spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஉங்கள் வாழ்க்கை ஒரு பாடம்..... ரஜினியை பாராட்டிய சங்கர்!

உங்கள் வாழ்க்கை ஒரு பாடம்….. ரஜினியை பாராட்டிய சங்கர்!

-

- Advertisement -

இயக்குனர் சங்கர், ரஜினியை பாராட்டியுள்ளார்.உங்கள் வாழ்க்கை ஒரு பாடம்..... ரஜினியை பாராட்டிய சங்கர்!சூப்பர் ஸ்டார் என்று கோடான கோடி ரசிகர்களால் அன்றும், இன்றும், என்றும் கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் இன்று (ஆகஸ்ட் 14) கூலி திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரஜினி ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். அதே சமயம் தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற திரைப் பிரபலங்களும் திரையரங்கிற்கு சென்று தலைவரை தரிசனம் செய்து வருகின்றனர். உங்கள் வாழ்க்கை ஒரு பாடம்..... ரஜினியை பாராட்டிய சங்கர்!இது ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் வருகிற ஆகஸ்ட் 15 (நாளையுடன்) நடிகர் ரஜினி திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இதற்காக மம்மூட்டி போன்றோர் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ரஜினியின் சிவாஜி, எந்திரன், 2.0 ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.உங்கள் வாழ்க்கை ஒரு பாடம்..... ரஜினியை பாராட்டிய சங்கர்! அந்த பதிவில், “அன்புள்ள ரஜினி சார், மூன்று முடிச்சு படத்தில் உங்களை முதன் முதலில் திரையில் பார்த்த தருணம், ஜானி படத்தின் படப்பிடிப்பின் போது நேரில் பார்த்த தருணம், ஒரு இயக்குனராக உங்களை சந்தித்து சிவாஜி, எந்திரன், 2.0 ஆகிய படங்களின் கதைகளை சொன்ன தருணம், இரண்டு வாரங்களுக்கு முன்பு உங்களை கடைசியாக பார்த்த தருணம் என கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக உங்களின் மீதான வியப்பு ஒரு கணம் கூட குறையாமல் இன்னும் தொடர்கிறது. ஒருவரின் நேர்மறையான சிந்தனை 50 அடி தூரம் வரை பரவக் கூடும்.

ஆனால் உங்களுடைய நேர்மறையான சிந்தனை உலகம் முழுவதையும் உள்ளடக்கியது. பண்பு, அடக்கம், மரியாதை, நேரமின்மை, கடின உழைப்பு, விடாமுயற்சி என உங்களுடைய வாழ்க்கை ஒரு பாடம் சார். ஒரு பொன்விழா இதற்கு முன்பாக இவ்வளவு பிரகாசமாக பிரகாசித்ததில்லை. கூலி மற்றும் படக்குழுவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அரங்கம் அதிரட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ