ரஜினி பட நடிகை சன்னி லியோன் கேரக்டரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ‘காவாலா’ பாடலுக்கு நடனமாடி இருந்தவர் நடிகை தமன்னா. இவர், ஜெயிலர் படத்தில் சிறிய ரோலில் மட்டுமே நடித்திருந்தாலும் இவருடைய ‘காவாலா’ பாடல் பட்டி தொட்டி எங்கிலும் ஹிட் அடித்தது. மேலும் ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக்கு இந்தப் பாடலும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது என்றே சொல்லலாம். எனவே அடுத்தது ரஜினி நடித்து வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் உறுதியான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவிலேயே முன்னணி நடிகையாக வலம் வந்த தமன்னாவிற்கு தற்போது மார்க்கெட் குறைந்து விட்டதால் ஒரு சில படங்களில் மட்டுமே நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. அந்த வகையில் தமன்னா, அரண்மனை 4, ஒடேலா 2, ஸ்ட்ரீ 2 ஆகிய படங்களில் நடித்திருந்தார். இது தவிர ரெய்டு 2 படத்தில் பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ளார். இந்நிலையில் தமன்னா, சன்னி லியோன் கேரக்டரில் நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது சன்னி லியோன் நடித்த ராகினி MMS எனும் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் கடந்த 2014ல் வெளியான நிலையில், அடுத்தது இதன் மூன்றாம் பாகம் உருவாக இருக்கிறதாம். அந்த படத்தில் தான் நடிகை தமன்னா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை காமெடி கலந்த ஹாரர் ஜானரில் எடுக்க இருப்பதாக இப்படத்தின் இயக்குனர் ஏக்தா கபூர் திட்டமிட்டுள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.