திராவிட மாடல் அரசால் செங்கம் நகரம் வளர்ச்சி பாதை நோக்கி செல்வதாக மு.பெ.கிரி எம்எல்ஏ பேசினார். செங்கம் நகர திமுக சார்பில் செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி தலைமையில் 18 வார்டு கழக செயலாளர்கள், 22 பூத் கமிட்டி பாக முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி டிஜிட்டல் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.நகர செயலாளர் அன்பழகன், நகராட்சி தலைவர் சாதிக்பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் செங்கம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் மாலதி நாராயணசாமி கலந்துகொண்டு பேசுகையில், “எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சியில் அமர வைத்து தமிழ்நாட்டைப் பாதுகாக்க நம் அனைவரும் ஒன்று இணைந்து பணியாற்ற வேண்டும்“ என்றார்.

தொடர்ந்து மு.பெ.கிரி எம்எல்ஏ பேசியதாவது: செங்கம் நகரில் 10 ஆண்டு காலமாக அதிமுக அரசு ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பொழுது செங்கம் நகர மக்களுக்கு எந்த ஒரு திட்டமும் கொண்டு வரவில்லை. இந்த நிலையில் செங்கம் நகரம் கிருஷ்ணாபுரம் முதல் ஆனைமங்கலம் வரை திராவிட மாடல் அரசு நகரப் பகுதிகளில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தி செயல்படுத்தி உள்ளது. மேலும் செங்கம் வட்டாட்சியர் அலுவலகம், புதிய பள்ளி கட்டிடங்கள், மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடங்கள் என புதிய கட்டடங்களை அமைத்து செங்கம் பகுதி மக்களுக்கு வசதி ஏற்படுத்தியது திராவிட மாடல் அரசு.
பத்தாண்டு காலமாக நடைபெறாத திட்டங்கள் அனைத்தும் தற்போது நிறைவேற்றப்பட்டு வருகிறது. செங்கம் நகரப் பகுதியில் போக்குவரத்து இடையூறாக உள்ள செங்கம் போளூர் சாலைக்கு நகரின் வெளிப்பகுதியாக புறவழிச் சாலை அமைக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது. செங்கம் நகரம் பத்தாண்டுகளாக பின்தங்கியே இருந்தது ஆனால் திராவிட மாடல் அரசு அமைந்த உடன் செங்கம் நகரம் தற்பொழுது வளர்ச்சி பாதை நோக்கி செல்கிறது என்று பேசினார். நிகழ்ச்சியில் நகர செயலாளர் அன்பழகன், நகர மன்ற தலைவர் சாதிக் பாஷா, செங்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், முன்னாள் நகர செயலாளர் சதானந்தம், நகர நிர்வாகிகள் முருகன், முத்துகிருஷ்ணன், செந்தில்குமார், சீனிவாசன், மணி (எ) பெரியதுரை, பழகடை பாலு, மாவட்ட நிர்வாகிகள் வில்சன் ரஜினிகாந்த், ஸ்ரீதர், அப்துல்வாகித், நகர மன்ற உறுப்பினர்கள் சந்தியா, இந்திரா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்தியாவில் முதல்முறை – அண்ணாசாலையில் நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை… என்னென்ன அம்சங்கள்?