உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் டிஜிட்டல் பார்மேட்டிலான தரவுகளை வழங்குவது இல்லை என்று தேர்தல் ஆணையம் உண்மைக்கு புறம்பான தகவலை உச்சநீதிமன்றத்தில் கூறுவதாக ஊடகவியலாளர் கரிகாலன் குற்றம்சாட்டியுள்ளார்.

பீகாரில் ராகுல்காந்தி நடத்தி வரும் வாக்குரிமை பேரணி குறித்தும், தேர்தல் ஆணையத்திற்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சிகளின் அடுத்த நகர்வுகள் குறித்தும் ஊடகவியலாளர் கரிகாலன் யூடியுப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் வீட்டை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராகுல்காந்தி கூறியுள்ள வாக்கு திருட்டு புகார்கள் தொடர்பாக ஞானேஸ்குமார் அளித்த பேட்டியே, அவர் எந்த அளவுக்கு பாஜகவின் ஏஜெண்ட் ஆக செயல்படுகிறார் என்பது வெளிப்பட்டு விட்டது. பாஜகவை காப்பாற்றுவதற்காக எந்த எல்லைக்கும் அவர் செல்வார் என்பதும் அந்த பேட்டியின் மூலம் வெளிப்பட்டுவிட்டது. பீகாரில் நேற்று 2வது நாளாக மக்கள் வாக்குரிமை பேரணி நடத்திய ராகுல்காந்தி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். குறிப்பாக பெங்களுரு மத்திய தொகுதிக்கு உட்பட்ட மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற முறைகேடுகளை அம்பலப்படுத்தியதற்காக தன்னை தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய சொல்கிறது. அதேவேளையில், பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் எதிர்க்கட்சி தலைவர்களின் தொகுதிகளில் முறைகேடு நடந்ததாக சொல்கிறார். ஆனால் அவரிடம் பிராமண பத்திரம் அளிக்க கூறாதது ஏன்?. அவரை மன்னிப்பு கேட்க சொல்லாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். பாஜகவுக்காக வேலை செய்கிற நபர்தான் ஞானேஷ்குமார் என்று மக்களிடம் அம்பலப்படுத்தி உள்ளார்.
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்துள்ள ஞானேஷ்குமாரின் வீட்டை, காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி உள்ளனர். தேர்தல் ஆணையர் ஒரு திருடன் என்கிற வாசம் எழுதிய பதாகைகளை ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தியுள்ளனர். பின்னர் போராட்டக்காரர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர். இந்நிகழ்வின் மூலம் மோடிக்கு வழங்கப்படுவது பாதுகாப்பு வழங்கினால்தான், அவர் சுதந்திரமாக நடமாட முடியும் என்கிற சூழல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூடி, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரின் செய்தியாளர் சந்திப்பு குறித்து விவாதித்துள்ளனர். அதில் ஞானேஷ்குமாரை பதவியில் இருந்து நீக்குவதற்கான மசோதாவை கொண்டுவர முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில், இந்தியா கூட்டணி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ராகுல்காந்தி வைத்த எந்த குற்றச்சாட்டுகளுக்கும், தேர்தல் ஆணையர் முறையாக பதில் அளிக்கவில்லை என்று அம்பலப்படுத்தி உள்ளனர்.
தேர்தல் ஆணையம் சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கு பூஜியம் என்ற வீட்டின் இலக்கம் வழங்கப்பட்டிருப்பதாக சொல்கிறார். SIR நடவடிக்கையில் குடியுரிமையை நிரூபிக்க கேட்கப்படும் 11 ஆவணங்களில் முக்கியமானது இருப்பிட சான்றிதழாகும். அப்போது வீடே இல்லாதவர்களிடம் எப்படி இருப்பிட சான்றிதழை பெற்றார்கள் என்கிற கேள்வி எழும். அதேபோல் 3 லட்சம் பேருக்கு தந்தையின் பெயர் என்கிற இடத்தில் A,B,C என்று போட்டிருக்கிறார்கள். அப்போது அவர்கள் அனைவருக்கும் தந்தை கிடையாதா? திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொய்த்ரா, 2024ல் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தத்தில் ஓராண்டில் 4 லட்சம் பேர் இறந்து விட்டதாக சொன்னீர்கள். ஆனால் 2025 ஜனவரி முதல் ஜுன் வரையிலான 6 மாத காலத்தில் 22 லட்சம் பேர் இறந்துவிட்டதாக சொல்வதாகவும், பல ஆண்டுகளாக இறந்தவர்களை கண்டுபிடித்து நீக்கியுள்ளதாகவும் சொல்கிறார்கள். இவர்கள் தானே ஏற்கனவே வாக்களித்து மோடி, நிதிஷ்குமாரை தேர்வு செய்தனர். அப்போது அவர்கள் வெற்றி பெற்றது எப்படி செல்லும்? அதனால் ஒன்றிய அரசை உடனடியாக கலைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
பீகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டைகளை காண்பித்து, தங்களுடைய வேதனையை வெளிப்படுத்தி உள்ளனர். SIR நடவடிக்கையே, எஸ்.சி., எஸ்.டி, ஓபிசியில் மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள சமூக மக்கள் பாஜகவுக்கு எதிராக வாக்களிக்கிறார்கள். எனவே அவர்களுடைய வாக்குரிமையை நீக்க வேண்டும். மறுபுறம் சிறுபான்மையினரின் வாக்குகளை பறிக்க வேண்டும் என்பதுதான் இவர்களின் நோக்கமாகும்.பீகாரில் வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் தேர்தலை திருடினாலும் பீகாரில் தேர்தல் திருட்டை நடக்க விடமாட்டோம். இந்தியா கூட்டணி தொடர்ந்து போராடும் என்று ராகுல்காந்தி திட்டவட்டமாக சொல்லிவிட்டார். ராகுல்காந்தி தன்னுடைய பெயர் ராகுல் சாவர்கர் அல்ல. ராகுல்காந்தி, தான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார். அந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் 2019ல் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், வாக்காளர்களின் தனி மனித சுதந்திரம் அல்லது தனி உரிமையை பாதுகாக்கும் விதமாக டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை இனி வெளியிட வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் தடை செய்தது. அதன் பிறகு மெஷினால் படிக்க முடியாததை பதிவுவேற்றுவதாக சொல்கிறார். மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் கமல்நாத், டிஜிட்டல் பார்மேட்டில் வாக்காளர் பட்டியலை வழங்கிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த வழக்கில் தேர்தல் ஆணையம், வாக்காளர்களின் தனி மனித சுதந்திரம், தனி உரிமையை தாங்கள் பாதுகாக்க வேண்டும். எனவே மெஷின் ரீடபிள் டேட்டாவை தர மாட்டாம். அப்படி வழங்கினால் அவர்களுடைய தரவுகள் திருடப்படும். அவர்களின் தனியுரிமை பாதிக்கப்படும் என்று வாதிட்டது. உச்சநீதிமன்றம் இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போது, உச்சநீதிமன்றம் பிறப்பிக்காத உத்தரவை, அவர்கள் போட்டதால்தான் ஒத்திவைத்திருக்கிறோம் என்று தேர்தல் ஆணையர் சொல்கிறார்.
ராகுல்காந்தி இந்த போராட்டத்தை கையில் எடுத்த உடன், அவர்கள் கடுமையான அச்சத்தில் உறைந்துள்ளனர். மிரட்டி பணிய வைக்கலாம் என்று நினைத்தார்கள். ஆனால் ராகுல்காந்தி அடங்கவில்லை. பீகாரில் நடைபெறுவது போல நாடு முழுவதும் மக்களை திரட்டி போராடினால், ஞானேஷ்குமார், மோடி போன்றவர்களை அடக்கவும், சிறைபிடிக்கவும் முடியும். இல்லாவிட்டால், அனைத்து துறைகளையும் கையில் வைத்துக்கொண்டு போராடுபவர்களை எப்படி நசுக்கலாம் என்றுதான் நினைப்பார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.