ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா சங்கரின் நினைவுகள்

தென்னிந்திய பொழுதுபோக்கு உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கியவர் பிரியங்கா சங்கர். அவரது உற்சாகமான நம்பிக்கை, கலைப் பயணம் ஆகியவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. சமூக வலைதளங்களிலும் அவருக்கு 2.4 லட்சத்திற்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் உள்ளனர். அங்கு தனது வழ்க்கை அனுபவங்களில் இருந்து பார்வையை, வாழ்வின் முக்கிய தருணங்களை, நடனத்தின் மீது தனக்கு இருக்கும் ஆர்வத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.
பிரியங்கா ஒரு பாசமிகு பாட்டியும் கூட. இந்த ஆண்டின் தொடக்கத்தில், தனது பேரனின் பெயரை கையில் பாசமாக பச்சை குத்திய போது, அது அவரது ரசிகர்களின் இதயங்களை வென்றது.
22 ஆண்டுகள் இணைந்த வாழ்வு
ரோபோ சங்கரும், பிரியங்கா சங்கரும் இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்தனர். 22 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்ட இவர்கள், காலம் செல்லச் செல்ல மேலும் நெருக்கமான பந்தத்தை உருவாக்கினர்.
இவர்களின் மகளான இந்திரஜா சங்கர் பின்னர் சினிமா துறைக்கு வந்தார். தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் தாயானதும், தனது கணவருடன் சேர்ந்து கிருஷ்ண ஜெயந்தியை தனது குழந்தையுடன் கொண்டாடியதும் குடும்பத்திற்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது.
கணவருக்காக எழுதிய உருகும் வார்த்தைகள்
தங்களின் 22-வது திருமண நாளில், கணவருக்காக பிரியங்கா சங்கர் மனதை உருக்கும் பதிவு ஒன்றை எழுதியிருந்தார். அந்த பதிவு இன்று இன்னும் அதிக அர்த்தம் பெறுகின்றன. அவர் காதலர் தினத்திலும் கணவருக்கான அன்பை வெளிப்படுத்தி மற்றொரு கடிதத்தை எழுதியிருந்தார். அதில், “அவர் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியாது” எனக் குறிப்பிட்டிருந்தார்.
திருமணநாளில் அவர் எழுதிய ஒரு பதிவில், “என் ஒரே ஆசை – இனி வரும் நாட்களையும் உன் கையை பிடித்தபடி செலவிட வேண்டும். இனிய 22வது ஆண்டு திருமண நாளுக்கு வாழ்த்துகள் என் அன்பே சங்கரம்ம்ம்ம்ம்மா” என உருக்கமாக எழுதியிருந்தார்.
கடைசி தருணங்களிலும் துணை நின்ற மனைவி
சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ரோபோ சங்கர், இந்த ஆண்டு மஞ்சள் காமாலை நோயிலிருந்து மீண்டிருந்தார். சமீபத்தில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரேபோ சங்கருக்கு, சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
பின்னர் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார். ஆனால், மருத்துவர்கள் அவரது உயிரை காப்பாற்ற முயன்றபோதிலும், சிகிச்சை பலனின்றி ரோபோ சங்கர் உயிரிழந்தார். இந்த திடீர் பிரிவு, குடும்பத்தினரையும், அவரது நண்பர்களையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.