புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் – தொடர்புடையவர்களை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனப் பொதுச் செயலாளர் TTV தினகரன் கூறியுள்ளாா்.
மேலும், இதுகுறித்து வலைத்தளப்பக்கத்தில் அவா் கூறியிருப்பதாவது, ”சென்னை காவல்துறை தலைமையக வாயிலில் வைத்தே புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தியின் மீது சிலர் தாக்குதல் நடத்தியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. ஏர்போர்ட் மூர்த்தியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தடுத்து நிறுத்தவோ, தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யவோ எந்தவித முயற்சியையும் மேற்கொள்ளாமல், அங்கு காவல் பணியில் இருந்த காவலர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது கடும் கண்டனத்திற்குரியது. காவல்துறையின் தலைமையகம் முன்பாகவே நடைபெற்றிருக்கும் இந்த தாக்குதல் சம்பவம், தமிழகத்தின் ஒட்டுமொத்த காவல்துறைக்குமான அவமானமாகவே பார்க்க வேண்டியுள்ளது. எனவே, ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்தியவர்கள் அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனி இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் நடைபெறாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்” என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனப் பொதுச் செயலாளர் TTV தினகரன் கூறியுள்ளாா்.
39 தங்கப்பதக்கம், 6,581 இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி மாணவர்கள் பட்டங்கள்… அமைச்சர் வழங்கி சிறப்புரை…
