spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்பதவி நீக்க மசோதா கூட்டு குழுவுக்கு அனுப்பிவைப்பு

பதவி நீக்க மசோதா கூட்டு குழுவுக்கு அனுப்பிவைப்பு

-

- Advertisement -

பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் பதவி நீக்க மசோதா எதிர்கட்சிகளின் எதிர்பிற்கு பின் நாடாளுமன்றக் கூட்டு குழுவிற்கு அனுப்பப்படும் என அமித் ஷா குறிப்பிட்டுள்ளாா்.பதவி நீக்க மசோதா கூட்டு குழுவுக்கு அனுப்பிவைப்பு

பிரதமர், மத்திய அமைச்சர்கள் முதல்வர்கள் 30 நாள்குளுக்கு சிறையில் இருந்தால் அவர்களின் பதவியை பறிக்கும் வகையில் புதிய மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தாக்கல் செய்தார். இந்த மசோதாவின்படி ஒருவர் 30 நாட்களுக்கு சிறையில் இருந்தால் 31வது நாளில் அவர்களுடைய பதவி தானாகவே ரத்து செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளது. இந்த மசோதா தாக்கலின் போது ஆளும் பாஜக எம்.பி.க்கள் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடையே கடுமையான விவாதம் நடைபெற்றது.

we-r-hiring

ஜனாதிபதி, கவர்னருக்கு பதவியை பறிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்த நிலையில், இது மக்களால் தேர்ந்தெடுக்ப்பட்டவர்களின் பதவியை பறிக்கும்  பாஜகவின் திட்டம் என எதிர்க்கட்சிகள் லோக்சபாவில் மசோதவின் நகல்களை கிழித்து எறித்து அமளியில் ஈடுபட்டனர்.  இதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்களான அசாதுதீன் ஓவைசி, மணீஷ் திவாரி, என்.கே. பிரேம்சந்திரன், தர்மேந்திர யாதவ் மற்றும் கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் அவையில் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கருத்துக்களை பதவு செய்தனர். இந்த நிலையில் பதவி நீக்க மசோதா நாடாளுமன்ற கூட்டு குழுவுக்கு அனுப்பப்படும் என அமித்ஷா குறிப்பிட்டுள்ளாா்.

சுதர்சன் ரெட்டி தெலுங்கர் என்பதற்காக ஆதரிப்பார்களா? – செல்வபெருந்தகை கேள்வி

MUST READ