spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஎன்னுடைய நெக்ஸ்ட் டார்கெட் அந்த நடிகர் தான்.... லோகேஷ் கனகராஜ் ப்ளீச் பதில்!

என்னுடைய நெக்ஸ்ட் டார்கெட் அந்த நடிகர் தான்…. லோகேஷ் கனகராஜ் ப்ளீச் பதில்!

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கைதி திரைப்படத்தின் மூலம் பெயரையும் புகழையும் பெற்றார்.என்னுடைய நெக்ஸ்ட் டார்கெட் அந்த நடிகர் தான்.... லோகேஷ் கனகராஜ் ப்ளீச் பதில்! அதைத்தொடர்ந்து கமல்ஹாசன், விஜய் ஆகியோரை இயக்கும் வாய்ப்பை பயன்படுத்திய லோகேஷ் கனகராஜ் மீண்டும் மீண்டும் வெற்றி கண்டார். அடுத்தபடியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும் இயக்கியுள்ளார். அதன்படி லோகேஷ் – ரஜினி காம்போவில் உருவாகியிருந்த கூலி திரைப்படம் இன்று (ஆகஸ்ட் 14) உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கேரளா போன்ற மற்ற மாநிலங்களிலும் ரஜினி ரசிகர்கள் இந்த படத்தை திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். அதன்படி வெளிநாடுகளிலும் வெளி மாநிலங்களிலும் இப்படம் அதிகாலையில் திரையிடப்பட்டது. என்னுடைய நெக்ஸ்ட் டார்கெட் அந்த நடிகர் தான்.... லோகேஷ் கனகராஜ் ப்ளீச் பதில்!தமிழ்நாட்டில் காலை 9 மணி முதல் திரையிடப்பட்டது. சிவகார்த்திகேயன், தனுஷ், அஸ்வத் மாரிமுத்து, அனிருத் உள்ளிட்ட பல பிரபலங்கள் முதல் நாள் முதல் காட்சியை கண்டுகளித்தனர். அதேபோல் இப்டத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜும் குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் ரசிகர்களுடன் கூலி படத்தை கண்டு ரசித்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய லோகேஷ், “கூலி படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவு மகிழ்ச்சியாக இருக்கிறது. மற்ற திரையரங்குகளுக்கும் சென்று ரசிகர்களை சந்திக்க உள்ளேன்” என்று கூறினார். அதைத்தொடர்ந்து விஜய், கமல், ரஜினி போன்ற பெரிய ஹீரோக்களை வைத்து படம் பண்ண நீங்க, அஜித்துடன் எப்போ படம் பண்ணுவீங்க? என்று கேள்வி எழுப்பப்பட்டது. என்னுடைய நெக்ஸ்ட் டார்கெட் அந்த நடிகர் தான்.... லோகேஷ் கனகராஜ் ப்ளீச் பதில்!அதற்கு லோகேஷ், “எப்போது வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது நிச்சயமாக அவருடன் படம் பண்ணுவேன். அவருடன் படம் பண்ண வேண்டும் என்பது எனக்கும் ஆசையாக இருக்கிறது” என்று பதிலளித்துள்ளார். லோகேஷின் இந்த பதில் அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. ஆகையினால் லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே கமிட் ஆகி இருக்கும் கைதி 2, விக்ரம் 2, இரும்புக்கை மாயாவி ஆகிய படங்களை முடித்த பின்னர் விரைவில் அஜித்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ