வாட்ஸப் மூலம் குழந்தைகள் விற்பனை என பேரம் பேசி, கடத்தலில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டாா்.சென்னை புழல் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு பெண் ஒருவர் தொடர்பு கொண்டு தன்னிடம் பச்சிளம் குழந்தைகள் விற்பனைக்கு இருப்பதாக பேசி உள்ளார். இதனை அடிப்படை ஆதாரமாக வைத்து புழல் காவல் நிலையத்தில் கார்த்திக் என்பவர் புகார் அளித்த நிலையில், அந்தப் பெண் குறித்தான விவரங்களை போலீசார் சேகரித்து வந்துள்ளனர். இரண்டு நாட்களாக தேடி வந்த நிலையில், தற்போது அந்த கடத்தல் கும்பலை சோ்ந்த வித்யா என்ற பெண் புழல் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அம்பத்தூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று இரண்டு பெண் குழந்தைகளை மீட்டிருக்கின்றன. இந்த குழந்தைகள் குறித்து ஏற்கெனவே தகவல்கள் பகிர்ந்து வாட்ஸப் மூலமாக 12 லட்சம் வரை பேரம் பேசி விற்பனையில் இறங்கி உள்ளார். 12 லட்சத்தில் 2 லட்சம் ரூபாய் இடைத்தரகருக்கும் பத்து லட்ச ரூபாய் குழந்தைக்கான தொகை எனவும் விற்பனை நடத்தி வந்தது தெரிய வந்தது.
மேலும் அரசு மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தைகள் விற்பனைக்காக உள்ளதாக பேசி வாட்ஸ் அப்பில் தகவல்களை பகிர்ந்ததை அடிப்படையில் பேரம் பேசியது குறித்தும் குழந்தைகள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுவன் கடத்தல் வழக்கு… சிபிசிஐடியின் மெத்தனம்…உயர்நீதி மன்றம் அதிருப்தி
