விதார்த்தின் புதிய படமான ‘‘வைபர்’’ டைட்டில் லுக் நடிகர் விஜய சேதுபது வெளியிட்டார்!
கிரினேடிவ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். எம்.ராகேஷ் பாபு தயாரிப்பில் நடிகர் விதார்த் நடித்து வருகிறார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் மணிமாறன் நடராசன் இயக்கி வருகிறார். “கண்ணாடி விரியன் பாம்பின் தன்மையையும், பண்பையும் கொண்டவர் தான் கதையின் நாயகன் என்பதால் வைப்பர் என திரைப்படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது” என இயக்குநர் மணிமாறன் நடராசன் கூறுகிறார்.


வணங்கான் படத்தில் நடிக்கும் ரோஷினி பிரகாஷ், இந்த படத்தில் நாயகியாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார். ஏற்கனவே இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்து, இறுதிகட்ட படபிடிப்புக்கு தயாராகிக் கொண்டு இருக்கும் நிலையில் படத்தின் டைட்டில் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டிருக்கிறார். படத்திற்கு ‘வைப்பர்’ என பெயரிடப்பட்டுள்ளது.


