீட்! ரவீந்திரன் துரைசாமி நேர்காணல்!
