spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஇந்தியாவில் முதல்முறை - அண்ணாசாலையில் நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை… என்னென்ன அம்சங்கள்?

இந்தியாவில் முதல்முறை – அண்ணாசாலையில் நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை… என்னென்ன அம்சங்கள்?

-

- Advertisement -

இந்திய அளவில் முதல் முறையாக பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை இடையே ரூபாய் 621 கோடி மதிப்பிட்டில் அமைக்கப்படும் உயர்மட்ட மேம்பாலம் பணிகள் நடைப்பெற்று வருகிறது.இந்தியாவில் முதல்முறை - அண்ணாசாலையில் நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை… என்னென்ன அம்சங்கள்?

மெட்ரோ சுரங்கங்களுக்கும் மேலே நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தேனாம்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை வரை 621 கோடி ரூபாய் மதிப்பிட்டில் அமைக்கப்படும் உயர்மட்ட மேம்பாலம், எந்த மாதிரியான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எவ்வாறு அமைக்கிறார்கள் என்பது குறித்து விவரிக்கிறது செய்தி தொகுப்பு.

we-r-hiring

சென்னையின் பழமையான சாலையாக இருக்கும் அண்ணா சாலையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. தேனாம்பேட்டை இருந்து  சைதாப்பேட்டை வரை உள்ள 3.50 கி.மீட்டர் சாலையை வாகனங்களில்  காலை, மாலை பணிக்குச் செல்லும் நேரங்களில் கடப்பதற்கு 25 முதல் 30 நிமிடங்கள் ஆகிறது.  இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலையும், பயண நேரத்தையும் குறைக்க கூடிய வகையில் நான்கு வழித்தட உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என்று  கடந்த 2023 ஆம் ஆண்டுக்கான நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் மானிய கோரிக்கையின் போது சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதை தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 3.20 கிலோமீட்டர் தூரத்திற்கு 4 வழி உயர் மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி ரூபாய் 621 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது.

இந்திய அளவில், நிலப்பரப்பிற்கு கீழே பயன்பாட்டில் உள்ள மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை ஓடுதளத்திற்கு (Under Ground Metro Tunnel) மேலே கட்டப்படும் முதல் சாலை மேம்பாலம்  இதுவாகும். இந்த மேம்பாலத்தை வடிவமைப்பது பெரும் சவாலாகவே இருந்தது. இப்பாலத்திலிருந்து வரும் அழுத்தம் சாலையின் கீழே தற்போது இயங்கி வரும் சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைகளை சிறிதளவும் பாதிக்காத வண்ணம் வடிவமைக்க வேண்டி இருந்தது. மேலும் பாலத்தின் அடித்தளம் அமைக்க ஆழமான பள்ளங்களை மற்றும் நீண்ட துளைகளை (piling technique) எடுக்க முடியாத சூழலும் இருந்தது.

எனவே ஆழம் குறைந்த அடித்தளம் (shallow Foundation) மட்டுமே அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், இப்பகுதியில் மண்ணின் தாங்கும் திறன் குறைந்த அளவே உள்ளதால், ஆழம் குறைந்த அடித்தளம் கொண்டு வடிவமைப்பது சாத்தியமற்றது. இதற்கு தீர்வு காண பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

குறிப்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன வல்லுநர்கள், ஐஐடி மெட்ராஸ் வல்லுநர்கள் மற்றும் இங்கிலாந்து, ஜெர்மன் நாட்டு தொழில் நுட்ப நிபுணர்கள் ஆகியோருடன் கலந்தாலோசித்து இந்த உயர்மட்ட சாலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு பாலத்தின் அழுத்தத்தை குறைக்கும் வகையில் இரும்பினால் ஆன முன்வார்க்கப்பட்ட (prefabricated) கட்டமைப்பு உபகரணங்களைக் கொண்டும், மண்ணின் தாங்கு திறனை நவீன தொழில்நுட்பத்தை கொண்டு மேம்படுத்தி அடித்தளம் அமைக்கும் வகையிலும், வடிவமைக்கப்பட்டு கட்டுமான பணிகளை மேற்கொள்ள இறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து உயர் மட்ட பாலம் அமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

தேனாம்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை வரை உள்ள முக்கிய சாலை சந்திப்புகளான எல்டாம்ஸ் சாலை சந்திப்பு, SIET கல்லூரி சாலை சந்திப்பு, செனடாப் சாலை சந்திப்பு, நந்தனம் சந்திப்பு, CIT நகர் மூன்றாவது மற்றும் முதல் பிரதான சாலை சந்திப்பு, சைதாப்பேட்டையிலுள்ள தாடண்டர் நகர், ஜோன்ஸ் சாலை சந்திப்பு ஆகிய 7 முக்கிய சாலை சந்திப்புகளை இந்த பாலம் கடக்கும்.

3.2 கி.மீ உயர்மட்ட சாலையில் 135 தூண்கள் அமைக்கப்பட உள்ளது. மெட்ரோ இரயில் சுரங்கப்பாதை அல்லாத இடங்களில் 655 மீட்டர் நீளத்திற்கு 22 தூண்கள் அமையும் தற்போது இவ்விடத்தில் நிலத்தூண் அடித்தளம் (Pile Foundation) பணி நடைபெற்று வருகிறது.

மெட்ரோ இரயில் சுரங்கப்பாதை உள்ள இடங்களில் 1955 மீட்டர் நீளத்திற்கு 69 தூண்கள் அமைக்கப்பட வேண்டும் பாலத்தின் அழுத்த திறனை குறைக்கும் வகையில் மைக்ரோ பைல் என்ற புதிய தொழில்நுட்ப முறையில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் 460 மீட்டர் நீளத்திற்கு தோனம்பேட்டை மற்றும்  நந்தனம்  மெட்ரோ நிலையங்களில் 41 போர்டல் ப்ரேம் (Portal frame) அதாவது ப வடிவில் தலைகீழாக வைத்தது போல அமைக்கப்படுகிறது. இந்தியாவிலேயே முதல் முறையாக பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த உயர் மட்ட பாலம் அமைக்கப்படுவதால் மூன்றாவது ஆடிட் என்ற முறையில் கண்காணிப்பு அவசியம் என்றும் பொறியாளர் ராமநாதன் தெரிவிக்கிறார்.

திரில்லர் படத்தை இயக்கும் ‘மெய்யழகன்’ பட இயக்குனர்…. ஹீரோ யார் தெரியுமா?

MUST READ