மாதுளை முடி உதிர்வை குறைக்க பயன்படுகிறது.
மாதுளை என்பது சத்துக்கள் நிறைந்த ஒரு பழ வகை. இது முடி உதிர்வை குறைக்கவும், முடி வேர் வலுவடையும் உதவுகிறது. மாதுளையில் வைட்டமின் சி போன்ற ஆண்டி ஆக்சிடென்ட்கள் இருக்கிறது. இது தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து முடியின் வேர் வரை சத்துக்கள் செல்ல உதவுகிறது. அதே சமயம் முடியின் வேரின் ஏற்படும் சேதத்தை தடுக்கவும் பயன்படுகிறது. இது தவிர வைட்டமின் கே, வைட்டமின் இ, வைட்டமின் பி போன்றவை நிறைந்துள்ளது. மேலும் இதில் இரும்பு சத்து அதிகம் இருப்பதால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து தலையில் ஆரோக்கியமான ரத்த ஓட்டம் கிடைக்க உதவி புரிகிறது. இதன் காரணமாக முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

மேலும் மாதுளை, முடி உதிர்வுக்கு காரணமாகும் ஹார்மோன்கள் அதிகரிப்பதை தடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே ஆண்கள், பெண்கள் இருபாலரும் மாதுளையை பயன்படுத்தினால் முடி உதிர்வை கட்டுப்படுத்தலாம்.
பயன்படுத்தும் முறை:
1. தினமும் மாதுளையை அதன் விதையுடன் சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கும். சர்க்கரை இல்லாமல் மாதுளை ஜூஸாகவும் குடிக்கலாம். இவ்வாறு தினமும் மாதுளையை எடுத்துக் கொண்டால் ஹீமோகுளோபின் அதிகரிக்கும். ஹார்மோன்களையும் சமநிலையாக வைத்திருக்க உதவும்.
2. மாதுளை விதையிலிருந்து எண்ணெய் எடுத்து அதை தலையில் தேய்த்து வர முடியின் வேர் வலுவாகி முடி உதிர்வு கட்டுப்படும்.
3. மாதுளையின் தோல் எடுத்து அதனை காய வைத்து பொடி செய்து, தயிர் அல்லது கற்றாழை ஜெல் சேர்த்து ஹேர் மாஸ்க் போலவும் பயன்படுத்தலாம். இதனால் பொடுகு தொல்லை, அரிப்பு குறையும்.
மேலே குறிப்பிட்ட முறைகள் ரத்த சோகை உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோர்களுக்கு நல்ல பலன் கொடுக்கும். பிரசவத்திற்கு பின்னர் முடி உதிர்வு பிரச்சினைகளை சமாளிக்கும் பெண்களும் இம்முறைகளை பின்பற்றலாம். இருப்பினும் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.


